கலவர நெருப்பைப் பற்ற வைக்க திருப்பரங்குன்றத்தைச் சுற்றும் காவிக் கும்பல்!
மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியோ தெளிவாக RSS குரலாகவே ஒலிக்கிறார். மாநிலத்தை ஆள்வது உயர் நீதிமன்றமா – சட்டமன்றமா என்பதை நோக்கி விவாதத்தை தள்ளியும் விட்டுள்ளார்.

ன்றைய தலைப்புச் செய்தியில் தமிழக அளவில் மதுரை திருப்பரங்குன்றம் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. விரைவில் இந்திய அளவிலான செய்திகளிலும் முதலிடத்தை பிடிக்க வைக்கவே சங்கிகள்  இரண்டு நாட்களாக களத்தில் நிற்கின்றனர் .  கார்த்திகை தீபத்தை சாக்காக வைத்து கலவரத்தீயை பற்றவைத்தே தீருவேன் என்று சங்கி நீதிபதியும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி, உருட்டல் மிரட்டல்களையும் செய்து வருகிறார். தர்கா அருகில் தீபம் ஏற்றப்படாதே கண்டித்து திருப்பரங்குன்றத்தில் கடை அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது சங்கி கும்பல். ஆனால் திருப்பரங்குன்றம் (பெரும்பான்மையான இந்து) வியாபாரிகளோ அதனை ஏற்க மறுத்து சங்கி கும்பலின் முகத்தில் கரியைப் பூசி விட்டனர்.

பா.ஜ.க. ஒரு பாசிசக் கட்சி!

பொதுவில் ஊருக்குள்  கலவரம் நடந்தால், வீடுகள் கொளுத்தப்பட்டால் அழிவு என்றுதான் நாம் பார்ப்போம். ஆனால் சங்கிகளின் பார்வையில் அதுதான் ஆதாயம்.

இந்து – முஸ்லிம் என்றோ, இந்து-கிறிஸ்துவர் என்றோ, ஆதிக்க சாதி – தாழ்த்தப்பட்ட சாதி என்றோ அடித்துக்கொள்ளும் போது ஒரு தரப்பை தனக்கானவர்களாக வென்றெடுத்துக் கொள்வது தான் ஆர்எஸ்எஸ் இன் வழிமுறையாக உள்ளது. இதற்காகவே திட்டமிட்டு கலவரங்களை தூண்டுவதையும் தனது வழிமுறையாக ஆர்எஸ்எஸ் கும்பல் கையாள்கிறது .

தமிழகத்திலும் கூட எங்கெல்லாம் கலவரங்கள் நடந்து இருக்கின்றனவோ அங்கு மட்டும்தான் ஆர்எஸ்எஸ்சிற்கு – பாஜகவிற்கு பெயரளவிற்கு சில அடியாட்கள் கிடைத்துள்ளனர். கூட்டணியில் போட்டியிட்டு சில தொகுதிகளை கைப்பற்றியும் உள்ளனர் .

எனவே தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற வேண்டும் என்றால், தாமரை மலர வேண்டும் என்றால், ஊருக்கு ஊர் கலவரங்களும் படுகொலைகளும் மோதல்களும் நடந்தாக வேண்டும். இந்த கேடுகெட்ட நோக்கத்துடன் தான் சங்கிகள் தற்போது மதுரை திருப்பரங்குன்றத்தை சுற்றி வருகின்றனர்.

பாஜகவின் கையாள் GRS!

தமிழகத்தை ஆளும் திமுக அரசு இதற்கு தடை போடும் என்பதால், நீதிமன்றத்தின் மூலமாக தமக்கான அனுமதிகளை பெற்றுக் கொண்டு, சட்டபூர்வமாக கலவரத் தீயை பற்ற வைக்கவே களமாடுகின்றனர்.

மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியோ தெளிவாக RSS குரலாகவே ஒலிக்கிறார். மாநிலத்தை ஆள்வது உயர் நீதிமன்றமா – சட்டமன்றமா என்பதை நோக்கி விவாதத்தை தள்ளியும் விட்டுள்ளார்.

