பக்ரா நங்கல் அணைக்கட்டு : சீச்சீ, இப்படியும் ஒரு ”சுதந்திரமா”?


மாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவிலேயே பெரிய பக்ரா நங்கல் அணை தொடங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலே ஓடிவிட்டது.  அந்த அணைக்கட்டு பற்றி ‘புதிய இந்தியாவின் கோவில்’ என்று நேரு பூமாலை வீசிப் பாராட்டியது உங்கள் நினைவுக்கு வரலாம்.

அதன் மூலம் உருவான 1600 கோடி கனமீட்டர் தண்ணீர், 650 கோடி யூனிட் மின்சாரம் எல்லாம் அரசின் ஊழல்கள் போக ஆண்டு அனுபவித்தாகிவிட்டது. ஆனால் அணை கட்டுவதற்காக நிலம்-விவசாயம் இரண்டிலிருந்தும் வெளியேற்றப்பட்ட விவசாயிகளுக்கு இன்னமும் கூட நிவாரணமில்லை, வாழ்வு இல்லை.  அவர்கள் அனாதைகளாக்கப்பட்டு வந்து சேர்ந்த இடம் பிலாஸ்பூர்.

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நங்கல் நகரமும் பக்ரா அணையும்
பிலாஸ்பூர் சுற்றுலா

இப்பகுதியில் அரசாங்கம் செயல்படாத ஒரே காரணத்தால் குடியேறிய இடத்தில் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்றே அழைக்கப்படுகிறார்கள்.  ஒரு நிமிடம் மூச்சை இழுத்து நன்றாக சுவாசித்துக் கொள்ளுங்கள். எத்தனைக் கிராமங்கள் அழிக்கப்பட்டன? சுமார் 300 கிராமங்கள். எத்தனை குடும்பங்கள் அவர்கள் தெரியுமா சுமார் 36,000 குடும்பங்கள். அடிப்படை வசதிகள் கூட அளிக்கப்படாமல் தூக்கி எறியப்பட்ட இவர்கள் என்ன ‘பாவம்’ செய்தார்கள்?

கடைசியாக, செப்டம்பர் 2020ல் சட்டமன்றத்தில் நைனாதேவி என்ற இடத்தின் எம்.எல்.ஏ, ராம்லால் (தாக்குர்), நகர்ப்புற வளர்ச்சிக்கான அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் இருவருமே அந்த நேரத்துக்கு கால்ஷீட் வாங்கும் நடிகர்கள் போல சூப்பராக நடித்துவிட்டு போனார்கள்.

படிக்க:

கேரள வெள்ளத்திற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் தொடர்பு உண்டா ?

சூப்பர் சீனியர் நேரு (1963ஆம் ஆண்டு) நடித்துவிட்டுப் போய் 59 ஆண்டுகளாகப் போகிறது, இன்னமும் கூட நிவாரணம் கிட்டவில்லை.  உயர்மட்டக் கமிட்டிகள், அங்கெல்லாம் அடுக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான “சாணிக் காகிதங்கள்’ செத்துப் போன பிணங்களாகத் துர்நாற்றம் எடுத்துவிட்டன.  மக்கள் போராடியும் பலனில்லை.

நிலம், வீடு இரண்டும் இழந்த விவசாயிகள் இனியும் மானங்கெட்டு வாழ்வதா, சுமார் 2 லட்சம் ஓட்டுக்களை தேர்தல்களின் போதெல்லாம் அவர்கள் ஏலம் விட்டுப் பிச்சை எடுப்பதா?

இது ஒரு ‘சுதந்திர’ நாடா?  இதெற்கெல்லாம் சாவு மணி அடிப்பது எப்பொழுது?

ஆக்கம் : இராசவேல்

1 COMMENT

  1. நேரு வணங்கிய அந்த கோயிலுக்கு கீழே ஏழைகளின் குடியிருப்புகள் இருந்தன! என்ன செய்யலாம்!!?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here