நாள் 27-3-2022
மக்கள் அதிகாரம் – பத்திரிக்கைச் செய்தி
பாசிச பா.ஜ.க மோடி அரசுக்கு எதிரான மார்ச் 28, 29 பொது வேலை நிறுத்தப்போராட்டம் வெல்லட்டும்!
அன்புடையீர் வணக்கம்!
ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கைவிட கோரியும், கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளி வர்க்கத்தையே கொத்தடிமைகளாக்கும் புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்பை ரத்து செய்ய கோரியும், புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்வது, குறைந்த பட்ச ஆதாரவிலைக்கு உத்திரவாத சட்டம் இயற்றுவது, விவசாயிகளிடம் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற கோருவது,
5_6201780596142769067பல்வேறு பிரிவு தொழிலாளர்களின் சட்டப்படியான கோரிக்கையான பணி நிரந்தரம், சம வேலைக்கு சமஊதியம், காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை விற்க கூடாது அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைப்பது என்பதை வலியுறுத்தியும், இவற்றை அமல்படுத்திவரும் மோடி அரசை கண்டித்தும் மார்ச் 28, 29 பொது வேலை நிறுத்தமாக ஆர்ப்பாட்டம் மறியல் என நடைபெற நாட்டு மக்களுக்கு தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மக்கள் அதிகாரம் அமைப்பும் ஆதரிப்பதுடன் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
20-3-2022 அன்று நடைபெற்ற மக்கள் அதிகார அமைப்பு மாநாட்டிலும், அதன் பின் நடைபெற்ற திருச்சி அரசியல் மாநாட்டிலும் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “நாட்டின் கோடிக்கணக்கான தொழிலாளிகள் போராடிப் பெற்ற உரிமைகளை பறித்து காரப்பரேட் முதலாளிகளின் கொத்தடிமைகளாக மாற்றும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும். நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்று வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டது.
தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்.