2015 ஆம் ஆண்டு மக்கள் அதிகாரம் அமைப்பு துவங்கியது முதல் மக்கள் அதிகாரம் முன் வைக்கும் பல்வேறு அரசியல் போராட்டங்களை களத்திலும், கருத்தாலும் ஆதரித்து வருகின்ற நண்பர்கள், புரட்சிகர-ஜனநாயக சக்திகள், தோழர்கள் அனைவருக்கும் எமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கார்ப்பரேட்-காவி பாசிசம் ஏறித் தாக்கி வரும் இன்றைய அரசியல், பொருளாதார, பண்பாட்டு சூழலில் அதற்கு எதிராக போராடுகின்ற அனைத்து சக்திகளையும் ஒரு முனைப்படுத்துவதன் மூலம் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தும், பரந்த அளவிலான முன்னணியை உருவாக்கும் இலக்குடன் செயல்பட வேண்டும் என்று கருதுகிறோம். இதற்காக நாடு தழுவிய அளவில் இந்தக் கருத்துடன் இசைந்து போகின்ற அறிவுஜீவிகள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகள் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைப்பதற்கு உறுதி ஏற்கிறோம். இது ஊடகம் என்ற வழமையான செயல்பரப்புடன் நில்லாமல் நடைமுறையில் உழைக்கும் மக்களின் போராட்டங்களுடன் களத்தில் பங்கேற்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

16-07-2021                                                                                       தோழமையுடன்,

 

ஆசிரியர் குழு

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here