மதுரை திருப்பரங்குன்றம் அளவைக் கல் மீது ஆர் எஸ் எஸ், பாஜக, நீதி மன்றம் ஏற்ற துடிப்பது தீபமல்ல!
மக்களின் வளர்ச்சிக்கும் மத ஒற்றுமைக்கும்
வைக்கும் நெருப்பு!

என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் சார்பாக டிச 17 மாலை 4 மணிக்கு மதுரையில் ஒத்தக்கடை பகுதியில் பொதுக்கூட்டம் என அறிவித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தோம்.

அமைதி பூமியாக இருக்கும் தமிழ்நாட்டில் கலவரம் செய்ய முயலும் இந்துமதவெறி பாசிச கும்பலின் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை அறியமுடிந்தது. பிரச்சாரத்தில் மக்கள் பேரதரவு தந்ததோடு கலவர கும்பலை விரட்டியடிக்க வேண்டும் என்று தங்கள் ஆதங்கத்தை கொட்டினார்கள்.

படிக்க: மதுரையில் பொதுக்கூட்டம் | அனைவரும் வாரீர்

மதுரை பகுதியிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மதவெறி கும்பலுக்கு எதிரான பிரச்சாரத்தை மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்பு தோழர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் காவல்துறை பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதால் நாளை (17.12.2025) அறிவித்த பொதுக்கூட்டம் நடைபெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் கூட்டத்திற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்துள்ளோம். மேற்படி பொதுக்கூட்டம் நீதிமன்ற ஆணை பெற்று வேறு தேதியில் திட்டமிட்டு நடைபெறும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

இவண் :

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு- புதுச்சேரி.
தொடர்புக்கு : 9597138959.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here