ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தம்பியின் சடலத்துடன் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த சிறுவன்!

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்து போன தனது 2 வயது தம்பியுடன் ரோட்டின் ஓரத்தில் கண்களில் கண்ணீர் ததும்ப அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதால் தான் இன்று பேசு பொருளாகியுள்ளது.

0

த்திய பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் தன் தம்பியின் உடலுடன் சிறுவன் சாலையில் அமர்ந்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் வாழத் தகுதியற்றர்களாகி விட்டார்கள் உழைக்கும் மக்கள். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடையாது. உண்ண உணவு, உடுத்தி உடை, இருப்பிடம் என ஏதுமற்றவர்களாகிவிட்டார்கள். அவர்களை அழிவின் விளிம்பில் தள்ளியுள்ளது அம்பானி, அதானிகளின் கார்ப்பரேட் இந்தியா. அப்படி ஒரு சம்பவம் தான் காவிகள் ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

தூசு பறக்கும் சாலையின் ஓரத்தில் உள்ள சுவரில் சாய்ந்து அமர்ந்து இருந்தான் 8 வயது சிறுவன். கையில் வெள்ளை துணியால் சுற்றிய அவனது 2 வயது தம்பியின் உடல் இருந்தது. ரோட்டில் செல்பவர்கள் கவனித்து விசாரிக்கையில் தனது தம்பி மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும், ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தனது தந்தை வாகனம் ஏற்பாடு செய்ய சென்றுள்ளதாகவும் தெரிவித்தான். அந்த இடத்தில் 2 மணி நேரமாக அமர்ந்துள்ளார் அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

அம்பாவின் ஃபட்ரா கிராமத்தில் வசிப்பவர் பூஜாராம் தனது 2 வயது மகனை போபாலுக்கு வடக்கே 450 கிமீ தொலைவில் உள்ள மொரேனா மாவட்ட மருத்துவமனைக்கு உள்ளூரில் உள்ள கிளீனிக்கின் பரிந்துரையின் பேரில் ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர்.

அவரின் 2 வயது மகனுக்கு இரத்தசோகை மற்றும் ஆஸ்கைட்டால் பாதிக்கப்பட்டு திரவம் திரட்சியால் வயிறு வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது கல்லீரலுடன் தொடர்புடைய நோய். தனியார் சேர்க்க பணம் இல்லாத காரணத்தால் மொரேனா அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கும் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்துள்ளது.

குழந்தையின் சடலத்தை எடுத்து செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் அணுகியதில் அவர்கள் ஆம்புலன்ஸ் தனியார் வாகனம் 1500 ரூபாய் கொடுத்தால் அழைத்து செல்வதாக ஆம்புலன்ஸ் டிரைவர் கூறியுள்ளார். சாதாரண கூலித் தொழிலாளியான, வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பூஜாராமால் அந்த பணத்தை தயார் செய்ய முடியவில்லை.


இதையும் படியுங்கள்: பட்டினியில் இந்தியா, பார்ப்பன பஜனையில் பாஜக!


இறந்து போன குழந்தையை தனது 8 வயது மகனிடம் கொடுத்து சாலையோரம் அமர வைத்துவிட்டு வண்டிக்கு உதவி வேண்டி சென்றுள்ளார். அவரை தேடிச் சென்ற பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் கெஞ்சிக் கொண்டிருப்பதை பார்த்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டு ஆம்புலன்ஸை தயார் செய்து அனுப்பியுள்ளனர்.

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்து போன தனது 2 வயது தம்பியுடன் ரோட்டின் ஓரத்தில் கண்களில் கண்ணீர் ததும்ப அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதால் தான் இன்று பேசு பொருளாகியுள்ளது.

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில் நடந்த மூன்றாவது சம்பவமாகும். மாட்டுக்கு ஆம்புலன்ஸ் வைக்கும் பாசிஸ்டுகள் அன்றாடம் உழைக்கும் மக்களை மாட்டை விட கீழாகவே பார்க்கிறார்கள் என்றே உணர்த்துகிறது இந்த சம்பவம்.
இதே மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் இறந்து போன தனது 4 வயது மகனை தோளில் சுமந்து நடந்தே சென்றார் சிறுவனின் தந்தை. இது குறித்து சிறுவனின் தந்தை பகவான் லாஸ் கூறும் போது “எனது மகன் இறந்து போனதால் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் கேட்டேன். ஆனால் அவர்கள் தனியார் வாகனத்தை கேட்க சொன்னார்கள், என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் எனது மகனை தோளிலேயே சுமந்து நடந்து சென்றேன்” எனக் கூறினார். இது தான் உண்மையான இந்தியா! இங்கு உழைப்பவர்களுக்கு இடமில்லை.

4 வயது சிறுவனின் சடலத்தை சுமந்து செல்லும் தந்தை

இன்னொரு புறம் இந்திய பிரதமர் மோடி பயணம் செய்ய வாங்கப்பட்ட சொகுசு விமானத்தின் நிலை 4200 கோடி ரூபாய் ஒரு தனிநபரின் செலவுக்காக மக்களின் வரிப்பணத்தில் 4200 கோடி ரூபாய் செலவு செய்யும் பாசிச கும்பல், ஜிஎஸ்டி மூலம் மாதம் 1லட்சத்து 50,000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் மோடி அரசு, அவர் பிரதமராக காரணமான ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு பிணத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கூட இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது.

மக்களிடம் இருந்து பிடுங்கும் வரிப்பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு வாரி இறைப்பதும், உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களை, மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் மானியங்களை குறைப்பதற்கும் உள்ள இந்த அரசு தேவை தானா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு நாளும் 1000 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டும் அதானிகள் வாழும் இந்தியாவில் தான் இறந்த குழந்தையின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாத நிலையும் உள்ளது. இது நாளை நமக்கும் நிகழலாம். வருமுன் காக்க வேண்டுமானால் கார்ப்பரேட் காவி கும்பலை விரட்டியடித்து மக்களுக்கான ஜனநாயக கூட்டரசை நிறுவுவதே சிறந்த வழி.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here