தனியார் மயமாக்கப்படும் தண்ணீர்! கோவை மாநகராட்சியில் முன்னோட்டம் பார்க்கிறதா அரசு?
ஏற்கனவே suez நிறுவனம் தண்ணீர் வழங்கும் வேலையை கோவை மாநகராட்சி ஒப்படைத்திருக்கிறது. இதற்காக மக்களின் வரிப்பணம் 3000 கோடிக்கு மேல் suez நிறுவனத்திடம் சென்றிருக்கிறது.
இந்த நிலையில் கோவையில் இராமநாதபுரம் பகுதியில் WATER ATM திறந்து வைத்திருக்கிறார் பாஜகவின் வானதி சீனிவாசன். இது எத்தனை நாளைக்கு இலவசமாக வழங்கப்படும் என்பதை அறிவிக்கவில்லை.
முதலில் ஜியோ இலவசம் கொடுத்து மக்களை பழக்கப்படுத்தி பின்னர் பணம் புடுங்கியது போல், நாளை WATER ATM-ல் பணம் செலுத்தினால் மட்டும் தான் தண்ணீர் பெற முடியும் என்ற நிலை உருவாகலாம்.
ஏனென்றால் அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி பாஜக கும்பல் தண்ணீரை மட்டும் விட்டு வைக்குமா என்ன? இது குறித்து கோவை மாவட்ட புஜதொமு துணைத் தலைவர் தோழர் கோபிநாத் கணொளியின் மூலம் விளக்குகிறார். பாருங்கள் பகிருங்கள்….