ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள ஏகாதிபத்தியப் போர், இன்று உலகெங்கிலும் உள்ள சாமானிய மக்களின் அடுப்பறையை எட்டிப் பிடித்துள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு, ஆளும் வர்க்கத்தின் மெத்தனப் போக்கையும், உலகளாவிய மூலதன வெறியின் கோர முகத்தையும் மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது.

ஹார்முஸ் நீரினை முடக்கமும் உலகளாவிய நெருக்கடியும்!

உலக எரிபொருள் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியைத் தாங்கி நிற்கும் ஹார்முஸ் நீரினை (Strait of Hormuz) இன்று போர்க் களமாக மாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களால் இந்தப் பகுதி முடங்கியுள்ளதால், வழக்கமான எரிபொருள் போக்குவரத்தில் வெறும் 10% மட்டுமே நடைபெறுகிறது.

இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியில் சுமார் 85 முதல் 90 சதவீதம் வரை இந்த நீரினை வழியாகவே வருகிறது. இந்தப் பாதையை பாதுகாப்பற்றதாக மாற்றிய அமெரிக்க மேலாதிக்க வெறியினால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது.

மக்களின் முதுகில் சுமையை ஏற்றும் மோடி அரசு

ஆரம்பத்தில் தட்டுப்பாடு ஏதுமில்லை என்று கூறி வந்த மோடி அரசு, தற்போது நிலமை கையை மீறிச் செல்வதை உணர்ந்துள்ளது. போரின் பத்தாவது நாளில், இந்திய மக்கள் சிலிண்டர் ஏஜென்சிகளின் முன் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, ஆளும் வர்க்கம் எவ்விதக் கூச்சமும் இன்றி விலையை உயர்த்தியுள்ளது

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, டெல்லியில் 913 ரூபாயாக உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (Essential Commodities Act) அமல்படுத்தி, உற்பத்தியை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளதுடன், புதிய சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளியை 15 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தியுள்ளது. இது தட்டுப்பாட்டை மறைக்க முற்படும் ஒரு தற்காலிகமானதும், மக்களை மேலும் அச்சுறுத்துவதுமான நடவடிக்கையாகும்.

உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வாதாரப் பாதிப்பு

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்தை அரசு முன்னுரிமை அடிப்படையில் குறைத்துள்ளதால், ஹோட்டல் மற்றும் உணவகத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் ஹோட்டல்கள் மூடப்படும் நிலையை எதிர்கொள்கின்றன.

படிக்க: 2024 தேர்தல் பயத்தில் கேஸ் விலையை குறைத்திருக்கலாம்! ஆனால்?

மும்பையில் ஏற்கனவே 20% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன; நிலைமை சீராகாவிட்டால் அடுத்த சில நாட்களில் 50% உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள் மட்டுமல்லாது, அந்தத் தொழிலை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் மற்றும் விநியோகச் சங்கிலியில் உள்ள ஏழைத் தொழிலாளர்களின் (Gig Workers) வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

அமெரிக்காவின் மேலாதிக்க வல்லரசுத் திமிரும், அதற்குச் சேவகம் செய்யும் பாசிச மோடி அரசின் அரசின் ஏகாதிபத்திய கார்ப்பரேட் கொள்கைகளும் இந்திய மக்களை வறுமையின் பிடியில் தள்ளியுள்ளன. ஈரான் மீதான இந்தப் போர் உண்மையில் ஒரு நாட்டின் வளங்களைச் சூறையாடவும், உலகப் பொருளாதாரத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அமெரிக்கா நடத்தும் நாடகமாகும்.

மக்களின் அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயுவைக் கூட தடையின்றி வழங்க முடியாத இந்த ஆளும் வர்க்கமும், போரைத் தூண்டும் ஏகாதிபத்திய சக்திகளும் மனித குலத்தின் பொது எதிரிகள் என்பதை இந்தத் தட்டுப்பாடு நமக்கு உணர்த்துகிறது.

உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து, இந்த ஏகாதிபத்தியப் போருக்கும், மக்களை வஞ்சிக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இதுவே!.

  • நலன்

1 COMMENT

  1. சமையல் எரிவாயு தட்டுப்பாடு:
    மோடி அரசின் தோல்வியும் உழைக்கும் மக்களின் அவல நிலையும் !

    அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் மீதான ஆக்கிரமிப்பு போரால் கடந்த 10 நாட்களாக போர் நடந்து கொண்டு உள்ளது இதனால் ஈரான் வழியாக கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் கடல் வழி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் வரத்து குறைந்து பேரலுக்கு 100 டாலர் என விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது
    இதனால் இந்தியாவின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
    கர்நாடகா. மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஹோட்டல்கள் எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் மூடப்பட்டு வருகிறது.

    இதனால் ஹோட்டலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அதை நம்பி உள்ள கிக் தொழிலாளர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
    உலக மேலாதிக்க போரை கண்டித்து இதுவரை வாயை திறக்காத மோடி மக்களை பற்றி கீஞ்சிற்றும் கவலைப்படாமல் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்து வருகிறார் .

    மக்களின் வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஏகாதிபத்திய போரையும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம்.

    தோழர் நலன்:
    கட்டுரை சிறப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here