மாதக்கணக்கில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது மணிப்பூர். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டனர். 1லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வரலாறு காணாத மழையால் வடமாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளை இழந்து மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். மோடி குடி கொண்டுள்ள இந்தியாவின் தலைநகரம் டெல்லியே வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
பாஜகவினர் பற்ற வைத்த கலவர நெருப்பு மணிப்பூர் மாநில மக்களின் வாழ்க்கையையே உருக்குலைத்துக் கொண்டு இருக்க, ‘வருண பகவானின்’ கோர தாண்டவத்தால் டில்லி உட்பட வட மாநிலங்களின் வாழ்க்கை அழிந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி எந்தக் கவலையும் அற்ற மோடி பிரான்சிற்கு பறந்து விட்டார்.
இன்று (ஜூலை 14) தேசிய தினத்தை கொண்டாட உள்ள பிரான்ஸ் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த மோடி இன்று (ஜூலை 14) தேசிய தின அணிவகுப்பிலும் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்து முக்கியமாக சிறப்பு விருந்திலும் கலந்து கொள்ள உள்ளாராம்.
மணிப்பூர் பற்றி எரிவதைப் பற்றி வாய் திறக்காத மோடி பிரான்ஸ் மக்களுக்கு வாழ்த்து கூறுகிறார். மணிப்பூர் மக்களின் சடலங்கள் அணிவகுத்து இருக்க அதைப் பார்க்க வராத மோடி பிரான்ஸ் நாட்டின் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளார். கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ண உணவும் குடிக்க நீரும் இன்றி தவித்து வரும் நிலையில் பிரான்சில் சிறப்பு விருந்தில் கலந்து கொள்ள உள்ளார்.
இதையும் படியுங்கள்: ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பும் (sco) அடிமை மோடியின் கூச்சலும்!
ஆனால் சங்கிகளைக் கேட்டுப் பாருங்கள் பிரதமர் மோடி பிரான்சிற்கு சென்றது ரஃபேல் போர் விமானங்களை வாங்கி இந்திய ராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களைக் காப்பாற்ற தான் என்று சத்தியம் செய்வார்கள்.
ரஃபேல் போர் விமானங்களை வாங்கி ஊழல் செய்வதற்காகத்தான் மோடி போய் இருக்கிறார் என்று யாராவது சொன்னால் “மோடி குடும்பம் புள்ளகுட்டியே இல்லாதவர் அவர் எதற்காக ஊழல் செய்ய வேண்டும்” என்று சதிராடுவார்கள்.
ரஃபேல் போர் விமானஉதிரி பாகங்கள் தயாரிப்பிற்கான ஒப்பந்தத்தை தகுதியே இல்லாத அனில் அம்பானி நிறுவனத்திற்கு வாங்கிக் கொடுத்ததன் மூலம் அனில் அம்பானியை கொழுக்க வைப்பது தொடர்பாக பேச்செடுத்தாலே “ஆன்ட்டி இந்தியன்” என்று பட்டம் கட்ட தயாராக இருக்கிறார்கள் சங்கிகள்.
பார்ப்பனப் பாசிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளை தோல் உரிப்பது மூலம் மயக்கத்தில் உள்ள மக்களை தெளிவடைய வைப்போம்.
- பாலன்