பத்திரிக்கைச் செய்தி!


நாள் 4-10-2021

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ஆகிய பாஜக தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக் கொடி காட்டினர். அப்போது விவசாயிகள் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். ஒன்றிய அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் பயணம் செய்த அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி நான்கு பேரைக் கொன்றுள்ளான். மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த அளவு அரசு அதிகாரத்தை வேறு யாரும் இவ்வளவு கேடாகப் பயன்படுத்தியிருக்க முடியாது. இதில் ராமன் கஷ்யாப் என்ற பத்திரிக்கையாளரும் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த படுகொலைச் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 4-10-2021 இன்று போராட்டம் நடத்த வேண்டும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

  1. ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அவரது மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும்.
  2. வன்முறை நிகழ்த்திய பா.ஜ.க ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
  3. நடந்த வன்முறை சம்பவத்தின் மீது உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நீதிவிசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
    ஒன்றிய ஆட்சியிலிருக்கும் பாசிச பா ஜ க கும்பல் ஒரு கொடிய கொலைகாரக் கும்பல் என்பதை மீண்டும் மீண்டும் மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறது. தேச விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி கடந்த பத்துமாதமாக அமைதியாக நடந்து வரும் போராட்டத்தை சீர்குலைக்கப் பலசூழ்ச்சிகளைச் செய்து வருகிறது. தற்போது விவசாயிகளைக் கொலை செய்யவும் துணிந்து விட்டது மோடி அரசு.
    புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்பதற்கு ஒரே காரணம் அம்பானி அதானிகள் விவசாய நிலங்களை, விளைபொருட்களை கொள்ளையடிக்க முடியாது என்பதுதான். இதற்காக எத்தனை விவசாயிகளையும் பலிகொடுக்ககலாம் என மோடி அரசு முடிவு செய்து விட்டது. இந்த பச்சைப் படுகொலை குறித்து மோடியோ அமித்ஷாவோ இதுவரை வாயே திறக்கவில்லை. இக்கொலைகளுக்குப் பொறுப்பேற்று இருவரும் பதவி விலக வேண்டும். போராடும் விவசாயிகளின் நியாயத்தை ஏற்பதற்கு மாறாக அவர்களைப் பட்டப்பகலிலேயே கொலை செய்யவும் துணிந்துவிட்டது மோடி அரசு. அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் விவசாயிகளைத் தாக்க குண்டர் படையை அமைக்க வேண்டுமென வெளிப்படையாகவே அறிவிக்கிறார். பாசிச பா ஜ க சட்டத்தை மதிக்காத கிரிமினல் கும்பல் மட்டுமல்ல, மக்கள்விரோத, தேசவிரோத சக்தி. இனியும் பா ஜ க கும்பலை ஆட்சி அதிகாரத்தில் வைத்திருப்பதைப் போல பேராபத்து வேரெதுவுமில்லை.

தோழமையுடன்
காளியப்பன்,மாநில பொருளாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here