இந்தியாவில் கார்ப்பரேட்- காவி பாசிசம் ஏறித்தாக்கி வருகிறது. ஆனால் இந்த சூழலில் கம்யூனிஸ்டுகள் என்று தன்னைத் தானே வியந்து கொள்ளும் சிலர் இந்த காலகட்டத்தில் ஆய்வு செய்வதுதான் முக்கிய பணி அதுவே நமது செயல் தந்திரமாக இருக்கும் என்று பிதற்றுகின்றனர்.

வேறு சிலரோ இந்தியாவில் தாழ்நிலை பாசிசம் தான் நிலவுகிறது என்று கண்டுபிடித்து முன்வைக்கின்றனர்.

வேறு சிலரோ தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் கட்சிகளை வாய்க்கு வந்தபடி விமர்சிப்பதன் மூலம் “புதிய பார்ப்பனர்களாக”உலவி வருகின்றனர். பார்ப்பன- பாசிச பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஆல் தனது எதிரி என்று அறிவிக்கப்பட்டவர்களை எவ்வாறு இணைத்துக் கொள்வது என்ற புரிதல் இல்லாமல் அகநிலை விருப்பத்தில் கட்சிகளைப் பற்றி கண்டமேனிக்கு எழுதித் தள்ளி அதையும் “மார்க்சியம்”என்று முன்வைக்கிறார்கள்.

தேர்தலில் பங்கெடுக்கும் கட்சிகளை “ஒட்டுப் பொறுக்கிகள்” என்று வசை பாடுவதாலேயே மக்கள் அவர்களிடம் இருந்து விடுபட்டு விடுவார்கள் என்று நம்புகிறார்கள்.

ஆனால் இந்தியாவின் நிலைமை படுமோசமாக உள்ளது. வட மாநிலங்களில் மட்டுமின்றி தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி படுகொலை செய்கிறார்கள்.
கர்நாடகாவில் கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்கிறார்கள்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பினாமி கும்பலான நாம் தமிழர், பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை மூலம் இன, சாதி வெறியை தூண்டி மக்களைப் பிளவுப்படுத்துகிறார்கள்.

இவை அனைத்தும் கார்ப்பரேட் -காவி பாசிசத்திற்கு சாதகமான அம்சங்கள்.
பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு போராடுகின்ற போதே இதுபோன்ற ஐந்தாம் படைகளையும், அரசியல் தற்குறிகளையும் முறியடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

000

கேரளாவில் சிபிஎம் செயலாளர்
ஆர்எஸ்எஸ் கும்பலால் படுகொலை – 4 பேர் கைது


கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் பெரிங்கரா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு செயலாளர் தோழர் பி.பி.சந்தீப் குமார் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பத்தினம்திட்டா மாவட்டத்தில் பாஜகவின் ஆதரவு தளம் தொடர்ந்து சரிந்து வருகிறது. பாஜக மாற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்களில் இருந்த பலரும் அவற்றிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து வருகின்றனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பெரிங்கரா பஞ்சாயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மேலும் அப்பகுதி மக்கள் மத்தியில் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு பெருகி வந்தது.

பெரிங்கரா பகுதிக்குழு செயலாளராக (36 வயது) தோழர் பி.பி.சந்தீப் குமார் இருந்து வந்தார். இவருக்கு 3 வயது குழந்தையும் 2 மாதமே ஆன குழந்தையும் உள்ளனர். சந்தீப் பெரிங்கரா பகுதியில் சாதி, மத, கட்சி பேதமின்றி மக்கள் நலப்பணிகளைச் செய்துவந்தார். கொரானோ காலத்திலும் ஓடி ஓடி மக்கள் பணிநலப்பணி செய்தார். இதனால் அப்பகுதி மக்களிடையே கட்சிக்கும், பி.பி.சந்தீப் குமாருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக இதே பகுதியில் பாஜகவிலிருந்த முக்கிய பிரமுகர்கள் 20 பேர் பாஜகவிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதே போன்று பெரிங்கரா பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெருங்காரா பகுதி குழு மாநாட்டில் பகுதிக்குழு செயலாளராக பி.பி.சந்தீப் குமார் தேர்வு செய்யப்பட்டார். இதனால் மேலும் ஆத்திரமுற்ற பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பல் பி.பி.சந்தீப் குமாரைப் படுகொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறது. அதன்படி அவரது நடத்தையைக் கண்காணித்து வந்த ஆர்எஸ்எஸ் கும்பல் நேற்று இரவு 8 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சந்தீப் குமாரை வெட்டி படுகொலை செய்தது. இது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படுகொலையைக் கண்டித்து அப்பகுதி முழுவதும் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.

பின்னணி

முன்னதாக இந்த படுகொலைக்கான திட்டத்தில் பாஜகவின் மாநிலத் தலைவருக்கும் பங்கு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எந்த கூட்டமும் இல்லாத நிலையில் கோவையின் முன்னாள் எம்பியும், ஆர்எஸ்எஸ் பிரமுகருமான சி.பி.ராதாகிருஷ்ணன் நவம்பர் 30ம் தேதி பாஜக மாநிலத்தலைவர் சுரேந்திரன் மற்றும் சிலர் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். அதில் எப்படியாவது பாஜகவைக் கேரளாவில் நிலை நிறுத்த வேண்டும். அதற்காக பல்வேறு திட்டங்கள் திட்டங்களைத் தீட்டியிருக்கின்றனர். அதன் ஒருபகுதியாகவே பி.பி.சந்தீப் குமாரின் கொலை திட்டமும் இருந்திருக்கலாம் எனக் கேரளாவின் பிரபல சமூக ஊடகம் டி21 தெரிவிக்கிறது.

அத்திட்டத்தின்படி ஏற்கனவே 20 கிரிமினல் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு சிறையிலிருந்த சிஸ்னுவை அழைத்து வந்திருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த அவர் பெரிங்கராக பாஜக இளைஞரணி தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது தலைமையில் பிரோமோத், நந்து, பைசல் உள்ளிட்ட 5 பேர் கொண்ட ஆர்எஸ்எஸ் கிரிமினல் கும்பல் பி.பி.சந்திப்பைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர். அதன்படி வியாழனன்று இரவு 8 மணியளவில் கட்சி பணி முடித்து பைக்கில் திரும்பிக்கொண்டிருந்த சந்தீப் குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்திருக்கின்றனர். இக்கொலையில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் கிரிமினல் கும்பலைச் சேர்ந்த சிஸ்னு, நந்து, பிரமோத், பைசல் ஆகிய நான்கு பேரைக் கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

தோழர் வெண்புறா
முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here