பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஒன்று இணைந்து “Global sumud Flotilla” என்ற பெயரில் 40க்கும் மேற்பட்ட படகுகளில் காசாவை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர். உணவு பொருட்கள் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் சென்ற அந்த படகுகள் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி இஸ்ரேல் அரசால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்த கிரேட்டா தன்பர்க் உள்ளிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பின்தங்கி வந்து கொண்டிருந்த ஒரு படகு மட்டும் காசாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காசாவில் பாசிச இஸ்ரேல் அரசு நடத்திவரும் கொடூரமான இனப்படுகொலையை நிறுத்தச் சொல்லி பல்வேறு நாடுகளிலும் ஜனநாயக இயக்கங்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், மாணவர்கள் என பல பிரிவினரும் அவரவர் நாட்டில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களின் விளைவாக பல்வேறு நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது, இஸ்ரேல் அரசின் பயங்கரவாத நடவடிக்கையை நிறுத்தக் கோரியும் ஐநாவிலும் தங்கள் நாட்டு நாடாளுமன்றங்களிலும் தீர்மானங்களை நிறைவேற்ற வருகின்றன.
இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் அரசின் திட்டமிட்ட ஒடுக்குமுறையால் உணவு தட்டுப்பாடு, குடிநீர் தட்டுப்பாடு, மருந்துகள் தட்டுப்பாடு என மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் மாறி வருகிறது. குண்டுகள் மூலம் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த பாசிச நெதன்யாகு அரசு வெளிநாடுகளில் இருந்து வரும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளையும் காசாவுக்குள் நுழைய விடாமல் தொடர்ந்து தடுத்து வருகிறது. இதனால் குண்டுகளால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை போலவே பசி, பட்டினி, மருத்துவமின்மை போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத காரணத்தால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் சாவின் விளிம்பில் உள்ளனர்.
இதனை புரிந்து கொண்ட மனித உரிமை செயல்பாட்டாளர்கள் “குளோபல் சுமுத் ப்ளோட்டீலா” என்ற பெயரில் இஸ்ரேல் அரசின் பெரும்பெரும் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் உதவி பொருட்களுடன் பாலஸ்தீனத்தை நோக்கி கடல் பயணம் மேற்கொண்டு வந்தனர். அவர்களை இஸ்ரேல் அரசு சர்வதேச கடல் சட்டங்களை மீறி அத்துமீறி கடத்தியுள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் நிலப்பரப்பிலிருந்து 12 நாட்டிகல் மயில் தூரங்களே கடலில் அந்த நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவையாகும் அதற்குப் பிறகு உள்ளது எல்லாம் பிற நாடுகளும் அதன் கப்பல்களும் வந்து போக எந்த தடையும் இல்லை குறிப்பாக ஆயுதம் தாங்காத எந்த கப்பல்களும் வந்து போகலாம் என்பது தான் அந்த விதி. அதையெல்லாம் மீறி இஸ்ரேல் அரசு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது இந்த அடக்கு முறையை ஏவியுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது என்பது மட்டுமில்லாமல். மனித உரிமை உதவிகள் தடுப்பது என்ற மிக மோசமான முன்னுதாரணமாகும்.

ஃப்ளோட்டிலா என்ற இந்த முயற்சி மனித உரிமை செயல்பாட்டாளர்களால் முதல்முறையாக இப்போது நடத்தப்படவில்லை. 2010 ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு காலகட்டங்கள் பாலஸ்தீனத்தை நோக்கி உதவிப் பொருட்களைக் கொண்டு செல்ல ப்ளோட்டிலா என்ற பெயரில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்தாண்டு “ஃப்ரீடம் ஃப்ளோட்டீலா” என்ற பெயரில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உதவிகளை கொண்டு சென்ற போதும் இதே போல வழிமறித்து கைது செய்தது இஸ்ரேல் அரசு. பல்வேறு கண்டனங்களுக்குப் பிறகு அந்த செயல்பாட்டாளர்களை பின்னர் விடுவித்தது.
படிக்க:
உலக அளவில் எங்கு போர் நடந்தாலும் ஆயுதங்கள் தரிக்காத பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை அனுமதிப்பது இயல்பு. அந்த மனித நேய நடவடிக்கைகளையும் தடுத்து வருகிறது பாசிச இஸ்ரேல் அரசு.
இதில் முக்கியமாக கிரேட்டா தன் பர்க் என்ற மனித உரிமை செயல்பாட்டாளர் சில ஆண்டுகளுக்கு முன்பாக சூழலில் செயற்பாட்டாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டபோது மிகச்சிறு வயது பெண்ணாக இருந்த அவருக்கு சர்வதேச ஊடகங்கள் அரசுகள் முக்கியத்துவம் அளித்தன. ஆனால் இன்று இஸ்ரேல் இனப்படுகொலை விவகாரட்த்தில் கிரேட்டா தன் பர்க் முயற்சிகளை சர்வதேச ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. குறிப்பாக கரெக்டா தனது கீழை நோக்கி சூழலியல் செயல்பாடு நிறுத்திக் கொள்ளலாம் என்ற அறிவுரைகளையும் கொண்டு வருகின்றன.
அது பற்றி பேசிய க்ரேட்டா தன்பர்க் நான் பேசிய சூழலியல் பாதுகாப்பு என்பது மனிதர்களையும் உள்ளடக்கியதுதான். நான் வெறும் தாவரங்களுக்காகவும் தவளைகளுக்காகவும் மட்டும் சூழலியல் பாதுகாப்பு பேசவில்லை மனிதர்களுக்காகவும் பேசினேன். இப்போது அதே மனிதர்களுக்கு எதிராக மிகப்பெரும் தாக்குதல் நடந்து வரும்போது அதை பற்றி பேசாமல் இருப்பது நேர்மையானது அல்ல என பதிலடி கொடுத்தார்.
அத்தகைய க்ரேட்டா தன்பர்க் உள்ளிட்ட மனித உரிமை செயல்பாட்டாளர்களை தான் பாசிச இஸ்ரேல் அரசு கைது செய்து வைத்துள்ளது. நம் கண் முன்னே 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதையும் நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டதையும் பார்த்துள்ளோம் அந்த வரிசையில் தற்போது மனித உரிமை செயற்பாட்டாளர்களின் உயிருக்கும் பெரும் ஆபத்து வந்துள்ளது.
இந்த ஆபத்தை எதிர்த்து பாசிச இஸ்ரேல் அரசின் இனப்படுகொலை நடவடிக்கை எதிர்த்து பல்வேறு நாடுகளிலும் உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. இஸ்ரேல் அரசுடனான உறவுகளை நமது நாட்டு அரசும் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் உலகளாவிய அரசுகளின் நடவடிக்கைக்கும் கூற வேண்டி உள்ளது என்பது தற்போது நிலையில் நமது கடமையாக உள்ளது.
- திருமுருகன்