சென்னையில் நேற்று நடந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு டிஜிட்டல் மட்டும் அச்சு ஊடகங்களில் இன்றைய தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

அந்த செய்திகளில் உள்ளதுபோல் புரிந்து கொள்ளாமல் அதிமுகவிற்குள் என்ன நடக்கிறது என்பதை ஒரு பருந்து பார்வையில் பார்ப்போம்.

திராவிட இயக்கத்திற்கு சாவு மணி அடிப்பதற்கென்று சங்கராச்சாரி தலைமையில் செயல்பட்ட அடுப்பாங்கரை குழு (kitchen cabinet) பாசிச ஜெயாவை எம்ஜிஆரின் வாரிசாக கொண்டுவந்தனர்.

ஒரு பார்ப்பன பாசிஸ்ட்டின் தலைமையின் கீழ் கடைந்தெடுத்த பிழைப்புவாத, பொறுக்கி கும்பலாக வளர்ந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆரிய மாயை என்ற நூலை எழுதி பார்ப்பனக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்த அண்ணாதுரையின் பெயரை கொச்சைப்படுத்துகின்ற வகையில் அனைத்திந்திய அண்ணா திமுக என்று பெயரை பயன்படுத்திக்கொண்டே பார்ப்பன சேவையில் இறங்கினர்.

உண்மையில் அது அனைத்திந்திய அய்யர் திமுக என்று சொல்வதே பொருத்தமானது. ஸ்ரீரங்கத்தில் பிறந்த அய்யங்கார் மாமி திரைப்பட உலகில் எம்ஜிஆருக்கு கதாநாயகியாக நடித்ததுடன் மட்டுமின்றி ஆசை நாயகியாகவும் வாழ்ந்த காரணத்தால் ஒரு விபத்தைப் போல அதிமுக என்ற கட்சிக்கு தலைவரானார். அதை சரியாக பார்ப்பனக் கும்பல் பயன்படுத்திக்கொண்டது.

அவரது தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது பார்ப்பன கும்பல் பூணூலை உருவிக் கொண்டு நேரடியாக தமிழகத்தில் ஆட்சியை நடத்தியது. அதுவரை அம்மாஞ்சிகளாக அடங்கி ஒடுங்கி கிடந்த பார்ப்பனர் சங்கம் “நடப்பது நம்மவா ஆட்சி” என்ற தைரியத்துடன் வீதியில் இறங்கி ரகளையில் ஈடுபடத் துவங்கினர்.

மற்றொருபுறம் பாசிச ஜெயாவின் தலைமையில் செயல்பட்ட கடைந்தெடுத்த பிழைப்புவாத பொறுக்கி கும்பல் தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை துவங்கி கனிம வளங்களை சூறையாடுவது வரை பல ஆயிரம் கோடி ரூபாய்களை குவித்தனர். திடீர் கல்வி வள்ளல்களாக மாறி தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களை உருவாக்கி கல்விக் கொள்ளையில் ஈடுபட்டனர்.

தொண்டர்கள் தான் என்ன செய்தாலும் கடமை தவறாமல் கண்ணியத்துடன் கொள்ளைக் கூட்டத்தின் தலைவிக்கு கப்பம் கட்டி கழகத்தின் கட்டுப்பாட்டை காத்து வந்தனர்.

தமிழ் தேசிய விடுதலைக்காக குரல் கொடுக்கின்ற அமைப்புகள் துவங்கி நக்சல்பாரி இயக்கங்கள் வரை அனைத்தையும் கடுமையாக ஒடுக்கி தடா, என்எஸ்ஏ போன்ற சட்டங்களின் கீழ் சிறையில் அடைத்து செயல்பாடுகளை முடக்க பார்ப்பனக் கும்பலின் கருவியாக பயன்பட்டார் பாசிச ஜெயா.

பாசிச ஜெயா செத்து ஒழிந்த பின்னர் அந்தக் கட்சி வேரும் விழுதும் இல்லாமல் காணாமல் போகும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்நோக்கியிருந்தனர்.

ஆனால் சுமார் ஒரு கோடிக்கும் மேல் உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவை தனது பினாமி கும்பலாக மாற்றுவதன் மூலம் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கொல்லைப்புற வழியில் கைப்பற்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி திட்டம் போட்டு செயல்பட்டுக் கொண்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் மிச்ச சொச்சங்களை உயர்த்திப் பிடித்து ஓரளவு கொள்கை, கோட்பாடுகளை பேசி வருகின்ற திமுகவை முற்றாகத் துடைத்து எறிவதற்கு தான் ஒரு புறம் வேலை செய்து கொண்டிருக்கும்போதே தனது பினாமி கும்பல் அதிமுக மூலம் வேலை செய்கின்ற நரி தந்திரத்தை பாஜக கையாண்டது.

