தமிழகத்தை கலவர பூமியாக முயல்கின்ற ஆர்எஸ்எஸ் குண்டர் படை தமிழகத்தில் பல இடங்களில் ரகசியமாகவும் சில இடங்களில் வெளிப்படையாகவும் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
பொது வெளியில் சாதாரண மக்கள் தற்காப்புக்காக ஏதாவது குச்சிகளை வைத்து இருந்தால் கூட தவறு என்று உபதேசம் செய்கிறது போலீஸ். ஆனால் ஒரு மாநிலத்தையே அமைதி குறைத்து வன்முறைக் களமாக மாற்றுவதற்கும் அந்த அமளியில் நாட்டை கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு வழிவகுத்துக் கொடுப்பதற்கும் எத்தனிக்கிறது ஆர்எஸ்எஸ் குண்டர் படை.
கோவையில் தர்ம சாஸ்தா பள்ளியில் பயிற்சி நடக்கிறது. இதை எதிர்த்துப் போராடிய தோழர்களை சிறையிலடைத்து ஒடுக்குகிறது தமிழக அரசு.ஆனால் பாசிஸ்டுகளின் பயிற்சிக்கு அனுமதி அளிக்கிறது.
மக்கள் அதிகாரம் தோழர்களும் பிற ஜனநாயக அமைப்புகளும் இதை எதிர்த்து போராடிய காணொளியை இத்துடன் வெளியிடுகிறோம்.