கேரள மாநிலம் கோட்டயம் தம்பலக்காடு பகுதியைச் சேர்ந்த அனந்து அஜி என்பவர் திருவனந்தபுரத்தில் கடந்த 9 ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவர் இந்த முடிவை எடுக்கும் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தற்கொலைக்கான காரணத்தை பதிவு செய்து செட்யூல்டு செய்து வைத்துள்ளார். அந்த பதிவு இன்றும் அவர் இன்ஸ்டா பக்கத்தில் அப்படியே உள்ளது.
தனது தற்கொலைக்கான காரணத்தை பின்வருமாறு விவரித்துள்ளார்: “என்னால் இன்னும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. நான் எதிர்கொண்ட அதிர்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ் மட்டுமே காரணம். நான்கு வயது முதல் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். இது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. கடந்த ஓராண்டாக நான் சிகிச்சையில் இருந்தேன். ஆறு மாதங்களாக மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியவில்லை. பல வருடங்களாக நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் வேலை செய்தேன். அதுபோன்று வெறுக்கத்தக்க வேறு அமைப்புகள் இல்லை. வாழ்க்கையில் ஒரு போதும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரை உங்கள் நண்பனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அது தந்தையாக இருந்தாலும் சரி, மகனாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும் சரி அவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி வைத்து விடுங்கள். அவ்வளவு விஷம் கொண்டு நடக்கக் கூடியவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்.
அந்த நபருடைய பெயர் எனக்கு ஞாபகம் இல்லை. அவரால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஐ.டி.சி, ஓ.டி.சி முகாம்களில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். உடல் ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானேன். காரணம் இல்லாமல் அடித்தார்கள். எனக்கு மட்டுமல்ல பலரும் இதுபோன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் சித்திரவதைக்கு உள்ளாகி உள்ளனர். இப்போதும் ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பலருக்கும் இதுபோன்று நடக்கின்றன. அவர்களை அந்த அமைப்பிலிருந்து காப்பாற்றி கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.
நான் மனரீதியாக எவ்வளவு கஷ்டப்படுகிறேன் எனத் தெரியுமா. கையில் ஆதாரம் இல்லாததால் இதை வெளியே சொன்னால் நம்ப மாட்டார்கள். அதனால்தான் எனது உயிரை ஆதாரமாக அளிக்கிறேன். எனக்கு ஏற்பட்டதுபோன்று உலகத்தில் ஒரு குழந்தைக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்படக்கூடாது. குழந்தைகளுக்கு தாய், தந்தையர் கட்டாயமாக பாலியல் கல்வி அளிக்க வேண்டும். குட் டச், பேட் டச் குறித்து விளக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்களிடம் கோபப்படக்கூடாது. என்னை மோசமாக பயன்படுத்தியவர்களைப் போன்றவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். பயம் காரணமாக வெளியே சொல்லமாட்டார்கள். நானும் பயத்தின் காரணமாகத்தான் பெற்றோரிடம் கூட சொல்லவில்லை.”
அனந்து அஜியின் கடித லிங்க்: https://drive.google.com/file/d/14ksKEmSKpNSZtj4cTz_HoHr3es0_VDwp/view?usp=sharing
ஆர்.எஸ்.எஸ். மதவெறி பிடித்த கொலைகார கும்பல் என்பதை நாம் அறிவோம். சிறுபான்மையின, தலித் பெண்கள் மீது. அவர்கள் நடத்திய பாலியல் வெறியாட்டங்களை நாம் அறிவோம். அதேநேரத்தில் அனந்துவின் மரண வாக்குமூலத்தை படிக்கும் பொழுது எவ்வளவு கேவலமான இழி பிறவிகளை கொண்ட அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. இந்த மதவெறி அமைப்பை தான் மனிதநேய அமைப்பு என்று பிரபலப்படுத்துகிறது சங்பரிவார் கும்பல்.
இந்தியா முழுவதும் சிறுவர் சிறுமிகளை இணைத்து தனது செல்வாக்கு நிறைந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஷாகாக்களை நடத்தி ‘ஒழுக்கம்’ கற்று தந்து வருகிறது ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் எனும் ஆர்எஸ்எஸ். இந்த ஆர்எஸ்எஸ் தான் நூற்றாண்டு கண்ட இயக்கம் என இந்திய பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டு சிறப்பு தபால் தலைகளும் நாணயமும் வெளியிடப்பட்டது.
