மாஸ் இயக்கத்தின் இஸ்ரேல் மீதான தாக்குதலை காரணமாக முன்வைத்து பாலஸ்தீனத்தின் மீதான கொடூரமான போரை உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகள் ஆதரித்து நிற்கின்றனர்.

1888 முதல் நடத்தப்பட்டு வரும் நேஷனல் ஜியோகிராபி என்ற சர்வதேச வரைபடங்களை வெளியிடுகின்ற ஆவண காப்பகம், 1947 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள உலகின் வரைபடம் மேலே உள்ளது. இந்த வரைபடத்தில் பாலஸ்தீனம் என்ற நாடு உள்ளதே தவிர இஸ்ரேல் என்ற நாடே கிடையாது. ஆனால் 47 க்கு பிறகு இஸ்ரேல் உலகின் யூத ஜியோனிச இன வெறியை கொண்ட நாடாக உருவெடுத்து, பாலஸ்தீன மக்களை நவீன ஆயுதங்களைக் கொண்டு கொன்று குவித்து, அவர்களின் நாட்டை ஆக்கிரமித்து வருகிறது.

1947: ஆயிரக்கணக்கான ஐரோப்பிய யூத குடியேறிகள், அவர்களில் பலர் ஹோலோகாஸ்ட் என்ற ஜெர்மன் ஹிட்லரின் யூத இன அழிப்பு போரில், (இந்த இன அழிப்பு போரில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர்) தப்பிப்பிழைத்தவர்கள்., ஒரு கப்பலில் ஏறினர் – இது எக்ஸோடஸ் 1947 என்று அழைக்கப்பட்டது – அப்போதைய பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனத்திற்குச் சென்றது.. பாலஸ்தீன மக்கள் அவர்களை விரட்டியடிக்காமல் ஐநாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்றுக் கொண்டனர்.

exodus 1947 ship

யூத நாட்டுக்கு பாலஸ்தீனத்தில் 56.47 சதவீதமும், அரபு நாட்டுக்கு 44.53 சதவீதமும் பிரிவினைத் திட்டத்தை ஐநா சிறப்புக் குழு முன்மொழிகிறது. பாலஸ்தீனிய பிரதிநிதிகள் திட்டத்தை நிராகரிக்கிறார்கள்,  பிரிட்டனின் யூத சகாக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியை இஸ்ரேல் என்று அழைத்தனர். அன்று முதல் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை சிறிது சிறிதாக ஒழித்துக் கட்டி வருகின்றனர். இந்த இஸ்ரேல் உருவானபோது இந்தியாவில் ஆட்சியில் இருந்த அப்போதைய பிரதமர் இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ராணுவ பயங்கரவாத கொலைக் கருவிகளை உற்பத்தி செய்து கொடுக்கின்ற இஸ்ரேலுடன் தற்போதைய இந்திய ஒன்றியத்தின் பிரதமர் பாசிச மோடி நட்புறவு பாராட்டி கூடிக் குலாவுகிறார்.

உலகை மேலாதிக்கம் செய்ய துடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு ட்ரம்ப் ஆட்சியின் போது இசுரேலுக்கு ஆதரவாக செயல்பட்டது பற்றியும், பாசிச மோடியின் நட்புறவு பற்றியும் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது.

“ அமெரிக்காவின்: டிரம்ப், பிரிட்டனின் ஆர்பன் மற்றும் பிரேசிலின் போல்சனரு  போன்ற தீவிர வலதுசாரி அரசாங்கங்கள் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான நெதன்யாகுவின் தீவிர அடக்குமுறைக் கொள்கைகளுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கியுள்ளன, அதே நேரத்தில் நெதன்யாகுவே உலகம் முழுவதும் உள்ள வலதுசாரி பாசிச சக்திகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளார். குறிப்பாக இந்தியாவின் பிரதமர் மோடி, இஸ்ரேலிய இராணுவ தொழில்துறை வளாகத்துடன் மிகவும் விலையுயர்ந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டு, பாலஸ்தீன ஆக்கிரமிப்பிற்கு மகத்தான பொருள் ஆதரவை வழங்கியுள்ளார்.” என்று விமர்சித்து.இருந்தது.

1947 லிருந்து இன்று வரை லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் சொந்த தாய் நாடு சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது இன்று குறுகிய எல்லைப் பிரதேசத்திற்குள் வாழ்ந்து வருகின்றனர்.

இஸ்ரேலின் பாசிச பிரதமரான நெதன் யாகு தனது நாட்டில் அதிகரித்துள்ள வேலை வாய்ப்பின்மை, வறுமை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றை திசை திருப்புவதற்காக தருணம் பார்த்துக் கொண்டே  இருந்தார். அவரது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு தற்போது ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது இதைப் பற்றி இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் அமைதி மற்றும் சமத்துவத்திற்கான ஜனநாயக முன்னணி (Hadash) கீழ்க்கண்டவாறு தனது விமர்சனங்களை பதிவு செய்து உள்ளது.

“ஆக்கிரமிப்பை நிலைநிறுத்த பாசிச வலதுசாரி அரசாங்கத்தின் குற்றங்கள் ஒரு பிராந்தியப் போருக்கு இட்டுச் செல்கின்றன, அது நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற கடினமான நாட்களிலும் – அப்பாவி பொதுமக்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால், நாங்கள் மீண்டும், மீண்டும் குரல் கொடுக்கிறோம். மேலும் அவர்கள் இரத்தக்களரியிலிருந்து அகற்றப்பட வேண்டும். ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அரேபியர்கள் மற்றும் யூதர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

இதையும் படியுங்கள்:

நெதன்யாகு அரசாங்கமும் ஹில்டாப் இளைஞர்களும் எந்த ஆபத்தான திசையில் முழு பிராந்தியத்தையும் வழிநடத்துகிறார்கள் என்பதை இன்றைய நிகழ்வுகள் காட்டுகின்றன, மேலும் மோதலை நிர்வகிக்கவோ அல்லது இராணுவ ரீதியாக தீர்க்கவோ வழி இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது – ஒரே ஒரு தீர்வு: ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். பாலஸ்தீன மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். ஆக்கிரமிப்பிற்கு முடிவு கட்டுவதும், நீதியான அமைதியை நிலைநாட்டுவதும் இந்த நாட்டிலுள்ள இரு நாட்டு மக்களினதும் தனித்துவமான மற்றும் பொதுவான நலன்களாகும்.” என்று குரல் எழுப்பி உள்ளது.

 

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியவுடன் சொல்லி வைத்துக் கொண்டதைப் போல இந்திய ஒன்றியத்தின் பிரதமர் பாசிச மோடி அமெரிக்காவின் அதிபர் ஜோ பிடன் மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாசிச பயங்கரவாத அதிபர்கள் கூட்டு சேர்ந்து ஆதரிக்க துவங்கினர்.

பாலஸ்தீனத்தின் எல்லை பகுதியான காசாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்று ஐநா அறிக்கை விடுத்துள்ள போதிலும், இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்களை இதற்கு முன்பு 50 க்கும் மேற்பட்ட முறை கண்டித்து இருந்தும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலை பாதுகாத்து உள்ளது. தற்போதைய அநீதியான போரிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையில் உலகம் முழுவதும் உள்ள பாசிச பயங்கரவாத சக்திகள் இஸ்ரேலின் போரை ஆதரிக்கிறது.

ஆனால் அநீதியான இந்த போரை எதிர்த்து நாம் வீதிகளில் இறங்கி குரல் கொடுப்போம். பாலஸ்தீனத்தை ஆதரித்து போராடுவோம்.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here