செய்தி ஒன்று கோணம் வேறு
இரட்டை இலை சின்னமும், ஊழல் பெருச்சாளிகளின் யோக்கியதையும்!
இரட்டை இலை சின்னம் வழக்கு தொடர்பாக டிடிவி தினகரனை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்து பத்து மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளது.
2 கோடி லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு சுகேஷ் என்ற தரகர் மூலம் முயற்சி செய்ததாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
சுகேஷ் என்பவருக்கும் தினகரனுக்கும் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த தொடர்புகளை அமலாக்கத்துறை போட்டோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் கையும் களவுமாக காட்டி விசாரித்ததாக செய்தி வெளியாகி பரபரப்பைத் தூண்டுகிறது.
000
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறுவதற்கு பதிலாக குறுக்கு வழியில் பணத்தை செலவு செய்து சின்னத்தை பெற முடியும் என்பதும், அதற்கு தேர்தல் கமிஷன், உச்சநீதிமன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் செல்வாக்கு உள்ள நபர்களை நேரடியாக கையாளும் திறன் பெற்ற புரோக்கர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையையும் பத்திரிக்கைகள் அம்பலப்படுத்துவது இல்லை.
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் என்பதைவிட தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரவர்க்கத்திடம் தான் உண்மையில் அதிகாரம் உள்ளது. இங்கு இரட்டை ஆட்சி நடந்து கொண்டுள்ளது.
கிராமத்திலுள்ள விஏஓ துவங்கி ரெவின்யூ அதிகாரிகள், கலெக்டர், தாசில்தார், மாநில அளவில் உன் துறை செயலர்கள் மற்றும் ஆணையங்களில் உள்ள உள்ள ஆணையர்கள் மற்றும் ஒவ்வொரு துறையில் உள்ள அதிகாரிகள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். இவர்களுக்கு மக்களுடன் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் அதிகாரம் செய்கிறார்கள்.
இந்த இரட்டை ஆட்சி முறையை அம்பலப்படுத்தாமல் அரசியல் கட்சிகள் செய்யும் ஊழல்களை மட்டும் ஊடகங்கள் அம்பலப்படுத்துகிறது. ஆனால் இந்த ஊழல்கள், லஞ்சம், முறைகேடுகள் ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற அதிகார வர்க்கம் பற்றி வாயை திறப்பதில்லை.
இப்படிப்பட்ட அதிகாரிகள்தான் லைசென்ஸ் வழங்குவது, பர்மிட் கொடுப்பது, தடையில்லா சான்றிதழ் தருவது, தொழிற்சாலைகளை ஆய்வு செய்வது, அதற்கு உரிய சான்று வழங்குவது போன்ற அனைத்திலும் அயோக்கியத்தனமாகவும், முதலாளிகளுக்கு சாதகமாகவும் செயல்படுகிறார்கள் என்பது தெரிந்தும் அவர்களை பற்றி ஊடகங்கள் அம்பலப்படுத்துவது இல்லை.
ஏனென்றால் இந்த ஊடகங்கள் அனைத்தும் பண மூட்டைகளின், கார்ப்பரேட்டுகளின் பிடியில் உள்ளது. என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்மையில் அதிகாரம் இல்லை என்பதை தெரியப்படுத்தினால் தேர்தல் அமைப்பு முறையின் மீது மக்கள் அவநம்பிக்கை அடைந்து விடுவார்கள், மாற்று பற்றி சிந்திக்கத் துவங்கி விடுவார்கள் என்பதால் திட்டமிட்டே அரசியல் கட்சிகளை மட்டும் குறிவைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
இவ்வாறு நாம் கூறுவதால் அரசியல் கட்சிகள் யோக்கிய சிகாமணிகள் என்று கூறிவிட முடியாது. ஆனால் நாட்டில் நடக்கும் இரட்டை ஆட்சி முறையில் அதிகார வர்க்கம் அவர்களை பயன்படுத்திக்கொண்டு மக்கள் விரோதமாக செயல்படுகிறார்கள் என்பதை இரட்டை இலை சின்னம் அது தொடர்பாக நடந்த 50 கோடி பேரம், ஊழல் தெளிவாக வெளிக்காட்டுகிறது.
சீராளன்
இவ்வளவு தெரிந்த நீங்கள் பாசக ஆளவுகாகு தீவிரமாக எதிர்க்க வேண்டாம் திமுகவின் தவறுகளை கூட சரிவர பேசுவதில்லை.
பகுதி நேர ஆசிரியர்கள், மருத்துவ பல்நோக்கு பணியாளர்கள் என போராடியும் அதை ஆதரித்து எழுதுவதில்லை. திக வீரமணி போல் பாசக வை முழுவதூம் எதிர்ப்பு, திமுக பாசக போல் எதிர்க்க வேண்டாம். தவறுகளை கண்டிக்க கூட மறுப்பு