சின்னப்பன்

தோழர் சின்னப்பன் வடஆற்காடு ஜில்லாவில் பரமனந்தல் என்கிற கிராமத்தில் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

3-வது பாரம் வரையில் கல்வி பயின்றார். காங்கிரஸ் மகாசபையின் போராட்டங்களும். சேவையும் அவர் மனதில் பதிந்ததினால் 1939-ல் காங்கிரஸ் அங்கத்தினராகச் சேர்ந்து வேலை செய்தார். 1940-ம் வருடம் தனி நபர் சத்யாக்கிரகம் ஆரம்பித்ததும் சின்னப்பனும் அனுமதி பெற்று சத்யாக்கிரகம் செய்து கால்நடையாகவே சென்னை சென்று கைதியாகி சிறை தண்டனை அளிக்கப்பட்டார்.

செங்கம் தாலுக்காவில் விவசாயிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதும் இவரும் அதில் கலந்து வேலைசெய்ய ஆரம்பித்தார். இதன் காரணமாக சில கம்யூனிஸ்டுகளுடன் பழக சந்தர்ப்பமேற்பட்டது. விவாதத்திலும் விவசாய சங்க வேலையிலும் கிடைத்த அனுபவத்தின் காரணமாக கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் பாதைதான் சரி என்ற முடிவுக்கு வந்து கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.

செங்கம் தாலுக்காவில் பல கிராமங்களில் சங்கம் அமைத்து விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய், உழவுக் கருவிகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்தார். அப்பக்கத்தில் ஏற்பட்ட காலராவின்போது அதைத் தடுப்பதிலும், பீடிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதிலும் சுகாதார அதிகாரிகள் மூலம் பெரும்பங்கு எடுத்துக்கொண்டார்.

ஒரு ஏழை விவசாயியின் மகன் தோழர் சின்னப்பன். காங்கிரஸில் சேர்ந்து, சிறை சென்று, பிறகு விவசாய சங்கம் மூலம் கிராம சேவை செய்ய முன்வந்து. கடைசியாகக் கம்யூனிஸ்டுக் கட்சியில் இடம்பெற்றிருக்கிறார்.

1940ஆம் ஆண்டு நான் காங்கிரஸ் கட்சியின் தாலுக்கா செயலாளராக பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, பரமனந்தல் கிராமத்தை சேர்ந்த தோழர். சின்னப்பன் அவர்களை சந்தித்தேன். நான் அவரிடம் தாங்கள் காங்கிரஸ் இயக்கத்திற்கு வரவேண்டும். இயக்க வேலையில் முழு அளவில் பங்குபெறவேண்டும் என வேண்டுகோள் வைத்தேன். இதன் பிறகு அவர் செங்கம் வட்டம் பரமனந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காங்கிரஸ் இயக்கத்தை கட்டி வளர்த்தார். 1941-ல் நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தில் நானும் தோழர். சின்னப்பனும் கலந்துகொண்டு. கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் 3 மாத காலம் சிறைவாசம் அனுபவித்தோம். பிறகு விடுதலை செய்யப்பட்டு இருவரும் செங்கம் வந்து சேர்ந்தோம். எங்களுடைய பணி மேலும் சிறப்பாக அமையவேண்டும் என்ற நோக்கில், செங்கம் வட்டத்திலே விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே வழி. இந்தப் பகுதியிலே விவசாயிகளின் குறைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வு காணும் வகையிலே ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலே நானும், தோழர் சின்னப்பனும் இணைந்து விவசாய சங்கத்தை கட்டி, விவசாயிகளுக்காகப் பாடுபட்டுகொண்டிருந்தோம். இந்த சமயத்தில்தான் செங்கம் வட்டத்தில் சாத்தனூர் கிராமத்தில் விவசாயிகள் சங்க மகாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருவண்ணாமலை தருமலிங்க நாயக்கர், மோகனரங்கம், சின்னப்பன் மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர். இந்த மகாநாட்டில்தான் சாத்தனூர் கிராமம் வழியாகச் செல்லுகின்ற தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டினால்தான், மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் பலனடைவார்கள் எனத் தீர்மானம் இயற்றி அரசாங்கத்திற்கு, சாத்தனூரில் அணைகட்ட வேண்டும் என்ற தீர்மானம் அனுப்பப்பட்டது. மாநில விவசாய சங்க கூட்டம் முதன்முதலில் செங்கத்தில் நடைபெற்றது. இந்த அமைப்பு கூட்டத்திற்கு சின்னப்பன் பேருதவியாக இருந்தார். இந்த மாநில விவசாய அமைப்பு கூட்டத்திற்கு பிறகுதான். மன்னார்குடியில் விவசாய சங்கத்தின் முதல் மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாநில மாநாட்டிற்கு பிறகு செங்கம் வட்ட விவசாயிகள் மாநாடு மேல்பள்ளிப்பட்டு என்ற கிராமத்தில் நடைபெற்றது. அவர்களின் தாயார் செங்கொடி ஏற்றி வைத்தார். தோழர் சின்னப்பன் அவர்கள் இக்கூட்டத்திலும் கலந்து முக்கிய பங்கு வகித்தார். மதுரை மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்ற தமிழ் மாநில விவசாய சங்க மகாநாட்டிற்கு செங்கம் தாலுக்காவின் பிரதிநிதியாகத் தோழர். சின்னப்பனை அனுப்பி, பங்குபெற வைத்தோம். அந்த மாநாட்டிற்குக் காவல்துறையில் பணியாற்றிகொண்டிருந்த தோழர். M.K.M. மீரான் என்பவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு. தலைமைப் பொறுப்பை ஏற்கவந்தார். இறுதி காலம் வரை திருப்பத்தூரிலேயே (வடஆற்காடு மாவட்டம்) தங்கி, அரசியல் வேலைகளில் எதுவும் ஈடுபடாமல் இருந்து, 2002-ல் இயற்கை எய்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here