திரை நாயகன் விஜய் கட்சி தொடங்கியது முதல் 41 உயிர்கள் காவு கொடுத்தது வரை!
கரூரில் 27-09-2025 -ல் நடைபெற்ற தவெக கூட்டத்தில் இடிபாடுகளில் சிக்கி அநியாயமாக 41 பேர் படுகொலை செய்யப்பட்டதை ஒட்டி ‘மக்கள் அதிகாரம்’ இணையதளத்திலும், எண்ணற்ற பிற தொலைக்காட்சிகள், யூடியூப்கள், அச்சு ஊடகங்களும்கூட கட்டுரைகளாகவும், நேர்காணல்களாகவும், உரைகளாகவும் மாபெரும் கண்டனம் தெரிவித்து கண்ணீர் மல்க கருத்துக்களைக் குவிந்த வண்ணம் உள்ளன. மனிதநேய மிக்க அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் இன்னும் பற்பலர் …என இந்த 41 பேர் படுகொலைக்கு விஜய்யையும் அவன் அல்லக்கைகளையும், தவெக அணில் குஞ்சுகளையும் கடுமையாக கண்டனம் செய்துள்ளனர்.
பல்வேறு அமைப்புகளும், மாணவர் இயக்கங்களும் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கின்றன. மெழுகுவர்த்தி பேரணியும் நடந்திருக்கின்றன.
இப்போது நான் பதிவிடும் இக்கட்டுரையில் என் மனசாட்சியை சற்று ஒதுக்கி வைத்து விட்டு 41 பேர் சாவுக்கான குற்றவாளிகளை சற்று தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பிரயோகித்து கருத்து பதிவிடுவதற்காக மன்னிப்பீர்களாக! எனக்கும் வயது 77 ஐத் தொட்டுவிட்டதால் விஜய்யை – அவரது லும்பன் கம்பெனியை – அவரது ஈவிரக்கமற்ற சேடிஸ்ட் மென்டல்த்தனமான நடவடிக்கைகளுக்காக இவ்வாறு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுவதற்கான உரிமை இருப்பதாகக் கருதுகிறேன்.
கிராமப்புறத்தில் நாட்டுப்புற வழக்கில் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்றும் ‘பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது’ என்றும் பேசுகின்ற பழமொழி பொறுக்கி நடிகர் விஜய்யை பொருத்தமட்டில் 100 சதவீதம் உண்மையாயிற்று. ஆம், சங்கிகள் அரவணைப்புக்கு தற்போது நேரடியாக வந்து விட்டார். அதனால் தான் மரண ஓலம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த பொழுது, மயிறு போயிற்று என்று தப்பிப் பிழைத்து சென்னை பனையூர் பங்களாவில் பத்திரமாகப் புகுந்து கொண்டார். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி ஆரம்பிக்கும் முன் தன்னிடம் திரைத்துறையை வைத்து ரசிகர் கூட்டமாக திரண்டிருந்தோரைக் கொண்டு ‘தமிழக மக்கள் இயக்கம்’ என்ற பாணியில்தான் ரசிகர் மன்றத்தை நடத்தி வந்தார்.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல ஆர் எஸ் எஸ்- பாஜக- இந்துத்துவ- காவிக் கூட்டத்தால் ‘இந்தியா’வை ‘இந்துராஷ்டிரா’வாக அறிவிக்க (பல்வேறு தில்லுமுல்லுகள், மோசடிகள், தேர்தல் திருட்டுக்கள், சாதி மதக் கலவரங்கள், வீடுகள்-தேவாலயங்கள்-மசூதிகள் இடிப்புக்கள், பல்வேறு மக்கள் விரோத திட்டங்கள் மற்றும் சட்டங்கள் மூலமாக) துடித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை குறுக்கு வழிகளில் அல்லது பல்வேறு தில்லுமுல்லு, மோசடி, வெறுப்பு பிரச்சார வழிகளில் அமைத்துக் கொண்டாலும், தமிழ்நாட்டில் மட்டும் அவர்களுக்கு அது கானல் நீராகவே கடந்து செல்கிறது.
ஏதேனும் ஒரு வகையில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலாவது தமிழ்நாட்டில் இடங்களைப் பிடித்து, மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார், ஹரியானா போன்று இங்கேயும் சில அடிவருடிக் கட்சிகளை இழுத்துப் போட்டு கபளீகரம் செய்துவிடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தது. இந்த பெரியார் வகைப்பட்ட மண்ணில் அது சாத்தியமில்லாமல் காலம் நீண்டு கொண்டே சென்றது.
