கர்நாடகா ‘தர்மஸ்தலா’ – ‘இந்துத்துவ கோவில்’ என்ற பெயரில் செயல்படும் ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ சங் பரிவார் கூட்டத்தின் கொள்ளை – கொலை – பாலியல் வல்லுறவு போன்ற கொடுஞ்செயல்களை பல வருடங்களாக செய்து வருவதை ‘மக்கள் அதிகாரம்’ இணையதளத்தின் கட்டுரை வாயிலாக அறிந்திருப்போம்.
தற்போது இந்த வீடியோவில் நீலகிரி மாவட்ட ‘மக்கள் அதிகாரம்’ செயலாளர் தோழர் வெங்கட் ‘தர்மஸ்தலா’வில் நடைபெறும் அனைத்து இழி செயல்களையும்,
கொடூரச் செயல்களையும் புள்ளி விவரங்களோடு அம்பலப்படுத்தி, பேராபத்தினை புரிந்து மக்கள் வினையாற்ற வேண்டிய கடமைகள் குறித்து தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார்.
இந்துத்துவ சங்பரிவார் கூட்டம் அனைத்துவித அதிகாரங்களிலும் ஊடுருவி இந்து மக்களையே படாத பாடு படுத்துகின்ற கொலைபாதகச் செயல்கள் குறித்து அனைத்துப் பெரும்பகுதி ஊடகங்களும் மவுனம் சாதிக்கின்றன.
சங்கிகளை விட்டுத் தள்ளுங்கள். மற்ற பிற அரசியல் கட்சிகள் அந்த அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வீதியில் இறங்கி போராடாமல் இருக்கின்றன.
இத்தகு கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீலகிரி மாவட்ட மக்கள் அதிகாரச் செயலாளர் அறைகூவல் விடுத்திருப்பது போல் மக்கள் அணி திரண்டு வீதியில் இறங்கி போராட வேண்டும். ‘தர்மஸ்தலா’வை மூட வேண்டும். கைப்பற்ற வேண்டும். கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எழில்மாறன்
