விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை அடிப்படை சுகாதார கட்டமைப்பு வசதிகளுடன் இயங்குகிறதா?


பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் மக்கள் அதிகாரம் ஆய்வு!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் சுமார் 155 கிராமம் மற்றும்
2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் அவர்களுடைய சுகாதாரம் உயிர் பாதுகாப்பு ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கு ஆதாரத் தூணாக விருதாச்சலம்
அரசு மருத்துவமனை உள்ளது.

மருத்துவமனையை நம்பிதான் மக்கள் வாழ்கிறார்கள் அப்படிப்பட்ட அவசரம் என்று வரும் நோயாளிகளை புறக்கணிப்பது ஏளமாக பேசுதல் விரட்டுவது தொடர்கதையாகி இருந்து வருகிறது. இதனை முடிவு கட்டும் விதத்தில் மக்களை விருதாச்சலம் மக்கள் அதிகாரம் சார்பில் ஆய்வு நடத்தி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்ற நோக்கத்திற்காக.

தோழர் செந்தாமரைக்கண்ணன் (வட்டார ஒருங்கிணைப்பாளர்) மக்கள் அதிகாரம் விருதாச்சலம் அவர்கள் தலைமையில் தோழர்கள் குழுவாக 08.09.21 அன்று ஆய்வு மேற்கொண்டோம். மக்கள் நம்மிடம் வைத்த குறைகள் ஓபிடியில் புறநோயாளி பிரிவில் உள்ள மருத்துவர்கள் காய்ச்சல் தலைவலி என்று வந்தால் கூட மருத்துவமனையில் அனுமதிக்காது தலைமை மருத்துவமனைகளுக்கு
முண்டியம்பாக்கம் விழுப்புரம்அரசு தலைமை மருத்துவமனை கடலூர் அனுப்பி வைக்கிறார்கள் சில நேரங்களில்புறநோயாளிகள் பிரிவில் கூட மருத்துவர்கள் இருப்பதில்லை கூட்ட நெரிசலில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் அதனைப் பற்றி சொல்வதற்கு மருத்துவமனையில் “புகார் பெட்டி” என்று வைத்துள்ளார்கள் அந்த” புகார் பெட்டி புகார் எண்” இயங்குவது இல்லை மருத்துவமனை செக்யூரிட்டி (பாதுகாவலர்கள்) மருத்துவம் பார்க்க வரும் மக்களிடம் ஏளமாக பேசுவது விரட்டி அடிப்பது ஆளுக்கு தகுந்த மாதிரி நடந்து கொள்வது என மக்கள் நம்மிடம் கூறியிருந்தார்கள் அதனை உறுதி செய்யும் விதமாக முதலில் முதற்கட்டமாக தலைமை மருத்துவர் அவர்களை (நிருவாகப் பொறுப்பு) சந்திக்கலாம் என்று மருத்துவமனை உள்ளே சென்றோம்.

அப்போது பாதுகாவலர் பெண் ஊழியர் பார்த்துவிட்டு போராட்டத்திற்கு வந்திருக்காங்க போல என்றுபுரிந்து கொண்டு தலைமை மருத்துவ அதிகாரியிடம்
தகவல் கூறிவிட்டார் அவருடனே உடனே சுதாரித்துக்கொண்டு அவர்களை மேலே அழைத்துச் செல்லுங்கள் அமர வையுங்கள் என்று கூறி மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்த சூப்பிரண்ட் போனில் தகவல் கூறியுள்ளார் உடனே அலறியடித்துக்கொண்டு வாங்க சார் பேசிக்கலாம் மேல வாங்க மேடம் சொன்னாங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொன்னாங்க வந்துகிட்டே இருக்காங்களாம் என்று தோழர்களை அழைத்து சென்றார்கள் சில மணி துளிகளில் அதிகாரி வந்தார்சொல்லுங்க சார் என்று கேட்டவுடன் தோழர் வட்டார ஒருங்கிணைப்பாளர் மருத்துவமனை சீர்கெட்டு கிடக்கு வரும் நோயாளிகளை தரக்குறைவாக பேசுகிறீர்கள் ஏற்றத்தாழ்வு ஏளனமாக நடத்துகிறீர்கள் அதனால் இந்த மருத்துவமனையை ஆய்வு செய்யலாம் என்று வந்திருக்கும் மேடம்என்று கூறினார் அதிகாரி உடனே “பதட்டத்தோடு” ஆய்வு நடத்த வேண்டும் என்றால் தலைமை மருத்துவமனையில் கடலூரில் அனுமதி வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்னால் அனுமதிக்க முடியாது.
சார் உங்களையும் உங்கள் அமைப்பையும் எனக்கு நன்றாக தெரியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த மருத்துவமனையில் தண்ணீர் நிற்கிறது என்றுஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். மருத்துவமனையில் எனக்கு நன்றாக தெரியும் இங்கு என்ன பிரச்சனைஎன்ன குறை என்பதனை நான் உங்களிடம் முன்வைக்கிறேன் ஒரு மணி நேரத்திற்கு மேல் விவாதித்தார்.

