பிரதமர் மோடி இராமேஸ்வரம் வருவதால் அவரின் பதுகாப்பை ஒட்டி  இன்றும் நாளையும் விசைப்படகு, நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் தடை விதித்துள்ளது மீன்வளத்துறை. அதாவது 2 நாட்கள் பட்டினியாய் இருங்கள் என்கிறது அரசாங்கம்.

அயோத்தியில் ராமர் கோவில் வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் கட்சி விழாவை போலவும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்துக்களின் ஓட்டுகளை கவர்வதற்காக நடத்தப்படும் விழாவாகவும் மக்களால் விமர்சிக்கப்படும் இந்த நிகழ்வையொட்டி தமிழ்நாட்டிற்கும் வந்து விளம்பரப்படுத்திக்  கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

தமிழ்நாடு கடந்த மாதத்தில் அதீத மழைப் பொழிவால் வெள்ளத்தில் மிதந்த போது எட்டிப் பார்க்காத பாசிஸ்ட், இதுவரை தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காமல் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மோடி கோவில்களை சுற்றி பார்ப்பதற்க்கு தமிழகத்திற்கு வந்துள்ளார்.

இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுவதையே தனது முழுநேர பணியாக கொண்டிருக்கும் மோடிக்கு தமிழ்நாட்டில் மக்கள் வெள்ளத்தில் செத்தால் என்ன? இருந்தால் என்ன? கடைசி நேரத்தில் உண்மையான இந்துக்கள் பாஜகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என்று கூறி வாக்குவங்கியை தக்க வைக்க தான் மோடியின் ஆலய தரிசனம் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது ஜாலியாக உலகக் கோப்பை கண்டு களித்துக் கொண்டிருந்தார் மோடி. மக்கள் துன்பத்தில் அல்லல் படும் போது எட்டிப் பார்க்காத மோடி, கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டிருக்கும் போது யாரும் கேள்வி எழுப்பினால் இந்துவிரோதி, தேசத்துரோகி பட்டத்தை கொடுப்பார்கள்.

மோடியின் இராமேஸ்வரம் வருகை முழுக்க அரசியல் நிகழ்வு. மோடி என்ற தனிப்பட்ட நபருக்காக ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிப்பது பாசிச செயல். மோடிக்காக மீனவர்களும் அவர்களது குடும்பமும் வருமானம் இழந்து பட்டினியில் உழல வேண்டுமா? மீனவர்களால் மோடிக்கு ஆபத்து இல்லை. மோடியால் தான் மீனவர்களுக்கு ஆபத்து.

கடந்த 10 ஆண்டு மோடியின் பாசிச ஆட்சியில் மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். கடலோர மீனவர்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

‘புதிய தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டம் (Indian Marine Fisheries Bill, 2021)’ இந்த சட்டமானது பாரம்பரியாக கடலில் மின்பிடித் தொழிலை செய்துக் கொண்டிருக்கும் மீனவர்களின் மீது பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அது மட்டுமல்லாமல் லட்சம் ரூபாய் வரை அபராதங்களையும் விதிக்கிறது. இந்த சட்டம் முழுக்க மீனவர்களை தொழில் செய்ய விடாமல் கடலினை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க உருவாக்கப்பட்ட சட்டமாகும்.

இதையும் படியுங்கள்:

மறுபுறம் ஆலைக்கழிவுகள் கடலில் கலந்து மீன்வளத்தை அழிக்கிறது. கடலோரங்களில் அணு உலைகளை அதிக அளவில் நிறுவ திட்டமிட்டுள்ள மோடி அரசு அதன் மூலம் மீனவர்களை கடலில் இருந்து துரத்தியடிக்க எத்தனிக்கிறது.

இப்போது சொல்லுங்கள் மீனவர்களால் மோடிக்கு ஆபத்தா? இல்லை மோடியால் மீனவர்களுக்கு ஆபத்தா என்று.

மோடியின் ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், சிறுவணிகர்கள், சிறு முதலாளிகள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைக் கொள்ளாத மோடியோ கோவில்கோவிலாக சுற்றிக் கொண்டிருக்கிறார். இப்போது தன்னுடைய பாதுகாப்பிற்காக மீனவர்களையும் கடலுக்குள் செல்ல விடாமல் பட்டினிப் போடப் பார்க்கிறார்.

பாசிஸ்டுகள் அனைத்து மக்களின் எதிரி என்பதை உணர்ந்து மீனவர்களுக்கு ஆதரவாக பாசிசத்திற்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவோம்.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here