சிதம்பரம் நகர அறிவார்ந்த பொது மக்களே சிந்திப்பீர் !
பெரிய மனிதர்களின் சின்ன புத்தி!
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் என்ன அராஜகம் செய்தாலும் அதை யாரும் கேள்வி கேட்க கூடாது என கீழே குறிப்பிட்டுள்ள தீட்சிதர் ஆதரவு பெரிய மனிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அது 8-4-2022 இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பதில் மனு தாக்கல் செய்ய நோட்டிசு அனுப்ப உத்திரவிடப்பட்டுள்ளது. எந்த தடை உத்திரவும் வழங்கப்படவில்லை.
1.எஸ்.ஆர்.ராமநாதன் (செட்டியார்)
2.டாக்டர் பிரசன்ன ராஜ்குமார் (வன்னியர்,)
3.ஜி.சேகர் (விஸ்வகர்மா சங்கத்தலைவர்)
4.அண்ணாமலை (செங்குந்த முதலியார் சங்கம் தலைவர்,)
5.டாக்டர் கே.மணிரத்தினம், ரியல் எஸ்டேட் பிரமோட்டர், (ஆதிதிராவிட வகுப்பை சார்ந்தவர்,) அனைவரும் சேர்ந்து வழக்கில் சாதிப்பெயரை குறிப்பிட்டு பொது நலவழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கின் கோரிக்கை
மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் சி.ராஜு, சிதம்பரம் நடராசர் கோவில் தீட்சிதர்களின் விவகாரங்களில் தலையிடக்கூடாது என தடை உத்திரவு கேட்டுள்ளனர். மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் கோட்டாட்சியர், மற்றும் டி.எஸ்.பி, ஆகியோர் சிதம்பரம் கோவில் தொடர்பாக யாரும் போராட்டங்கள் நடத்த அனுமதி கொடுக்க கூடாது எனவும் கோரி உள்ளனர்.
அன்பார்ந்த பொது மக்களே!
வழக்கம்போல் அனைத்து பக்தர்களும் சிற்றம்பல மேடையில் நின்று வழிபட வேண்டும். சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் போராடிப் பெற்ற அரசாணைப்படி அனைவரும் தேவாரம் தமிழ்திருமுறைகள் பாடி நடராசனை வழிபட வேண்டும் என்பதில் என்ன தவறு? இதனால் தீட்சிதர்களுக்கு அல்லது வழக்கு போட்ட இந்த பெரிய மனிதர்களுக்கு என்ன பிரச்சினை?. இதற்காக போராட கூடாது என சொல்பவர்களின் யோக்கியதை பற்றி நீங்கள் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். இது உங்களுக்கு எதிராக போட பட்ட வழக்கு.
கோவில் நலன் என்ற பெயரில் இப்போது வழக்கு போடும் பெரிய மனிதர்கள் தீட்சிதர்களின் திருட்டு முறைகேடுகளுக்கு எதிராக வழக்கு போடுவார்களா?
உண்டியல் வருமானம் பல கோடிக்கு கணக்கு இல்லை. நேரடியாக செய்த வசூல் பல கோடி பணத்திற்கும் கணக்கு இல்லை.
சிவகாசி தொழிலதிபர்களுக்கு புனிதமான நடராசர் கோவில் ஆயிரம்கால் மண்டபத்தை பல லட்சங்களுக்கு தீட்சிதர்கள் முறைகேடாக வாடகைக்கு விட்டதை இந்த பெரிய மனிதர்கள் ஏன் கேட்கவில்லை?
சிதம்பரம் கோவில் வளாகத்தில் யாரிடமும் அனுமதி பெறாமல் சட்டவிரோத கட்டுமானங்களை எழுப்புகிறார்களே ஏன் கேட்கவில்லை?.
நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமைச்சுவரை அகற்ற பல ஆண்டுகளாக தலித் மக்கள் உட்பட பல தரப்பினரும் போராடி வருகின்றார்களே அது குறித்து பெரிய மனிதர்கள் பேசுவார்களா?.
சிதம்பரம் கோவிலின் பல சொத்துக்கள் தீட்சிதர்களால் திருட்டுத்தனமாக விற்கபட்டதை எதிர்த்து இந்த பெரிய மனிதர்களுக்கு வழக்கு போட தெம்பு உண்டா?
சிதம்பரம் கோவிலின் சாமி நகைகள் களவு போனது குறித்து இந்து அறநிலையத்துறை எழுப்பிய பல குற்றசாட்டுக்கள் குறித்து கோவில் மீது பற்றுடைய இந்த பெரிய மனிதர்களுக்கு கோபம் வரவில்லையே ஏன்?.
பொதுநல வழக்கு போட்ட இந்த பெரிய மனிதர்களுக்கு பக்தர்களை காட்டிலும், ஊர் பொது மக்களை காட்டிலும், தீட்சிதர்கள் மீது உள்ள விசுவாசம் மட்டுமல்ல தீட்சிதர்களின் அனைத்து முறைகேடுகளுக்கும் துணை போவதும் அதில் பலன் அடைவதும்தான் இவர்களின் நோக்கம். மற்றபடி நடராசன் மீதுள்ள பக்தியோ அல்லது கோவிலின் தொன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதோ அல்ல. காவி பாசிச சக்திகளின் கோடாறி காம்புகள்தான் இத்தகைய பெரிய மனிதர்கள்.
ஒன்றிணைந்து போராடுவோம்!
தில்லை கோவிலை மட்டுமல்ல, தமிழக கோவில்கள் அனைத்தையும்
காவி பாசிச ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலிடமிருந்து பாதுகாப்போம்!
மக்கள் அதிகாரம்
கடலூர் மாவட்டம்
8110815963