அப்பத்தா பேரன்,
Adidas போட்டு போறேன்!
விறுவிறுப்பா போயி
வித்தை காட்ட போறேன்!
மேய்ச்சலுக்கு நிலம் கேட்டு
மேக்கப் போட்டு போறேன்!
பொழுதன்னைக்கும் வாய வித்து
யாவாரம் பாத்தேன்,
அரசியல் யாவாரம் பாத்தேன்,
பெரியார தொட்ட பின்னே
அடையாளம் தெரியாம தோத்தேன்,
நாட்டுக்குள்ள உருட்னதெல்லாம்
நட்டுகிட்டு போச்சி…
இனி மாடு, மரம்முன்னு பேசி
காட்டுக்குள்ள கைவீசி
போற புது ரூட்டுதான்,
கொஞ்சம் ஈசி
விஜயலட்சுமி பத்தாதுனு
விஜய் வேற வந்து நிக்க,
எல்லா பக்கமும் கேட் போட்டா
எங்க தான் போயி நிப்பேன்!
காட்டுப்பக்கம்
மாட்ட மேயவுட்டு
திரள்நிதிய தேத்திக்கிட்டு
புள்ளைக்கு பீஸ் கட்டுன்னு
கெலம்பிட்டேன் சட்டுனு…
அப்பத்தா பேரன்
Adidas போட்டு போறேன்….
அரசியலில் அனாதையாய்
அழிஞ்சி தான் போகப் போறேன்…
- செல்வா






