ஜூலை 9 நாடு தழுவிய வேலை நிறுத்தம் பாசிச மோடி அரசின் ‘தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மற்றும் தேசவிரோத கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு’ எதிராக இந்திய அளவில் 10 தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தியுள்ளது. இந்த போராட்டத்தில் 20 கோடிக்கும் அதிகமான உழைக்கும் மக்கள் பங்கேற்றுள்ளார்கள்.

வங்கி, காப்பீடு, அஞ்சல், சுரங்கம், கட்டுமானம் மற்றும் ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல துறை சார்ந்த தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவையெல்லாம் சம்யுக்த கிசான் மோர்ச்சா(SKM) விவசாய சங்கங்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற விவசாயிகளை அணித்திரட்டி தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஜூலை 9 நாடு தழுவிய வேலை நிறுத்தம்
ஆந்திரா

நாட்டின் மக்கள் தொகையில் 65% இளைஞர்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லாமல் கிடைக்கும் வேலையை செய்து கொண்டு காலத்தை ஓட்ட வேண்டிய அவல நிலையில் இளைஞர் பட்டாளம் உள்ளது. இப்படியான சூழ்நிலையில் ரயில்வே, என்.எம் டி சி லிமிடெட், எஃகு துறை மற்றும் கல்வி நிறுவனங்களை உதாரணம் காட்டி அரசு துறைகளில் புதிதாக இளைஞர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஓய்வு பெற்ற பணியாளர்களை பணியமர்த்துவது வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் செயலாகும்.

ஜூலை 9 நாடு தழுவிய வேலை நிறுத்தம்
KITU IT Workers union Bangalore

இது ஒரு புறம் என்றால் மறுபுறத்தில் எட்டு மணி நேர வேலை 12 மணி நேரம் வேலை ஆக்குவதால் மூன்று ஷிப்ட் இரண்டு சிப்டாக குறைக்கப்பட்டு ஏற்கனவே வேலையில் இருந்தவர்கள் வேலை இழக்க கூடிய அபாயமும் உள்ளது இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கார்ப்பரேட் நலனிலிருந்து சட்டங்கள் மாற்றப்படுவதும் அமல்படுத்தப்படுவதும் என பாசிச நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

ஜூலை 9 நாடு தழுவிய வேலை நிறுத்தம்
Rail strike kolkata

வேலையின்மையாலும், விவசாயம் பொய்த்து போனதாலும் மக்கள் பசி பட்டினியால் வாடுவதும், வறுமையில் உழல்வதும் நடந்து வருகிறது. இதனை பயன்படுத்தி குறைந்த கூலிக்கு உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படுவதும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் நிலையாக உள்ளது.

படிக்க:

♠ ஜூலை 9 பொது வேலை நிறுத்த போராட்டம், தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கி முன்னேறட்டும்!

இப்போது நடைபெற்று வரும் வேலை நிறுத்தங்களின் மூலம் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் பதிவு செய்து வருகின்றன தொழிலாளர்களின் உரிமைகளை பலவீனப்படுத்தும் நியாயமற்ற சுமைகளை அதிகமான வேலை நேரங்களை திணிக்கும் தொழிற்சங்கம் வைக்கும் உரிமையை பறிக்கும் தொழிலாளர் சட்டங்கள் நமக்குத் தேவையில்லை.

ஜூலை 9 நாடு தழுவிய வேலை நிறுத்தம்
Karnataka CITU Union Protest

ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பதற்கு அல்லோலப்படும் நாட்டில் தான் அதே ஒரு நாளில் 1000 கோடி சம்பாதிக்கும் அதானி, அம்பானி போன்ற முதலாளிகள் உள்ளனர். இந்த நிலையை மாற்ற நாட்டில் நிலவும் கடுமையான ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட வேண்டும். முதலாளிகள் குவித்து வைத்துள்ள லட்சக்கணக்கான கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். மக்கள் விரோத வரிக் கொள்கை குறைக்கப்பட்டு கார்ப்பரேட் வரிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். இதை நோக்கியே நமது வேலை நிறுத்த போராட்டங்கள் இருக்க வேண்டும்.

இன்று நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட உழைக்கும் மக்கள் ரயில் மறியல், சாலை மறியல் ஆலைப் புறக்கணிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முற்றுகை என தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள்.

எதிர்ப்பின் மூலம் பாசிஸ்டுகள் அஞ்சி விடுவார்கள் என்று நினைத்து விடக்கூடாது. இது போன்ற தொடர் போராட்டங்களும் அதன் அவசியத்தை உணர்த்து விதமான தொடர் பிரச்சார இயக்கங்களின் மூலம் மக்களிடையே எழுச்சி ஏற்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள் மக்கள் போராட்டமாக பரிணமிக்கும் போது தான் பாசிஸ்டுகளை நடுங்கச் செய்ய முடியும்.

அதற்கான வழிமுறைகளை பாட்டாளி வர்க்க ஆசான்களிடமிருந்து அனுபவமாக கற்போம். மக்களுக்கும் கற்பிப்போம். மக்களுக்கான அதிகாரத்தை நிலைநாட்டுவோம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here