சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கலவரம் நடந்தது என்ன? | வீடியோ

புமாஇமு தோழர்களின் கள ஆய்வில் மக்கள் அளித்த பேட்டிகளை வாசகர்களின் பார்வைக்கு வெளியிடுகிறோம்.

0

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில், மாரியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதின் பேரில் நடந்த கலவரம் குறித்தான கள ஆய்வு செய்யப்பட்டது.

மக்களிடையே நேரடியாக சந்தித்து கலந்துரையாடிய போது அவர்கள் பட்ட இன்னல்களையும், அந்த கலவரத்தின் தகவல்களையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

வயதான முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அங்கு நடந்த கலவரம் குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். முதியோர்கள் கூறும் பொழுது அவர்களுக்கு விவரம் தெரிந்த நாள் முதலேயே தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில், தாங்களும் வழிபாடு செய்து வருவதாகவும், மேலும் அந்த கோவிலானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல எனவும், அங்கு பல்வேறு சமூகத்தை சார்ந்த மக்கள் வழிபட்டு வந்ததாகவும், தாங்களும் அவர்களோடு இணைந்து கோவிலில் நுழைந்து வழிபட்டு வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

கலவரத்திற்கு முந்தைய நாள் (01.05.2024) இரவு எப்போதும் போல தாழ்த்தப்பட்ட மக்கள், அவர்களது பகுதியில் இருந்து அலகு குத்திக்கொண்டு மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த பூசாரி அவர்களை கோவிலுக்குள் நுழைவிடாமல் தடுத்தும், அலகினை நாங்கள் அகற்ற மாட்டோம்! நீங்கள் வெளியே நின்று சாமி கும்பிட்டு விட்டு அப்படியே திரும்பி செல்லுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

முழு ஆய்வையும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: சேலம் தீவட்டிப்பட்டி நேரடி கள‌ ஆய்வு – புமாஇமு அறிக்கை

இது குறித்து அந்த பகுதி மக்களின் நேரடி காணொளியை வெளியிடுகிறோம்…

பார்க்கவும்… பகிரவும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here