தமிழ்நாடு இன்று மட்டுமல்ல பன்னெடுங்காலமாக சனாதனத்திற்கு எதிராக சமர் புரிந்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கோவில்கள் அதிகம். இருந்தாலும் கடவுள் மறுப்பு கொள்கையை பேசக்கூடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியாரை ஏற்றுக் கொண்ட மாநிலம் தான் தமிழ்நாடு.
இராஜகோபாலாச்சாரி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை தடுத்து நிறுத்தியது அன்றைய பெரியாரின் போராட்டம். அது மட்டுமல்லாமல் அவரை ஆட்சியில் இருந்தும் துரத்தியடித்தார்கள் மக்கள்.
இப்போது ஆண்டுக் கொண்டிருக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசு குலக்கல்வித் திட்டத்தை நவீனமாக புகுத்த நினைக்கிறது. ஏற்கனவே புதியக் கல்விக் கொள்கையில் அத்தகைய திட்டத்தினை வைத்து தான் செயல்படுகிறது.
தற்போது விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் நவீன குலக்கல்வி திட்டத்தினை நடைமுறைப்படுத்துகிறது. இதனை கண்டும் காணாமல் விட்டோம் என்றால் நாளை நமது தலைமுறை படிப்பறிவு அற்றவர்களாய் பாட்டன் தொழிலை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். இதனை அம்பலப்படுத்தி பேசியுள்ளார் மக்கள் அதிகாரத்தின் மாநில துணைச் செயலாளர் தோழர் மூர்த்தி. காணொளியை பாருங்கள்… பரப்புங்கள்…