பங்களா நாய்க்கு உரிய விலை உண்டு! விளைபொருளுக்குத் தான் உரிய விலை இல்லை! – தோழர்.ஜெயராமன் || புஜதொமு

0

 

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர், தோழர். ஜெயராமன் செப்டம்பர் 27 முழு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேளாண் சட்டத்திருத்தத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் செப்டம்பர் 27 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு இரண்டும் இணைந்து அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் அதிகாரம் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவர்கள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அறிவுத்துறையினர் அனைவரிடமும் கொண்டு சேர்த்து வருகிறது, அந்த வகையில் இந்த பிரச்சாரத்தை ஆதரித்து பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கத்தினர், விவசாய சங்கங்கள் தனது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு வெளியிடுகிறோம். செப்டம்பர் 27 நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம்! கார்ப்பரேட் – காவி பாசிச மோடி அரசு கும்பலை வீழ்த்தும் போராட்டத்தில் ஒன்றிணைவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here