மக்கள் அதிகாரம் இணைய வாசகர்களுக்கு… 

மக்கள் அதிகாரம் முகநூல் மற்றும் இணையதள வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு. மக்கள் அதிகாரம் அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பிரச்சனையில் தலையிட்டு வீரியமான போராட்டங்களை நடத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள். 2020 ஆம் ஆண்டு சீர்குலைவுவாதிகளால் எமது வினவு இணையதளம் கைப்பற்றப்பட்டதை அடுத்து மக்களிடம் புரட்சிகர அரசியல் மாற்றத்திற்கான கருத்துக்களை கட்டுரைகளாகவும், மீம்ஸ், வீடியோ வடிவில் கொண்டு சேர்க்க 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் makkalathikaram.com இணையதளமும், முகநூல் பக்கமும் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பித்து சில நாட்களிலேயே வாசகர்களின் பேராதரவை பெற்று செயல்பட ஆரம்பித்த முகநூல் பக்கம், ஓராண்டு முடிவில் ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியன் (10 லட்சம்) பார்வையாளர்களை ஈர்த்தது. ஆர்எஸ்எஸ் – பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வெளியிட்ட மீம்ஸ்கள் பல லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்தது. ஆர்எஸ்எஸ் பற்றி தெரிந்து கொள்வோம் என்ற தலைப்பிலான போஸ்ட் கார்டுகள் இன்று வரை சமூக வலைதளங்களில் சுற்றி வருவதை பார்க்க முடியும்.

இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் followersஐ மக்கள் அதிகாரம் PAGE கடந்தது. இந்த கருத்துப் பரவலைக் கண்டு பொறுத்துக் கொள்ளாத சங்பரிவார கும்பலின் இணைய கைக்கூலிகள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள். பதிவுகளின் கமெண்ட் பகுதியில் கொச்சையாக மறுமொழி இடுவது, முகநூல் நிறுவனத்திற்கு Report அடிப்பது என தொடர் இணைய தாக்குதலை தொடுத்தார்கள்.

முதல் அடியாக makkalathikaram.com இணையதளத்தை ஹேக்கர் கொண்டு முடக்கினார்கள். தொழில் நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் இணையதளத்தை மீட்டோம். ஆனாலும் இன்று வரை இணையதளம் தொடர்ந்து முடக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அதே நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்களை மாதமாதம் ஈர்த்த முகநூல் Page கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக முகநூல் நிறுவனத்தால் நிரந்தரமாக முடக்கப்பட்டது.

பின்பு மக்கள் அதிகாரம் மீடியா என்ற தனிநபர் பக்கத்தில் தான் பதிவுகளை பதிவு செய்தோம். அப்போதும் ஓயாமல் சங்கிகள்

கீழ்த்தரமான பதிவுகளை கமெண்ட் பகுதியில் பதிவு செய்தார்கள் இந்நிலையில் தான் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வியட்நாம் நாட்டிலிருந்து எமது மக்கள் அதிகாரம் முகநூல் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு நிரந்தரமாக டெலீட் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் அதிகாரம் முகநூல் முடக்கம், பாசிசத்திற்கு எதிரான எமது போராட்டம் தொடரும்!

இணையதள கருத்து தணிக்கை என்று கூறிக்கொள்ளும் கார்ப்பரேட் சங்கிளால் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி நமது விமர்சன கட்டுரைகள், பீம் படங்களை பல முறை பல்வேறு கட்டங்களில் முடக்கப்பட்டது.

அதனை எல்லாம் கடந்து நமது அரசியல் கருத்தை கொண்ட கட்டுரைகளை அவர்களின் பல்வேறு கட்டுப்பாடுகளை தாண்டி தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளோம் என்பதை வாசகர்களாகிய உங்களது ஆதரவின் மூலம் அறிவோம். எளிதில் செய்யவதற்கு அரிய Hacking என்ற பெயரில் facebook நிறுவனத்தின் முழு ஒப்புதலுடன் நடைப்பெற்ற நிகழ்வாகும். ஆம் நமக்கு எவ்விதத்திலும் மீண்டும் அந்த பெயரில் இயங்க கூடாது என்பதற்காகவே Makkalathikaram media என்ற பெயரில் இருந்த profileஐ நம்முடைய ஒப்புதல் இன்றியே முற்றிலும் அழித்துள்ளது FB நிர்வாகம்.

