நிதி நெருக்கடியிலிருந்து அரசு போக்குவரத்து கழகங்களை மீட்க பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு அனுமதி அளிக்கவேண்டும்.
தஞ்சையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
வருவாயை மட்டும் பார்க்காமல்
மக்களுக்கு சேவை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டுவருகின்றன. அரசு அறிவிக்கும் அனைத்து மக்கள்நலத் திட்டங்களையும் முழுமையாக போக்குவரத்துக் கழகங்கள் நிறைவேற்றி வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் சுமார் இருபத்து ஓராயிரம் பேருந்துகள் உள்ள நிலையில் தற்போது பதினைந்தாயிரம் பேருந்துகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. சுமார் தொன்னூறுலட்சம் லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் அரசு போக்குவரத்து கழகத்தால் பயன்படுத்தப்படுகிறது.
பெட்ரோல் ,டீசல் விலை உயர்வினால் போக்குவரத்துக் கழகங்களுக்கு நாளுக்கு நாள் பற்றாக்குறை என்பது அதிகரித்து வருகிறது. இதை ஈடுகட்டும் வகையில் போக்குவரத்து கழகங்களுக்கு அடக்க விலையில் டீசல், பெட்ரோல் பொருட்கள் பெற ஏற்பாடு செய்யவேண்டும். எழுபதுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் பெட்ரொல் டீசல் சேமிப்பு கட்டுமான அடித்தளம் உள்ளதை பயன் படுத்தியும் மேலும் விரிவு படுத்தியும் அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் பொது மக்களுக்கு தரமான பெட்ரோல்-டீசல் விற்பனை செய்திட வழிவகை செய்வதுமூலம் வருவாய் ஈட்டமுடியும். முப்பது ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டுவந்த “பார்சல் சர்வீஸ்” ஐ தொடங்கிட அனுமதி அளித்தால் வருமானம் ஈட்டமுடியும். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெட்ரொல் டீசல் விற்பனை நிலையம் அமைக்க தமிழ்நாடு நடவடிக்கை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசு அதற்கான அனுமதிதர வலியுறுத்தியும் தஞ்சை இரயிலடியில் 04-08-2021 அன்று காலை 10.00 மணிக்கு அரசு போக்குவரத்து அணைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் “கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.
ஏஐடியூசி போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி, போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி. அப்பாத்துரை ஆகியோர் கூட்டுத்தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழக நிர்வாகிகள் மல்லி. தியாகராஜன், கண்காணிப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை கும்பகோணம்-நாகை மண்டல தொழிளாளர் முன்னெற்ற சங்க பொதுச் செயலாளர் சு.பாண்டியன் துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.
ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் நிறைவு சிறப்புரை ஆற்றினார்
ஆர்ப்பாட்டத்தினை வாழ்த்தி
வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் இராவணன்,
ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ. சேவையா,
ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன்,
கட்டுமான சங்க தலைவர் பி.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஏஐடியூசி போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன்,
சிஐடியூ போக்குவரத்து சங்கதலைவர் ஜி.மணிமாறன்,
ஐஎன்டியூசிமாவட்ட தலைவர் அ.ரவிச்சந்திரன்,
எச்எம்எஸ் பொதுச் செயலாளர் ஜி.முருகேசன்,
எம்எல்எப் பொதுச் செயலாளர் எஸ்.பாலு,
அறிவன் அம்பேத்கர் போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் எம்.மதியழகன்,
தொமுச துணை பொதுச் செயலாளர் ஆர்.ஜெயச்சந்திரன்,
அரசு விரைவு போக்குவரத்து கழக தொமுச கிளைச் செயலாளர் டி. ராஜேந்திரன் ,
சிஐடியூ போக்குவரத்து சங்க தலைவர் எஸ். செங்குட்டுவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.
போக்குவரத்து சங்க நிர்வாகிகள் என்.சேகர்,
எஸ்.தாமரைச்செல்வன்,
எம்.பி இளங்கோவன்,
டி. சந்திரன்,
என்.ஆர்.செல்வராஜ்,
சி.ராஜமன்னார்,
ஆர்.ரங்கதுரை
மற்றும் ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள்
நவநீதம்,
உதயகுமார்,
முத்துச்செல்வி சேகர்,
லதா பார்த்திபன்,
சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து சங்க தலைவர் ஜி.சண்முகம் நன்றியுரையாற்றினார்.
தஞ்சையில் பேருந்து நிலையப் பணிகள் முடிந்து விட்டதால் திறப்பதற்கான தேதியை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடியாக அறிவிக்க வேண்டும்,
நாள்தோறும் சுமார் 450 தொழிலாளர்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பணிபுரியும் நிலையில் குளியலறை, கழிவறையுடன் கூடிய போக்குவரத்து பணியாளர்கள் ஓய்வறை ஒதுக்கப்பட வேண்டும்,
போக்குவரத்து கழகங்களின் சீரழிவுக்குள்ளான நிதி நிலைமையை உணர்ந்து போக்குவரத்துக் கழகங்களுக்கு உரியநிதியை போர்க்கால அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும், நடைபெறுகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் போக்குவரத்துத் துறைக்கு என்று பொதுவாக நிதியை அறிவிக்காமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தனியாக நிதியினை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.






