சிறுவர்களின் ரியால்டி ஷோவை பார்த்து கதறும் சங்கிகள்

ஜீ தொலைக்காட்சியில் சிறுவர்கள் நடித்த சிறிய நகைச்சுவை நாடக காட்சியில் இந்தியா என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் சிஇஓ-வாக செயல்படுகின்ற மோடியின் யோக்கியதையை அம்பலப்படுத்தினர். லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை பற்றி கேள்வி எழுப்பினர். ஆனால் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத ஆர்எஸ்எஸ் கோழைகள் நிகழ்ச்சியை ரத்து செய்வது பற்றியும், அதை முடக்குவது பற்றியும், அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேசித் திரிகின்றனர். பிரதமரின் இமேஜ் பாதிக்கப்பட்டு விட்டதாக ஓலமிடுகின்றனர்.

ஆனால் பத்தாயிரம் கோடிக்கு மேல் சொத்துடைய சி இஎல்(CEL) நிறுவனத்தை வெறும் 200 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். மோடியின் யோக்கியதை நாறுகிறது. எத்தனை கோடி கை மாறியுள்ளது என்பதை கேள்வி கேட்டால் உங்கள் இமேஜ் போய்விடுமா? நாட்டின் சொத்துக்களை விற்பதற்கு உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? பெரும்பான்மை மக்களை பார்ப்பன மதவெறி, மூடநம்பிக்கையில் ஆழ்த்தி விட்டு தேசத்தின் சொத்துகளை கூறுபோட்டு விற்பதற்கு பெயர் என்ன?

♦♦♦

டந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி உள்ளது ஜீ டிவி ரியாலிட்டி ஷோவில் குழந்தைகள் பங்குபெறும் நிகழ்ச்சி. இது பாஜக சங்பரிவாரக் கும்பலின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது.

மன்னர் வேடமிட்ட குழந்தையும் அமைச்சர் வேடமிட்ட குழந்தையும் உரையாடுவதாக தொடங்குகிறது நிகழ்ச்சி.

“நம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள கருப்புப்பணம் செல்லாது என அறிவிக்க போகிறேன் என்று மன்னர் வேடமிட்ட சிறுவன் சொல்கிறார். அதற்கு “அதற்கு அமைச்சர் வேடமிட்ட சிறுவன் இது போல் தான் சிந்தியா என்ற நாட்டில் மன்னர் இப்படித்தான் செய்தார் என்கிறார். “கருப்பு பணம் ஒழிந்ததா” என மன்னர் வேடமிட்ட சிறுவன் கேட்க, கருப்பு பணம் ஒழியவில்லை கலர் கலரா கோட்டு போட்டு கொண்டு ஊர் சுற்றுகிறார் அந்த மன்னர் என அமைச்சர் வேடமிட்ட சிறுவன் பதிலளிக்கிறார்.

இதேபோல் நம் நாட்டுக்குச் சென்றால் அது நகர்வலம் நாடு நாடாகச் என்றால் அது ஊர்வலம் என்றும், தென்னாட்டுப் பக்கம் சென்றால் நம்மை யார் என்றே தெரியாது என்றும், 15 லட்சம் வங்கியில் போடப்படும் என்ற வெற்று அறிவிப்பு, ரயில்வே தனியார்மயம், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, விவசாயிகளின் போராட்டங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது என மோடி கும்பலின் டவுசரை மொத்தமாக உருவிவிட்டார்கள் இந்த சிறுவர்கள்.

இந்த நிகழ்ச்சியை பார்த்துதான் அலறுகிறது சங்பரிவார கும்பல். பாஜக காயத்ரி ரகுராம், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனிடம் நிகழ்ச்சி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிராது கொடுத்துள்ளார்கள்.

தமிழ்நாடுன்னாலே பதறும் சங்பரிவார கும்பல் சிறுவர்கள் நிகழ்ச்சியை கண்டு அலறுவதற்கு காரணம் சிறுவர்களும் ஆரம்பித்துவிட்டார்களே, அதாவது அடுத்த தலைமுறையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டது என்பதுதான்.

பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுக்கு மோடி விற்கும் போது வராத பதற்றம், பெட்ரோல் டீசல் விலை உயர்வை பார்த்த போது வராத பதற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிற போது வராத பதற்றம், 700 மேற்பட்ட விவசாயிகள் போராடி உயிர் நீத்த போது வராத பதற்றம் சிறுவர்களின் நிகழ்ச்சியை பார்த்த போது வருகிறது தமிழ்நாட்டில் வாழும் சங்கிகளுக்கு.

90 வயது கிழவனை பார்த்து பயந்த கும்பல், அவர் செத்த பிறகு அவருடைய சிலையை பார்த்து இன்று வரை பயப்படும் கும்பல் இன்னைக்கு அவரோட கொள்ளு எள்ளுப் பேரன்களோட ரியால்டி ஷோவை பார்த்து பதறுது.

தமிழ்நாட்டுக்கு மோடி வந்தப்ப கருப்பு பலூன் பறக்க விட்டதை பார்த்து ரோட்டுல வர பயந்து விமான நிலையத்துல இருந்து ஹெலிகாப்பிட்டரில் வந்து இறங்கி பின்பக்க காம்பவுண்ட் சுவரை உடைத்து விட்டு போனவர்கள் தான் நீங்க! அதோட அப்படியே ஓடி போயிருக்கனும். அத விட்டுட்டு தாமரை மலர்ந்தே தீரும்னு கலவரம் பண்ண நினைக்காதீங்க பெரியாரின் பேர பிள்ளைகளிடம் அதெல்லாம் செல்லுபடியாகாது.

ஒன்றை சாண் தண்ணியில படகு ஓட்டுனோமா, பொங்க பானையில் பஞ்ச வச்சு போட்டோவுக்கு போஸ் கொடுத்தோமானு இல்லாம, சிறுவர்களோட ரியால்டி ஷோவ பாத்துட்டு கம்பிளைண்ட் வேற பண்றீங்க. இப்ப அது ட்ரெண்டாகி நாடே நாறுது.

சிறுவர்கள் நிகழ்ச்சிய பார்த்தா இனிமே மோடி தமிழ்நாடு பக்கமே வர மாட்டார் போலிருக்கு. ஏற்கனவே பஞ்சாப்ல துரத்திவிட்டுட்டானுங்க அடுத்து தமிழ்நாடா!

சங்கிகளே குழந்தைகளோட கையில் கத்தியைக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை நாசமாக்கும் வடநாடு இல்லை இது. முற்போக்கு சிந்தனையை குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கும் தமிழ்நாடு.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here