ஜெயாவின் மறைவிற்குப் பிறகு தர்ம யுத்தத்தில் இறங்கிய பன்னீர், மோடி சொல்லி தான் எடப்பாடியுடன் ஒத்து போனேன் மோடி அமித்ஷா தான் சூத்திரதாரி. அவர்கள் கூறியதால் தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் என்று பச்சையாக தனது அரசியல் விபச்சாரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திமுகவை வீழ்த்துவதற்கு பல்வேறு செயல் திட்டங்களை அமல்படுத்தகின்ற பாரதிய ஜனதா அண்ணாமலை தலைமையில் A டீம் ஆக செயல்படுவதுடன், பன்னீர் மற்றும் பழனிச்சாமி தலைமையில் பினாமி கும்பலை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இதன் உச்ச கட்ட நடவடிக்கையாக பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமையை உருவாக்குவது என்ற திசை வழியில் செல்கின்ற அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பன்னீர்செல்வம் மூலம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இப்படிக் கூறுவதால் எடப்பாடி ஏதோ பாஜகவிற்கு எதிரான சிந்தனை கொண்டவர் என்றும் மாநிலங்களின் உரிமைகளை பேசி போராடுகின்ற போராளி என்றோ கருதிக் கொள்ள கூடாது.

ஓட்டுக் கட்சிகளுக்குள் சில நேரங்களில் பேரம் படியாத போது இதுபோல முரண்டு பிடிப்பதும், டீல் முடிந்தவுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்வதும் ஒன்றும் ரகசியமாக இல்லை. யார் டீல் பேசுவதில் திறமையாக உள்ளார்கள் என்று மாமா வேலைக்கு மரியாதை தேடும் அளவிற்குதான் அரசியலின் தரம் உள்ளது.

மாநிலங்களில் உள்ள இதுபோன்ற கொள்கை, கோட்பாடு என்ற அடிப்படைகள் இன்றி, கும்பல் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு செயல்படுகின்ற கட்சிகளை தனது பிடிக்குள் கொண்டு வருவதன் மூலம் பார்ப்பன இந்திய தேசியத்தை ஒன்றுபடுத்தி காவி மயமாக்கும் வேலையை விரைவுபடுத்துகிறது பாஜக.

கார்ப்பரேட்டுகளுக்கு வில்லாமல் விரியாமல் அகண்ட சந்தையை தூக்கி கொடுப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

படிக்க

இத்தகைய அரசியல் கழிசடை தனங்களை ராஜதந்திரம் என்று ஊடக மாமாக்கள் வாங்கிய காசுக்கு மேல் கூவிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் உண்மையான அரசியல், பொருளாதார பிரச்சனைகளை பேசாமல், ”பன்னீர் சென்ற கார் டயர் பஞ்சர்”, “டெல்லிக்கு உடனே சென்றார் பன்னீர்”, “திடுக்கிடும் திருப்பங்கள்”, “மூன்று நிமிடத்தில் முடிந்தது பொதுக்குழு” என்று பக்கத்துக்கு பக்கம் சூடான தகவல் என்ற பெயரில் வடை சுட்டு விற்கின்றனர்.

இத்தகைய அரசியல் கழிசடை தனங்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அண்டங்காக்கைகளின் சத்தம் பெரிதாக கேட்கிறது என்று அசந்து விடவும் கூடாது.

ஒரு கல்லை விட்டு எறிந்தால் பறந்துபோகும் காக்கா கூட்டத்தைப் போலத்தான் அதிமுக போன்ற கொள்கை, கோட்பாடற்ற ஓட்டுக் கட்சிகள் என்பதை ஒவ்வொரு அம்சத்திலும் சுட்டிக்காட்டி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துகின்ற வேலையை தொடர்ந்து கொண்டு செல்வோம்.

 • செல்வம்

3 COMMENTS

 1. திமுக விற்க்கு முட்டு கொடுப்பது அரசியல் கழிசடை தனத்தில் சேராதா?

  • நண்பர் வேலுச்சாமி பதில் சொல்வது வீண் தான். இருந்தாலும் சொல்ல வேண்டியது கடமை. எத்தனை காலம் திமுக புராணம் பாடிக் கொண்டிருக்க போகிறீர்கள். உங்கள் குழுவை வளர்க்க முயற்சி செய்யுங்கள். பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுங்கள்.

   முதன்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நாங்கள் தான் திமுகவின் வால் என்று முடிவு செய்து விட்டீர்கள். பிறகு ஏன் எங்கள் வாலை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

   வினவு பக்கத்தில் ஜனநாயகமற்ற நபர்கள் அமர்ந்துள்ளார்கள் போலும். கருத்தை கூட அனுதிப்பதில்லை. அனைத்து கருத்துக்கும் இடம் கொடுக்க போராடுங்கள். நாளை உங்களது கருத்தையும் புறக்கணிக்கலாம்.

 2. அதிமுகவைப் பற்றி எழுதும்போது திமுகவையும் எழுத வேண்டும் என்று யாரோ எடுத்த வாந்தியை வேலுச்சாமி மறு வாந்தி எடுக்கிறார்.
  இதன் மூலம் தாங்கள் செய்யும் பார்ப்பன கும்பலின் சேவைக்கு ஆபத்து வந்துவிட்டது என்று பதறுவது அவரையும் மீறி சட்டைக்கு வெளியே தெரிகிறது.
  கட்டுரையின் மையமான பொருளை பற்றி விவாதிக்காமல் தனக்கு பிடித்தமான விஷயங்களை கமெண்ட் போடுவது தற்போது ஒரு ஃபேஷனாகிவிட்டது.
  கம்யூனிச இயக்கங்களை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ஒழித்துக்கட்ட விரும்பும் இதுபோன்ற ஓநாய்களை தக்க சமயத்தில் மக்கள் கவனித்துக் கொள்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here