பணி நிரந்தரம் கோரி போராடிய
தூய்மைப் பணியாளர்களை
நள்ளிரவில் துரத்தியடித்த போது
மார்க்ஸ் ரிப்பன் பில்டிங் வாயிலில்
தொழிலாளர்களுக்கு
துணையாக நின்றிருந்தார்…
சங்க அங்கீகார உரிமைக்காக
சாம்சங் தொழிலாளர்கள்
போராடிய போது
அந்த 2000 பேரில் ஒருவராய்
போராட்ட பந்தலில் அமர்ந்திருந்தார்…
முதலாளிகளுக்கு எல்லாம் தள்ளுபடி;
தொழிலாளிகள் போராடினால் தடியடி!
தமிழ்நாடு தவிர்த்து
உலகத் தொழிலாளர்களே
ஒன்று சேருங்கள்
என்றா சொன்னார் மார்க்ஸ்?
பணி நேரம் கூட்டி
உரிமைகளை கழித்து
முதலீடுகளை பெருக்கி
தொழிலாளர்களை வகுக்கும்
திராவிட மாடல் கண்களுக்கு
மார்க்ஸ் தெரிய வாய்ப்பில்லை.
ஆக்ஸ்போர்டில் பெரியார் படமும்,
ஹைகேட் மார்கஸ் விசிட்டும்,
தேர்தல் அரசியலுக்கு தானெனில்
உழைக்கும் மக்களின்
போராட்ட உணர்வில்
சோசலிசம் மலரும்!
செங்குருதி சிந்தி
செங்கொடி உயரும்!
- செல்வா
சிறப்பு! எனினும் ‘சோசலிசம் மலரும்’ என்ற வார்த்தகளை இறுதியில் பதிவிட்டிருக்கலாம்.