இது ஒரு தாலுக்கா மருத்துவமனை வரும் நோயாளிகள் ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய மருத்துவ வசதிகளை எதிர்பார்க்கிறார்கள் திட்டக்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது. வேப்பூரில் அரசு மருத்துவமனை உள்ளது. ஆனால் அவர்கள் அங்கெல்லாம் பார்க்காமல் நேரா இங்கே வருகிறார்கள் அதனால் கூட்டம் நெரிகிறது. இதனை சமாளிக்க எங்களிடம் போதிய மருத்துவர்கள் இல்லை. 29 மருத்துவர்கள், 50 செவிலியர்கள் பரிசோதனை கூடம், பரிசோதனை நிபுணர்கள் இல்லை நாங்கள் வெளியில் நோயாளிகளை அனுப்பவில்லை என்று சொல்லவில்லை அனுப்புகிறோம் 60% இருந்ததை 30சதவீதமாக குறைத்திருக்கிறோம். அதிகமாக அறுவைசிகிச்சை பிரசவம் இவைகள்தான் பார்க்கமுடியாது அனுப்புகிறோம். மேலும் ஒரு நாளைக்கு 1500 லிருந்து 2000 வரை நோயாளிகள் வருகின்றனர் இங்கு மருத்துவர்கள் எண்ணிக்கை மொத்தம் 29 பேர் அதில் முதன்மை மருத்துவ அதிகாரியாக நான் இருக்கிறேன். மீதியுள்ள 28 பேர்கள் சுழற்சி முறையில் அறுவை சிகிச்சை மற்றும் வார்டு அவசர சிகிச்சை மற்றும் வார்டு புற நோயாளி பிரிவு இந்த மூன்று பிரிவிலும் மருத்துவம் பார்க்கிறார்கள். மருத்துவர்கள் பற்றாக்குறையால் ஒரு வார்டில் சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போதே அவசரம் என்று வரும் நோயாளிகளை பார்க்கும் நிலைமை உள்ளது. இதனால் மருத்துவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது புறநோயாளிகள் பிரிவில் 600 நோயாளிக்கு ஒரு மருத்துவர் என்ற நிலைமை உள்ளது.

அதனால்தான் ஒரு நிமிடத்திற்கு ஒரு நோயாளியை பார்ப்பதற்கு கூட நேரமில்லை எங்கள் நிலையையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் படுக்கை இருக்கு, அதைப் பயன்படுத்துவதற்கு இடவசதி இல்லை. மேலும் ஆக்சிஜன் பிளாண்ட் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் நடைமுறைக்கு கொண்டு வந்துவிடுவோம். சளி ரத்த பரிசோதனைகள் இவைகளுக்கு உபகரணங்கள் கருவிகள் மற்றும் நிபுணர்கள் அவசிய தேவையாக இருக்கிறது இவைகளை சரி செய்து கொடுத்தாலே போதுமான வகையில் மருத்துவ சேவை ஆற்ற முடியும். எங்கள் சார்பாகவும் அரசிடம் முன் வையுங்கள் என்று தலைமை மருத்துவ அதிகாரி கூறினார். சரிங்க மேடம் எங்களுடைய நோக்கமும் அதுதான் இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தனும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மக்களுக்குப் போதிய மருத்துவம் கிடைக்க வேண்டும் ஏழை எளிய உழைக்கும் மக்கள்தான் அரசு மருத்துவமனையை நம்பியிருக்கிறார்கள். அவர்களுடைய உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசினுடைய முக்கிய கடமை இதில் தவறு இழைக்கும் பட்சத்தில் மக்கள் அதிகாரம் நாங்கள் விடமாட்டோம். அரசினுடைய கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் நடவடிக்கை இல்லை என்றால் வாங்க மேடம் சேர்ந்து போராடுவோம் .

இந்த ஆய்வின் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தனி கவனம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பாக வலியுறுத்துகிறோம். மேலும்பகுதி மக்கள் சார்பாக தமிழக அரசுக்கு முன்வைக்கப்படும் உடனடி கோரிக்கைகள்.
1. துறை சார்ந்த 10 டாக்டர்கள், 50 செவிலியர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும்.
2. மாற்று இடத்தில் மருத்துவமனை விரிவாக்கம் கட்டிட வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
3. சுகாதாரமான தங்குமிடம் உணவு குடிநீர் வசதிகள் மற்றும் கழிவறை பயன்பாடு ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும்.
4. கூடுதல் பரிசோதனை நிபுணர்கள் நியமனம் மற்றும் பரிசோதனை கூடம் உருவாக்கித் தரப்படவேண்டும்.

மக்கள் அதிகாரம்
(விருதை)
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு (9600873266)

6 COMMENTS

 1. தோழருக்களுக்கு வனக்கம் , மருத்துவமனையை ஆய்வு செய்து தமிழக அரசுக்கு எந்த (வடிவில் ) கொடுத்துள்ளோம் என விபரம் தெரிய வேண்டும் காரணம் கொஞ்ச காலமாக போராட்ட வடிவத்தை விட்டு விட்டு மனு கொடுப்பது போல் வடிவில் செல்கிறது என என் கருத்தாக பதிய வைக்கின்றேன். பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • முதற்கட்டமாக பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி மனுவை விருதாச்சலம் கோட்டாட்சியர் அவர்களிடம் மனு கொடுப்பது அடுத்த கட்டமாக அனைத்து கட்சிகளை ஒருங்கிணைப்பது பகுதியில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று பகுதியில் முடிவெடுத்துள்ளோம்

 2. முதற்கட்டமாக பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி மனுவை விருதாச்சலம் கோட்டாட்சியர் அவர்களிடம் மனு கொடுப்பது அடுத்த கட்டமாக அனைத்து கட்சிகளை ஒருங்கிணைப்பது பகுதியில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று பகுதியில் முடிவெடுத்துள்ளோம்

  • நன்று தோழர் போராட்டம் வெல்லட்டும்..
   புரட்சி ஓங்குக,

 3. கையெழுத்து வாங்கிய பிறகு இது சம்மந்தமான ஆர்ப்பாட்டம்,போராட்ட நிகழ்ச்சி தொடர்ச்சியை பதிவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி தோழர்

  • கண்டிப்பாக தோழர்
   போராட்டத்தின் அனைத்து தொடர்நிகழ்வுகளை
   செய்தியாக தொகுத்து தொடர்ந்துபதிவிடுகிறோம்.

   நன்றி தோழர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here