முடிவாக, முதலில் எடப்பாடியை ED பிடியில் சிக்க வைத்து அமித்ஷா காலில் விழ வைத்து அதிமுகவை வளைத்துப் போட்டது. ‘டாக்டர்’ கிச்சாமி, அன்புமணி போன்றோரின் உதிரிக் கட்சிகளையும் ஏற்கனவே விழுங்கி இருந்தது. ஆனாலும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
இந்நிலையில் தமிழ்நாட்டில் திரைத் துறையில் மயங்கிக் கிடக்கும் இளசுகளை கணக்கில் கொண்டு, ஏற்கனவே நடிகை குஷ்பு போன்ற கழிசடைகளை இழுத்துப் போட்டுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து இளையராஜாவை மிரட்டியும் பின்பு கனிந்த பின்பு மாநிலங்கவை உறுப்பினர் பதவி கொடுத்தும் கட்சிக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டது காவிக் கூட்டம். அதற்கு முன்பே அவரது தம்பி கங்கை அமரனையும் இழுத்துப் போட்டுக் கொண்டது. ஆனாலும் முன்னேற்றம் காண முடியவில்லை. காவிக் கூட்டத்திற்கு நம்பிக்கை தென்படவில்லை.
எனவே, ஏற்கனவே அரை சங்கியாக இருந்த நடிகர் ரஜினிகாந்த்திற்கு வலைவீசி பார்த்தார்கள். ஆனால் லதா தமது ‘புருஷனை’ உனக்கு இதெல்லாம் ஒத்து வராதுய்யா என மிரட்டி வீட்டிற்குள்ளேயே முடக்கி போட்டு விட்டார் அந்த அம்மா.
இத்தருணத்தில் 2024 பிப்ரவரி 24 ல் ஏற்கனவே ரசிகர் மன்றமாக இருந்த தமிழக மக்கள் இயக்கத்திற்கு சில அல்லக்கைகள் அரவணைப்புடன் ‘தமிழக வெற்றி’க் ’கழகம்’ என்றதொரு கட்சியாக உருவகப்படுத்திக் கொண்டார் விஜய்.
பின்பு 2024 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் இவற்றிலெல்லாம் தலை காட்டாமல் நேராக 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு முதலமைச்சராவது என்று அரசியல் பொறுக்கி விஜய் அறிவித்துக் கொண்டிருந்த வேளை.
படிக்க:
தவெக விஜய் யை கைது செய்ய கோரி திருச்சி, ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் !
இந்நிலையில் நேரடி எதிரியாக இவன் தமிழ்நாட்டில் திமுகவை ‘அரசியல் எதிரி’ என வர்ணித்து மிக மிகக் கடுமையாக தாக்கிப் பேசி வந்தபோதிலும்,தனது தனித்துவத்தை காண்பித்துக் கொள்வதற்காக பாஜகவை ‘கொள்கை எதிரி’யாக அடுத்தடுத்த நிலையில் வைத்து தாக்குதல் தொடுப்பது போன்ற பாவனையை உருவாக்கி வந்தார். பேச்சோடு பேச்சாக தன்னை முதல்வராக ஏற்றுக் கொண்டு, தன் கட்சியுடன் கூட்டணியில் இணைய வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்றும் படடோபமாக அறிவித்துப் பார்த்தார். ஒன்றுமே நடக்கவில்லை.
இவரது தகுதியை அமித்ஷா-மோடி கும்பல் சரியாகவே கணித்து வைத்திருந்தது. எனவே, சில காலத்திற்கு முன்பு நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த (வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் கோடி கோடியாக செல்வத்தை குவித்து வைத்திருக்கக்கூடிய) இந்த பொறுக்கி நடிகனை ‘அமலாக்கத் துறை’யை ஏவி விட்டு சென்னைக்கு இழுத்து வர வைத்தது அமித்ஷா கும்பல்.

