நான் ஸ்லீவ்லெஸ் போட்டா உனக்கென்ன?
புருஷன் சாவில்
நடனம் குற்றம்!
பூக்கடையில்
சிலீவ்லெஸ் குற்றம்!
மலர் கடையில்
மனுவின் நாற்றம்!
பருவப் பெண்களுக்கு
பாவாடை தாவணியும்,
பதியை இழந்தவளுக்கு
வெள்ளை சேலையும்,
பொட்டு இல்லா நெற்றியும்,
முடி மழித்து மொட்டையும்…
வயதுகேற்ப, எங்களுக்கு
ஆடை குறியீடு,
ஆணாதிக்க சமூகம் தான்
பெண்ணுக்கு பெருங்கேடு!
“நான் ஸ்லீவ்லெஸ்
போட்டா உனக்கென்ன” ?
புடவை அணிந்தால்
உனக்கென்ன?
ஆடை அணிவது
அவரவர் உரிமை,
பொசுங்கி அழியட்டும்
போலி கலாச்சார பெருமை.
புருஷன் செத்தா
மூலையில் உட்காந்து
அழனும்!
பூக்கடைக்கு
போத்திக்கிட்டு
தான் வரணும்!
உடன்கட்டை கேட்டு
ஊர்வலம் செல்லும்
காட்டுமிராண்டிகளா,
உங்க மனநோய்க்கு
தான் உடனடியா
மருந்து தரணும்..
எங்கு எந்த ஆடை
அணியனும்னு
எங்களுக்கு தெரியும்!
இனியும் வாலாட்டினா
உங்க கலாச்சார பர்னிச்சர் உடையும்!
மார்டன் ‘மனு’க்களே!
பெண்களை மதிக்க கத்துக்கோங்க!
உங்கள்
சங்கர மட
சரக்கை
பெட்டியில் பூட்டி வச்சுக்கோங்க…
– இளமதி
ஆணாதிக்கவாதிகளுக்கு – மனுதர்மவாதிகளுக்கு பாடம் புகட்டும் சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.