ஒன்பது வருடங்களாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் எம்ஆர்பி செவிலியர்களை தமிழ்நாடு அரசு வஞ்சித்து வருகிறது.
இதனை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனர். அங்கேயே இரவு முழுவதும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்த செவிலியர்களை மீண்டும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
இந்தப் போராட்டம் குறித்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில இணை செயலாளர் அளித்த பேட்டியினை பதிவிடுகிறோம்.







