அயோத்தியில் எப்படியும் ராமர்கோவில் வந்து விடும் என்பது தெரிந்ததும். அங்கு ரியல் எஸ்டேட் கொடி கட்டிப்பறந்தது. இந்து மத அறக்கட்டளைகள், சாமியார்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் குதித்து சுற்றியிருந்த நிலங்களை எல்லாம் வாங்கிக் குவித்தார்கள்.  ராமர் கோவில் அறக்கட்டளை மீதும் இதே குற்றச்சாட்டுகள் இருந்தது. அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி அதிக விலைக்கு விற்ற கதைகள் எல்லாம் ஊடகங்களில் வெளி வந்தன.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த ஆண்டு முதலே இந்து மத அறக்கட்டளைகள் பலவும்  அயோத்தியில் நிலங்களை வாங்கிக் குவித்தன. அதில் முக்கியமானவை மகரிஷி ராமாயணவித்யாபீடம், ராமயாண பல்கலைக்கழகம் அமைக்கப் போகிறோம் என்றுதான் ஏழை விவசாயிகளிடம் நிலங்களை வாங்கினார்கள். ஆனால், அப்போது நல்ல விளைநிலங்களை பல விவசாயிகள் கொடுக்க மறுத்து விட்டார்கள்.

2019 நவம்பர் 9 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த முடிவிற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 2020 ஜனவரி 14 அன்று அயோத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் மூலம்தான் ராமர் சிலைக்காக நிலம் கையகபப்டுத்த இருக்கும் தகவல்கள் வெளியானது.

அயோத்தியில் ராமர்கோவில் அமையவிருக்கும் இடத்திற்கு அருகில்  251 அடி உயர ராமர் சிலைக்காக நிலம் கையகப்படுத்துகிறது யோகி அரசு. ஆனால் ஆண்டுக்கு பல போகும் விளையும்  நல்ல விளைச்சல் கொடுக்கும் நிலங்களை அரசு போலீசை வைத்து மிரட்டி வாங்குவதாக குற்றம் சுமத்துகிறார்கள் விவசாயிகள்.

இந்து மத அறக்கட்டளைகள் அனைத்தும் அரசின் பக்கம் ராமனின் பெயரால் எந்த மசூதி இடிக்கப்பட்டு முஸ்லீம்களிடம் இருந்து சட்ட ரீதியாக நிலம் பிடுங்கப்பட்டதோ அதே போன்ற ராமர் சிலைக்காக இந்து விவசாயிகள் இன்று சித்திரவதைக்குள்ளாகிறார்கள்.

ராமர் சிலை செய்வதற்காக மாஞ்சா பர்ஹட்டா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட நியூர் கா புர்வா, பன்வாரி புர்வா, சோட்டி முஜ்ஹானியா, படி முஜ்ஹானியா, தர்மு கா புர்வா, கலே கா புர்வா மற்றும் மதர்ஹியா ஆகிய கிராமங்களில் 85.977 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த அரசு விரும்புகிறது என்று அந்த அறிவிக்கை தெரிவித்தது. இந்த கிராம பஞ்சாயத்தில் சுமார் 350 குடும்பங்கள் உள்ளன மற்றும் மக்கள் தொகை சுமார் மூவாயிரம். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த இந்து விவசாயிகளால் நீதிமன்றத்திற்கும் செல்ல முடியவில்லை, போலீஸ் மிரட்டல்,  குண்டர் சட்டம் எனப் போகிறது விவகாரம்.  முஸ்லீம்களைக் கொன்று அவர்களின் நிலங்களை எடுத்த போது கைதட்டி மகிழ்ந்த அதே அப்பாவிகள் இப்போது நிலங்களையும் வாழ்விடங்களையும் இழக்க இருக்கும் நிலையில் “எங்களை இங்கேயே கொன்று புதைத்து விட்டு எங்கள் நிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள்”என்கிறார்கள்

நன்றி

  • இனியொரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here