பாசிஸ்டுகளின் ஆட்சியில் கருத்து சொல்வதற்கு உரிமை மறுக்கப்படுகிறது. சமீப காலங்களில் யூடியூப் சேனல் முடக்கம், இணையதளம் முடக்கம், பத்திரிகை அலுவலகங்களில் ED,IT,CBI சோதனை என கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலை தொடுத்து வருகிறது. பாஜக IT Wing வெளியிடுவது தான் செய்தி என்ற கட்டமைப்பை உருவாக்கியுள்ளார்கள். இதற்கு எதிராக யார் சமர் புரிந்தாலும் அவர்கள் மீதான இணைய தாக்குதலை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

சமூக ஊடகத்தின் விழுமியங்கள் என்ற பெயரில் இடதுசாரி மக்கள் ஆதரவு கருத்துக்களை இணையதளத்தில் இருந்து கத்தரிப்பதை தணிக்கை குழு என்றும் அவதூறுகள் ஆபாச வக்கிற பொய் செய்திகள் சுதந்திரமாக உலவ விடும் கார்ப்பரேட் சமூக ஊடக நிறுவனங்கள் கார்ப்பரேட் சங்கிளாகவே இருப்பதும் , பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி நமது விமர்சன கட்டுரைகள், மீம் படங்களை பல முறை பல்வேறு கட்டங்களில் முடக்கப்பட்டது.

அதனை எல்லாம் கடந்து நமது அரசியல் கருத்தை கொண்ட கட்டுரைகளை அவர்களின் பல்வேறு கட்டுப்பாடுகளை தாண்டி தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளோம் என்பதை வாசகர்களாகிய உங்களது ஆதரவின் மூலம் அறிவோம். Hacking என்ற பெயரில் facebook நிறுவனத்தின் முழு ஒப்புதலுடன் நடைப்பெற்ற கருத்துரிமை மீதான தாக்குதலாகவே இதை பார்க்கிறோம். நாம்  எவ்விதத்திலும் மீண்டும் அந்த பெயரில் இயங்க கூடாது என்பதற்காகவே Makkalathikaram media என்ற பெயரில் இருந்த profileஐ நம்முடைய ஒப்புதல் இன்றியே முற்றிலும் அழித்துள்ளது FB நிர்வாகம்.

எதிரி நம்மை சினம் கொண்டு தாக்குகிறான் என்றால் நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்றே அர்த்தம். ஆகையால் முகநூல் பக்கம் முடக்கப்படுவதனால் நாம் சோர்ந்து போய் விடப் போவதில்லை. இன்னும் வீரியமாக நமது மக்கள் பணியை தொடர்வோம். அதற்கு ஏதுவாக நமது கருத்து பிரச்சாரங்களை சமூக வலைதளங்களின் மூலமாக மக்களிடம் கொண்டு செல்வோம்.

கூடிய விரைவில் புதிய மக்கள் அதிகாரம் முகநூல் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு வாசகர்களுக்கு அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் அதிகாரம்
ஊடகக் குழு

1 COMMENT

  1. பாசிஸ்டுகள் போல் கோழைகள் வேறு எவரும் இல்லை. அதனால் தான் நமது சரியான புரட்சிகர பாதை;
    அரசியல் கண்ணோட்டம் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் காவிப் பாசிஸ்ட்டுகள் அனைத்து வகைகளிலும் நம்மை முடக்கிட எத்தனிக்கிறார்கள். நாம் முடங்கவும் மாட்டோம்; அடங்கவும் மாட்டோம் – என்பது அக்கோழைகளுக்குத் தெரியாது. மீண்டும் வீறு கொண்டு எழுவோம்! உழைக்கும் மக்களை அணி சேர்த்து எதிரிகளைப் புதைகுழிக்குள் தள்ள…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here