மோடிக்கு கண்டனம் தெரிவித்து 108 அரசு ஊழியர்கள் கடிதம்.
இந்தியாவில் பார’தீய’ ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியும், கலவரங்களும் அதிகரித்திருப்பதாக முன்னாள் அரசு ஊழியர்கள் 108 பேர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.
குறிப்பாக பாஜக ஆளுகின்ற மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், அசாம், திரிபுரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பாஜக அரசு துணை போகிறது என்றும் விமர்சித்துள்ளனர்.
அதே சமயம் அரசை நாங்கள் இதுவரை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தது கிடையாது என்றாலும், தற்போதைய சூழலில் கடுமையாக விமர்சிக்க வேண்டியுள்ளது என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கின்ற பென்சனை வாங்கிக்கொண்டு அமைதியாக காலத்தை கழிப்பதற்கு மனம் ஒப்பாத இதுபோன்ற விதிவிலக்கான நபர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
படிக்க:
♦ மோடியை விமர்சித்தால் கைது சிறை! தலைவிரித்தாடும் பாசிசம்!
♦ எதிர்ப்புகளைக் கண்டு குலை நடுங்கும் பாசிஸ்டுகள்!
மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றிய அதிகார வர்க்கத்தினர் இவ்வாறு அரசுக்கு எதிராக விமர்சனத்தை முன் வைத்திருப்பது பரப்பப்பட வேண்டிய செய்தியாகும்.
ஏதாவது ஒரு பதவியை பிடிப்பதற்கு பாஜகவின் காலடியில் தண்டனிட்டு கிடைக்கும் பலரின் மத்தியில் தனது மனசாட்சிக்கு நேர்மையாக செயல்படும் முன்னாள் அதிகாரவர்க்கத்தை சார்ந்த அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.
செல்வம்.