இந்திய வரலாற்றில் ரத்தக்கரை படிந்த மிகப்பெரும் கொலைகார இயக்கம் என்றால் அது ஆர்எஸ்எஸ் தான். இந்த அமைப்பில் தான் ஏதோ ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்கிறார்கள் என்றும் இந்து மதத்தை பாதுகாக்கும் பாரம்பரிய இயக்கம் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிறுவயதிலேயே ஆர்எஸ்எஸில் சேர்க்கிறார்கள்.
அப்படி தனது பெற்றோரால் நான்கு வயதில் சேர்க்கப்பட்டவர் தான் தற்கொலை செய்து கொண்ட அனந்து அஜி என்பவர். தான் சிறுவயதில் பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல் அவருக்கு மன ரீதியான மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல வருடங்கள் கடந்தாலும் அதிலிருந்து மீள முடியாமல்தான் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அம்மாநிலத்தில் தான் ஆர் எஸ் எஸ் தீவிரமாக செயல்படுகிறது. கேரள மாநிலம் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தினசரி ஷாகாக்களை கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அனந்து அஜி தனது கடிதத்தில் தான் மனரீதியாக மிகுந்த துன்பத்தை எதிர்கொண்டதாகவும் கையில் ஆதாரமில்லாததால் வெளியே சொன்னால் நம்ப மாட்டார்கள், அதனால் எனது உயிரை ஆதரமாக அளிக்கிறேன் என அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். அனந்து சுஜி நன்கு படித்த மென்பொறியாளர் மட்டுமல்ல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தும் வந்துள்ளார்.
படிக்க: பாலியல் ஜல்சா கட்சிக்கு எதிராக களத்தில் இறங்கிய இந்திய மல்யுத்த வீராங்கனைகள்!
ஒருவேளை உயிரோடு இருந்து இந்த விஷயத்தை வெளியில் கொண்டுவர முயற்சி செய்திருந்தால் தன்னை கொன்றிருப்பார்கள் என அறிந்திருக்கிறார். இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது பாஜக அல்ல ஆர் எஸ் எஸ் காவி பாசிச கும்பல் என்பதை உணர்ந்து இந்த முடிவு எடுத்திருக்கிறார். தன்னை போல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ் மிக மோசமான இயக்கம் என்றும் அதில் இருப்பவர்களுடன் விலகியே இருங்கள் என்றும் அவர் கொடுத்த எச்சரிக்கையை சகஜமாக கடந்து சென்றோமானால் நமது வீட்டிலும் அனந்து அஜிக்கள் உருவாகும் வாய்ப்புள்ளது .
ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து வெளியில் வந்தவர்கள், ஆர்எஸ்எஸ் இளைஞர்களை மூளை சலவை செய்வதாகவும் மத வெறியை உருவாக்குவதாகவும் தாங்கள் எழுதிய புத்தகங்களின் வாயிலாக தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் பாலியல் பிரச்சினை குறித்து குறிப்பிடவில்லை என்றே கருதுகிறேன். ஆர்எஸ்எஸில் இருக்கும் ஆண்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்றால் சங்க பரிவாரத்தில் உள்ள பெண்களின் நிலை?
கேரளாவில் அதிகாரத்தில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்வதோடு இந்த கொலை பிரச்சினையில் தொடர்புடையவர்களை கைது செய்து மக்கள் முன்பாகவே தண்டனை அளிக்க வேண்டும். ஆர் எஸ் எஸ் மனிதகுல விரோத அமைப்பு என அறிவிப்பு விடுக்க வேண்டும். பிரச்சினை ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து கொண்டு குற்றம் செய்த நபர் அல்ல. கேடான சித்தாந்தத்தை கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பே குற்றவாளி தான்.
மக்களே ஆர்எஸ்எஸ் இல் இருந்து விலகி இருங்கள். அதில் இருப்பவர்களை சமூக புறக்கணிப்பு செய்யுங்கள். அதில் நமது குழந்தைகளை அனுப்பி அவர்களின் வாழ்வை பலியிட்டு விடாதீர்கள். கேரளாவின் அனந்து அஜியே நம்முன் உள்ள உதாரணம்.
- சுவாதி