விற்கப்படும் கலைமாமணி விருது! லஞ்ச ஊழலில் சிக்கிதவிக்கும் இயல் இசை நாடக மன்றம்!

தேவை முதல்வரின் உடனடி தலையீடு!

இயல் இசைநாடக மன்ற செயலாளர் முனைவர் மு. இராமசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசுச் செயலர் திரு. சந்திரமோகன் ஐஏஎஸ், இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோரின் அழுத்தம்தான் இதற்கு காரணம் என்று நிகழ்த்து கலை கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் நம்புகிறார்கள்.

பல்லாயிரகணக்கான நாட்டுப்புற கலைஞர்கள், மேடை நாடக கலைஞர்கள் திரைத்துறை நடிகர்கள், துணை நடிகர்கள் வளர்ச்சிக்கும் கௌரவத்திற்கும் பக்கபலமாக இருந்துவரும் இயல் இசைநாடக மன்றம் லஞ்ச ஊழலில் சிக்கித்தவிப்பது புதிய விடயம் அல்ல. நிகழ்த்துகலை அறிஞர்கள் முன்முயற்ச்சியிலும் தகுதியின் அடிப்படையிலும் தேரவுசெய்யப்பட்ட விருதுகளுக்கும் தனது முயற்சிதான் காரணம் என்று கூறி காசுபார்க்கும் தரகர்கள் பெருகிவிட்டனர். இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதுக்கு லட்சகணக்கில் லஞ்சம் வாங்கும் தரகர்களிடம் கலைஞர்கள் ஏமாறுகிறார். கல்வி அறிவு குறைவான அப்பாவி கலைஞர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் தரகர்களை கலையெடுப்பது இன்று அவசியப்பணியாக உள்ளது. இந்த நிலையில் மு. ராமசாமி போன்ற நேர்மையாளர்களை இயல் இசைநாடக மன்றம் இழப்பதை அனுமதிக்க கூடாது.
முன்னாள் இயல் இசை நாடக மன்ற செயலர் சோமசுந்தரம் மற்றும் ஆர்எஸ்எஸ் சங்கிகள் இதற்கு பின்புலமாக இருந்து செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டில் உண்மை உள்ளது.

பொதுவுடைமை, திராவிடம், தமிழ் என்னும் கருத்தியலைக் கொண்ட நேர்மையான சிந்தனையாளர் முனைவர். மு. இராமசாமி அவர்களின் சேவையை இயல் இசைநாடக மன்றம் இழப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

தமிழக முதல்வர் உடனடியாக இப்பிச்சனையில் தலையிட்டு முனைவர் மு.இராமசாமி அவர்களை ராஜினாமா செய்யவைத்தவர்கள் மீது ஒரு பொது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இராவணன்
இணைப் பொதுச்செயலர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
17-03-2022

விற்கப்படும் கலைமாமணி விருது கூடுதல் தகவல்களுக்கு:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here