கோவில் வழிபாடு தொடர்பாக கோயில் நிர்வாகமும், பக்தர்களும், பொதுமக்களும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டுமா? அல்லது நீதிபதி தனது பூணூலை உருவி விட்டுக்கொண்டு காவிகளின் கோரிக்கையைத் தீர்ப்பாக திணிக்க வேண்டுமா என்பது விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

படிக்க:

 திருப்பரங்குன்றம் விவகாரம்: GR. சுவாமிநாதன் நீதிபதியா?  RSS ரவுடியா?
 ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி பதவிக்கு தகுதியானவர் தானா?

ஜி.ஆர்.சாமிநாதனின் அரைவேக்காட்டுத்தனமான, கலவரத்திற்கு வழி வகுக்கின்ற உத்தரவுகளை – தீர்ப்புகளை கையில் பிடித்துக் கொண்டுதான் ஆர் எஸ் எஸ் கும்பல் திருப்பரங்குன்றத்தை முற்றுகை இடுகிறது.

தற்போது வரை தமிழக அரசின் காவல்துறை சங்கிகளை தடுத்து நிறுத்தி உள்ளது. ஜி.ஆர். சாமிநாதனின் உருட்டல் மிரட்டல்களுக்கும் சிஐஎஸ்எப் படையினரின் ஏவலுக்கும் மசியாமல் மத நல்லிணக்கத்தை கட்டி காக்க களத்தில் நிற்கிறது.

முருக பக்தர்களே எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள பக்தர்கள் ஒவ்வொருவரும்  நடப்பதை எச்சரிக்கையுடன் பரிசீலிக்க வேண்டும்.  சங்கிகளுக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு என்று முருக பக்தர்கள் சங்கிகளின் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கிக் கேள்வி கேட்க வேண்டும்.

தற்போது கலவரத்தைத் தூண்ட களமிறங்கியுள்ள எச். ராஜாவோ, நீதிபதியோ எத்தனை முறை முருகனுக்கு  காவடி தூக்கினர்? எத்தனை முறை அலகு குத்தினர்? என்று கணக்கு கேட்க வேண்டும்.

முருகனை எப்படி வழிபடுவது? முருகன் கோயிலில் திருவிழாவை எப்படி நடத்துவது? எந்த நேரத்தில், எந்த இடத்தில் தீபம்  ஏற்றுவது? என்பதையெல்லாம் கோயில் நிர்வாகமும், பக்தர்களும், திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் பிற சமயத்தினரும் கலந்து சேர்ந்து முடிவெடுத்து அமல்படுத்துகின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணக்கமாக தத்தமது வழிபாடுகளை நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகின்றனர். இந்த அமைதியை குலைப்பதற்கு வானரக் கூட்டம் வாலில் நெருப்பு வைத்துக்கொண்டு மலை மேல் தாவ பார்க்கிறது.

தமிழர்களின் தனிச்சிறப்பான கடவுளான முருக வழிபாட்டை பார்ப்பன சங்கி கும்பல் தனக்கானதாக வளைக்க பார்க்கிறது. இது திருப்பரங்குன்றத்தில் வழிபாடுகளை நடத்தி வரும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், சமணர்கள் ஆகியோர்களுக்கு இடையிலான பிரச்சனை என்று நாம் ஒதுங்கிச் செல்லக்கூடாது . மதுரையை அயோத்தியாக்குவது ஆர்.எஸ்.எஸ் இன் திட்டம் என்றால், தமிழகத்தை பார்ப்பனியத்தின் சனாதனத்தின் கல்லறையாக மாற்றுவதை நமது திட்டமாக – சபதமாக ஏற்போம் .

தமிழகத்தில் அமைதியை விரும்பும் அனைவரும் மத நல்லிணக்கத்தை விரும்பும் அனைவரும், பாசிஸ்டுகளை முறியடிக்க விரும்பும் அனைவரும் தனது வழிபாட்டு உரிமையை தனது கடவுளை தக்க வைக்க நினைக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு எதிராக போராடுவது அவசியம். சங்கிகளுக்கு எதிராக களத்தில் நிற்கும் கோவில் நிர்வாகிகளுடனும் பக்தர்களுடனும் தமிழக அரசுடனும் இணைந்து காவிக் கும்பலை அடித்து விரட்டுவோம் . நீதிமன்றத்தை காவி மன்றம் ஆக்கும் சாமிநாதன்களை  விரட்டியடிப்போம்.

  •  இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here