சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்: தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும்!


டந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுகிற இச்சட்டம், உயர் கல்வியைத் தனியார்வசம் ஒப்படைப்பதாக அமையும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இதனால், எளிய குடும்பங்களைச் சேர்ந்த – குறிப்பாகப் பட்டியல் சாதி / பழங்குடி, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வி உரிமை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம்.சின்னதுரை இருவரும் முதல் வரைச் சந்தித்து, இந்தச் சட்டத் திருததத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மசோதாவின் மீது நடைபெற்ற விவாதத்திலும் நாகை மாலி இதே கருத்தை வலியுறுத்தினார். இருப்பினும், சட்டத் திருத்தம் நிறைவேற்றப் பட்டுவிட்டது.
சமூக நீதிக்குப் பாதிப்பு

2021-22ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர் கல்வி ஆய்வின்படி (All India Survey on Higher Education) உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. கேரளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசுப் பல்கலைக் கழகங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் ஆகியவற்றின் சிறப்பான செயல்பாடே உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்ப தற்கான காரணம்.

அரசின் முன்னெடுப்புகள் சாதாரணக் குடும்பங்களுக்குக கல்வியைக் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளன. தமிழ்நாடு அரசு நேரடியாக நடத்தும் கல்வி நிலையங்கள், ஏழை மாணவர்களின் உயர் கல்வித் தேவையைப் பூர்த்திசெய்கின்றன.
தமிழ்நாட்டில் 161 அரசு உதவிபெறும் கலை – அறிவியல் கல்லூரிகள் இயங்கிவரு கின்றன. இவற்றில் மொத்தம் 77,680 மாணவர்கள் தற்போது பயின்றுவருகின்றனர்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர் சேர்க்கையில் அரசு அங்கீகரித்த மாணவர்கள் எண்ணிக்கையில் 10 சதவீதத்தைக் கல்லூரி நிர்வாகம் தீர்மானிக் கிறது. மீதம் உள்ள 90 சதவீத இடங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அனுமதிக்கப் படுகிறது.

இதில் பட்டியல் சாதி / பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயனடைகின் றனர். இதனால் மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி நிலையங்களில் இடம் கிடைக்காத மாணவர்கள் பெரும்பான்மையாக அரசுக் கல்லூரிகள் அல்லது அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள்.

தற்போது திருத்தப்பட்ட தனியார் பல்கலைக் கழகச் சட்டத்தின் அடிப்படையில் அரசு கல்லூரிகள் அல்லது அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அரசு அல்லது அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் இடஒதுக்கீடு சதவீதத்துக்கும் தனியார் பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுக்கும் பெரிய இடைவெளி உள்ளது. ஆகவே, இச்சட்டத் திருத்தம் இடஒதுக்கீடு மீதும், சமூக நீதி மீதும் கடும் பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் (2019) அடிப்படையில் மொத்த இடங்களில் இடஒதுக்கீட்டுக்கு 35 சதவீதமே ஒதுக்கப்படுகிறது. இதனால், அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட்டால் பாதிப்பு ஏற்படும். உதாரணமாக, தூத்துக்குடி ‘வ.உ.சிதம்பரனார் அரசு உதவிபெறும் கல்லூரி’யில் 2025-2026ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர் களின் எண்ணிக்கை 1,988.

இதில், இடஒதுக் கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் 923, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 337, பிற்படுத் தப்பட்ட இஸ்லாமியர் 57, பட்டியல் சாதியினர் 560, பட்டியல் சாதி அருந்ததியர் 40, பழங்குடி யினர் 4 என மொத்த மாணவர்களில் 1,921 பேர் இடஒதுக்கீட்டினால் பயன் பெற்றுள்ளனர்.

இந்தக் கல்லூரி, தனியார் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டால், மேற்கண்ட எண்ணிக்கையில் இடஒதுக்கீடு கிடைக்காது. புதிய சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டில் அரசு ஒதுக்கீடு 65 சதவீதம், சிறுபான்மை நிறுவனமாக இருந்தால் அரசு ஒதுக்கீடு 50 சதவீதம் என அளிக்கப்பட்டுள்ளது.

கல்விக் கட்டணம் எகிறும்

அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள், தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றப் பட்டால் தற்போது நடைமுறையில் உள்ள கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப் படும் ஆபத்தும் உள்ளது. உதாரணமாக, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பி.காம். படிப்புக்கு ஆண்டுக்குக் கல்விக் கட்டணம் தற்போது ரூ.8,050.

இதுவே, சுயநிதிக் கல்லூரிகளில் தற்போது பி.காமுக்கு ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை உள்ளது. தனியார் பல்கலைக் கழகங்களில் பி.காம். கட்டணம் தற்போது சுமார்
எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து உயர் கல்வி பயில முடியுமா?
ஆசிரியர்கள் அலுவலர்கள்

தமிழகத்தில் உள்ள 161 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் தற்போது 8,367 ஆசிரியர்களும் 3,508 அலுவலர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஊதியமும் மற்ற சலுகைகளும் வழங்கிவருகிறது மாநில அரசு. இந்தக் கல்வி நிலையங்கள், தனியார் பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட்டால் ஆசிரியர்கள், அலுவலர்களுடைய ஊதியம் உள்ளிட்ட பணி நிலைமைகள் மாற்றப்படும். இதனால் ஆசிரியர்
அலுவலர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

படிக்க:

 உயர்கல்வி சிறந்த தமிழ்நாட்டில் மூடு விழா காணப்போகும் முதற் பல்கலைக்கழகம்!

 மாநிலப் பள்ளிக் கல்விக் கொள்கை வெளியீடு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (SPCSS-TN) அறிக்கை

தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் பிரிவு 11 கீழ்க்கண்டவாறு உள்ளது: ‘ஒவ்வொரு தனியார் பல்கலைக்கழகமும் ஒரு சுயநிதிப் பல்கலைக்கழகமாக இருக்கும். அவை அரசிடம் இருந்து பராமரிப்புச் செலவுகள், உதவி மானியங்கள் அல்லது வேறு எந்த நிதி உதவியையும் கோர முடியாது. அவற்றுக்கு அந்த உரிமையும் கிடையாது.’

அரசு உதவிபெறும் கல்லூரிகளாக இருந்த வரையில் ஊதியம், சலுகைகள் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் உள்ளது. தனியார் பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட்டால், அந்த உத்தர வாதமும் இல்லை. இதனால் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாதிக்கப்படுவர்.

அரசு உதவிபெறும் கல்லூரிகள், புதிய சட்டத் திருத் தத்தின்படி தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டால், ஏழை, எளிய நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படு வார்கள் என்பதோடு, உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தற்போது தமிழ்நாடு வகித்து வரும் முதலிடமும் பாதிப்புக்கு உள்ளாகும். ஏற்கெனவே, தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய நிதிஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக விமர்சனங்கள் உண்டு.

மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து உறுதியாகப் போராடிவரும் தமிழக அரசு, உயர் கல்வி உள்ளிட்ட மாநில மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்தச் சட்டத் திருத்தம் மறுபரிசீலனை செய்யப்படுவதே கல்வி உரிமை​யை​யும் சமூக நீதியை​யும் உயர் கல்வியில் தமிழ்​நாட்டின் முன்னேறிய நிலையையும் தொடர்ந்து உறுதிசெய்​யும்​!

ஜி.ராமகிருஷ்ணன்

நன்றி: தமிழ்இந்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here