வெளவெளத்துப் போன இதே விஜய் ஏற்கனவே ஒரு படம் ரிலீஸ் பண்ண விடாமல் ஜெயலலிதா முடக்கிப் போட்டவுடன் அப்பனும் மகனுமாக கொடநாடு பங்களாவில் கைகட்டி, வாய் பொத்தி கால்கடுக்க காத்து நின்றவரர். கடைந்தெடுத்த கோழை! கடைந்தெடுத்த பிழைப்புவாதி. அதிபயங்கர கொள்ளைக்காரன். திரையரங்குகளில்தன் ரசிகர் கூட்டத்திடமே ஆயிரம் இரண்டாயிரத்திற்கு பிளாக்கில் கள்ள டிக்கெட் விற்கச் செய்து கோடானு கோடி குவித்துக் கொண்டவர்.
எனவே ‘அம்மா’ சம்மதம் தெரிவித்து படம் ரிலீஸ் செய்ய ஆசி வழங்கியவுடன், காலில் கும்பிட்டு விழுந்து வணங்கி விடை பெற்று படத்தை வெளியிட்டு விட்டு ‘அம்மா’ உத்தரவின் படி, அடுத்த தேர்தலில் இரட்டை இலைக்கு வேலை செய்தவர் தான் இந்த பொறுக்கி ‘அரசியல்வாதி’ விஜய்.
எனவே, தற்போது பாஜக தமது ‘கூட்டணி உறுப்பான’ அமலாக்கத் துறையை ஏவி விட்டவுடன், வெளிப்படையான பேரம் நிகழ்ந்து, திமுகவிற்கு எதிரான ஒரு அரசியல் கட்சி துவங்கி அதன் தலைவராக நின்று இஸ்லாமிய, கிறிஸ்தவ, மற்றும் ரசிகர்கள் வாக்குகளைப் பிரித்தெடுக்க சங்கிகளால் வழிகாட்டப்பட்டது.
படிக்க:
கிரிமினல் விஜய்: தமிழக அரசியலில் முளைத்துள்ள புதிய விசச் செடி!
வேறு வழியின்றி சேர்த்த சொத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; தம்மைப் போன்றவர்கள் எல்லாம் சிறை கொட்டடியில் அடைந்து கிடந்து களி தின்ற பழக்கம் இல்லை. எனவே அஞ்சி நடுங்கி பொறுக்கி விஜய் பேரத்திற்கு முழுமையாக இணங்கி விடுகிறான். அதே வேகத்தில் நெய்வேலியில் இருந்து விஜய்யை இழுத்து வந்த அமலாக்கத்துறை முக்கிய ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ் தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைகிறான். கட்சியில் முக்கிய பொறுப்பையும் பறித்துக் கொள்கிறான். ஆம் ஒரே புள்ளிக்கு வந்தடைந்தார்கள்.
மேலும், ஒன்றிய பாசிச பாஜகவின் அடியாளாக பொறுக்கி விஜய் கும்பல் ஒழுங்காக செயல்படுகிறதா? என்பதனை ஐ.ஆர்.எஸ் அதிகாரியை நியமித்து கண்காணிக்க பயன்படுத்திக் கொண்டது மோடி- அமித்ஷா கும்பல்.
இவன் நடிகனாக ஆபாச உடை அணிந்த நடிகைகளுடன் குத்தாட்டம் போட்ட காலத்தில் படம் ஒன்றுக்கு ரூ.100 கோடி முதல் ரூ.300 கோடி வரை கொள்ளையடித்தவர் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு சம்பாதித்து அந்தப் படங்களில் மக்களை நல்வழிப்படுத்துவதற்கோ, சிறந்த அரசியல் வழிகாட்டுதல் செய்வதற்கோ கடுகளவும் முற்பட்டவர் இல்லை. ஒன்றிரண்டு படங்களில் மக்கள் நலன் சார்ந்து தயாரிப்பாளர்கள்/வசனகர்த்தாக்கள் எழுதிக் கொடுப்பதை ஒப்புவிப்பதைத் தவிர வேறு எந்த அரசியலும் இவருக்குத் தெரியாது. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள், மாநில, தேசிய, சர்வதேசியே பல்வேறு நாட்டு மற்றும் உலக நடப்புகள் எதுவுமே தெரியாத அரசியல் சூனியம்/தற்குறி தான் இவர். மக்களின் எந்த பிரச்சனைக்கும் ஓங்கி குரல் எழுப்பியதாகவோ, வீதியில் இறங்கி போராடியதாகவோ, அதன் மூலம் சிறை சென்றதாகவோ கிஞ்சிற்றும் உதாரணங்கள் இல்லை.
(தொடரும்…)
- எழில்மாறன்






