ட்ரம்பின் ஆட்சியில் ஊசலாடும் அமெரிக்க மக்களின் உயிர்!
தற்போதைய அரசின் படுகொலையை எதிர்க்கும் அனைவரையும் பார்த்து குரைகிறார் டிரம்ப். மினியாபொலிஸ் மேயரும் ஆளுநரும் “கலவரத்தை தூண்டுகிறார்கள்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

மெரிக்க அதிபர் டொனால்ட் நான்தான் உலக நாடுகளுக்கு இடையேயான போர்களை நிறுத்தி சமாதானத்தைக் கொண்டு வருகிறேன். எனக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் அலப்பறைகள் செய்து வரும் நிலையில், அமெரிக்காவிலோ அதன் குடிமக்கள் அடுத்தடுத்து போலீசாரால் சுட்டுத் தள்ளப்படுகின்றனர்.

ட்ரம்பின் ஆட்சியைக் கொண்டாட முடியுமா? 

வெள்ளை நிற வெறியனும் பாசிஸ்டுமான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் வாழும் பிற நாட்டவர்களை எதிரிகளைப் போலவே முன்னிறுத்தி வருகிறார். அமெரிக்காவின் வளங்களை அபகரிப்பவர்களைப் போல, சமூகவிரோதிகளைப் போல சித்தரிக்கவும் செய்கிறார் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிப்பவர்களாகவும் முன்னிறுத்துகிறார். அமெரிக்காவில் வாழத் தகுதியற்றவர்கள் என்று அவர்களின் மீது விஷத்தையும் கக்குகிறார்.

அமெரிக்காவில் ட்ரம்ப் ஒருவர் மட்டுமே இத்தகைய பாசிஸ்ட் என்று எண்ணிவிட வேண்டாம். அவரின் சீடர்களாக இதோ நாங்கள் இருக்கிறோம் என்று தமது செயல்களின் மூலம் பல்வேறு மாகாணங்களில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தம்மை நிரூபிக்கவே செய்கின்றனர்.

ஜனவரி 25 இல் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது அப்பட்டமான படுகொலை என்று காணொளிக் காட்சிகள் நிரூபிப்பதால் அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஊசலாடும் குடிமக்களின் உயிர்!

இறந்தவர் 37 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் பிரெட்டி. அவர் அவசர சிகிச்சை பிரிவில் மக்களின் உயிரை காப்பதற்காக பணியாற்றி வந்த செவிலியர். இது இம்மாதத்தில் நடக்கும் முதல் படுகொலை அல்ல. உண்மையில் இது இரண்டாவது படுகொலை.

அலெக்ஸ் பிரெட்டி

மினியாபொலிஸ் நகரில், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் குடிவரவு அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டு 3 வாரங்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் அலெக்ஸ் பிரெட்டி மீதான துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

“காவல்துறை கேட்டும் அலெக்ஸ் தனது துப்பாக்கி ஒப்படைக்கவில்லை” என்று அரசல், அதிபர் டிரம்ப்பால் செய்திகள் பரப்பப்படுகின்றன. “வன்முறையாக நடந்துகொண்டதால்” அதிகாரிகள் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் கிறிஸ்டி நோம் கூறுகிறார். இத்தகைய கட்டுக்கதைகளை பார்த்து அலெக்ஸின் குடும்பத்தினரும் கொதித்துப் போய் உள்ளனர்.

படிக்க:

 உலக சமாதானத்தின் முதன்மை எதிரி அமெரிக்கா

 அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் பார்ப்பன பனியா கும்பல்!

“நாங்கள் மனம் உடைந்துள்ளோம், ஆனால் மிகவும் கோபமாகவும் இருக்கிறோம். அலெக்ஸ் ஒரு கருணை உள்ளம் கொண்டவர், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீதும், மினியாபோலிஸ் VA மருத்துவமனையில் ICU செவிலியராக இருந்தபோது அவர் பராமரித்த அமெரிக்க வீரர்கள் மீதும் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். அலெக்ஸ் இந்த உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தாக்கத்தைக் காண அவர் நம்முடன் இருக்க மாட்டார். நான் ஹீரோ என்ற வார்த்தையை லேசாகப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும், அவரது கடைசி எண்ணமும் செயலும் ஒரு பெண்ணைப் பாதுகாப்பதுதான்” என்று குடும்பத்தினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

டிரம்ப்பை மறுக்கும் உள்ளூர் நிர்வாகம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அவரது அமைச்சர்களும் காவல்துறைக்கு முட்டுக் கொடுத்தே வருகின்றனர். மாகாணங்கள் அதை மறுக்கின்றன. மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் ஃபெடரல் அதிகாரிகளின் விளக்கம் “அர்த்தமற்றது” மற்றும் “பொய்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கருப்பு இன மக்களை இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கி, அதாவது குற்றப்பரம்பறையினரை போன்று ஒடுக்கி வெறியாட்டம் போடுகின்றனர் வெள்ளை நிற வெறியர்களான அதிகார வர்க்கத்தினர்.

மே 25, 2020 அன்று அமெரிக்காவின் மினியாபோலிஸில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட், டெரெக் சாவின் என்ற வெள்ளையின போலீஸ் அதிகாரியால் கழுத்தில் முழங்காலால் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார். 9 நிமிடங்களுக்கும் மேலாக மூச்சுவிட முடியாமல் அவர் தவித்த காணொளி உலகளவில் இனவெறிக்கு எதிரான பெரும் போராட்டங்களைத் (Black Lives Matter) தூண்டியது. இன்று அதிபர் டிரம்போ பகிரங்கமாகவே அத்தகைய நிறவெறியை உயர்த்திப் பிடிக்கிறார்.

இந்நிலையில், தற்போதைய அரசின் படுகொலையை எதிர்க்கும் அனைவரையும் பார்த்து குரைகிறார் டிரம்ப். மினியாபொலிஸ் மேயரும் ஆளுநரும் “கலவரத்தை தூண்டுகிறார்கள்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவை உலகின் சொர்க்கபுரி போன்றும், அந்த நாட்டிற்குள் வேலை தேடிச் செல்வதும் அந்த நாட்டிலேயே குடியுரிமை வாங்கி விடுவதும் தனது வாழ்நாள் லட்சியம் என்றும் சிலர் தீவிர முயற்சியில் இருக்கின்றனர். அப்படி கனவு காணும் ஒவ்வொருவரும் அந்நாட்டில் நடப்பதை எச்சரிக்கையுடன் பரிசீலிக்க வேண்டும்.

இந்தியா குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக காவி பாசிஸ்டான நரேந்திர மோடியின் ஆட்சி எப்படி உள்ளதோ, அதேபோலத்தான் அமெரிக்காவில் வெள்ளை நிற வெறியனான டிரம்பின் ஆட்சியும் அமைந்துள்ளது. உயிர் வாழும் உரிமையை தக்க வைக்க உலகை பாசிஸ்டுகளின் பிடியிலிருந்து மீட்போம்!

  •  இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here