ஜனவரி 26 நாடு முழுவதும் டிராக்டர் பேரணி | தோழர் கே.பாலகிருஷ்ணன் அறைகூவல்

0

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசை கண்டித்து நாடு முழுவதும் டிராக்டர் பேரணியை அறிவித்துள்ளது ஐக்கிய விவசாயிகள் முன்னணி(SKM)!

வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி நடக்கும் போராட்டத்திற்கு நாம் ஏன் கலந்துக் கொள்ள வேண்டும் என்று பேசி அறைகூவல் விடுக்கிறார் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள்…

000

டந்த ஓராண்டுக்கு முன்னர் இந்திய விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு மாபெரும் உழவர் போராட்டத்தை நடத்தினார்கள். 300 நாட்களை கடந்த போராட்டத்தில் விவசாயிகளின் ஒற்றுமையை பார்த்து குலைநடுங்கிய மோடி அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது.

ஆனால், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. அதனையொட்டி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களி நடத்தி வருகிறார்கள்.

உபி லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த பாஜக எம்பி அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் கார் ஏற்றிக் கொன்றதை நியாபடுத்துகிறது ஆளும் பாசிச பாஜக அரசு!

இப்படி போராடிய விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஒட்டு மொத்த இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது மோடி அரசு.

விவசாயிகள் அவர்களது தனிப்பட்ட நலனுக்காக மட்டும் போராடவில்லை ஒட்டு மொத்த இந்திய மக்களின் வருங்காலத்திற்காக போராடுகிறார்கள் என்பதை உணர்ந்து இந்த போராட்டத்தை அனைத்து மக்களும் ஆதரித்து கலந்துக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here