நாம் தமிழர் அல்லது நாஸி ஜெர்மனியர்! ஒரே கட்சி, ஒரே கொள்கை!!

0

திரைப்படம் ஒன்றில் கைப்பிள்ளையாக வரும் நடிகர் வடிவேலுவை பார்த்து “உன்ன அடிச்சும் பார்த்தாச்சு, அவுத்தும் பார்த்தாச்சு” என்று ஒரு கதாபாத்திரம் கூறும். அதே போல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேச்சில் உள்ள பொய்களை அம்பலப்படுத்தி மீம்ஸ்களும் காணொலிகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. ஆனாலும் ‘அண்ணன்’ அடங்குவதாக தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு கோமாளிக்கு பின் ஒரு பாசிச திட்டம் உள்ளது என்று கூறினால் பலரும் நம்புவதில்லை. ஆனால், எதார்த்தத்தில் அப்படி ஒன்று இருக்கவே செய்கிறது.

ஹிட்லர் முதல் நம்ம ‘ஜி’ வரை மக்களை கொத்துக் கொத்தாக கொல்லத் துணியும் கொடூர பாசிஸ்டுகள் பலரும் வேறோரு கோணத்தில்
கோமளிகளாக இருந்ததை பார்த்து இருக்கிறோம்.

இந்த பாசிஸ்டுகளின் வளர்ச்சிக்கு சமூக அடித்தளம் – வேலையின்மை, நிலையற்ற வாழ்க்கை, இருந்த வாழ்க்கை பறிபோனது என முதலாளித்துவ சுரண்டலால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தான். அவர்களை ஈர்க்கும் வகையில் வெற்றுச் சவடால் பேச்சு; நடத்தவே முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கும் பாசிஸ்டுகள் ஒரு போலியான எதிரியை கட்டமைக்கிறார்கள். அந்த எதிரிகளால் தம் வாழ்வு சீரழிந்ததாக நம்ப செய்கின்றனர். அதன் அடிப்படையில் ஒரு இயக்கத்தையும் வளர்த்தெடுக்கின்றனர்.

ஆரம்பத்தில் சிறியதாக, பொருட்படுத்தத்தக்க அளவில் இல்லை என்றாலும் அதிகரிக்கும் சமூக பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்கள் இயக்கம் வளரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே, பாசிஸ்டு இயக்கம் சிறிதோ, பெரிதோ அம்பலப்படுத்துவது நம் கடமையாகிறது.

தோழர். கலையரசனின் இந்த காணொலி ஒரு ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டது எனினும் அதன் பயன் கருதி தற்போது நமது தளத்தில் வெளியிடுகிறோம்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here