2026 துவக்கத்தில் 478.5 பில்லியன் அமெரிக்கன் டாலருக்கு இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனை மூலம் உலகை சூறையாடியுள்ளனர். இத்தகைய எண்ணெய் கார்ப்பரேட்டுகளும், இராணுவ தளவாட உற்பத்தி செய்கின்ற இராணுவ கார்ப்பரேட்டுகளும் தான் இந்த போரின் மூலம் பல்லாயிரம் கோடிகளை கொள்ளையடித்துள்ளனர்.

ரான் மீது அமெரிக்க பயங்கரவாதிகள் மற்றும் இஸ்ரேலின் யூத, ஜியோனிச பயங்கரவாதிகள் நடத்தி வரும் கொடூரமானத் தாக்குதல்கள் தொடர்ந்து அந்நாட்டில் பல ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்றுக் குவித்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகின்ற தாக்குதலில் ஈரானில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள குழந்தைகள் படிக்கின்ற 498 பள்ளிக்கூடங்கள் மீதும், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள், தனது உயிருக்கு போராடும் போரில் காயம் அடைந்தவர்கள் ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் 281 மருத்துவமனைகள் மீதும் தாக்குதல்களை தொடுத்துள்ளது.

அமெரிக்காவின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது தாக்குதல் நடத்தினாலோ அல்லது குண்டு வெடிப்புகள் நடந்தாலோ அது பயங்கரவாதிகளின் செயல் என்று அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஏவல் நாய்களான ஊடகங்களால் பரப்பப்படுகிறது.

இதற்கு நேர் மாறாக ஈரானின் உச்ச தலைவர் அலி கொமெய்னி முதல் அவர்களின் இராணுவத் தளபதிகள், உளவுத்துறை அமைச்சர், முக்கியமான உயர் மட்ட தலைவர்கள் ஆகியோர் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை தற்காப்பு நடவடிக்கை என்று அயோக்கியத்தனமாக எழுதுகின்றனர்.  பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதலைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதே இல்லை.

அமெரிக்க இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களை விமர்சித்தும் எழுதுபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். ‘ஜனநாயகத்தின் பாதுகாவலன்’ என்று பீற்றிக் கொள்ளப்படும் அமெரிக்க பயங்கரவாதிகளின் உண்மை முகம் இதுதான்.

இந்தப் போரை துவங்கியது முதல் சமூக ஊடகங்களில் அமெரிக்காவின் பயங்கரவாத தாக்குதல்கள் அதன் உண்மையான நோக்கம் ஆகியவற்றை விமர்சித்து குறிப்பிட்ட சிலர் தொடர்ச்சியாக எழுதி வருகின்றனர் என்றாலும் இவை பெரும்பான்மை மக்களை சென்றடைவதில்லை.

சமீபத்தில் முதலாளித்துவ பத்திரிகைகளில் வெளியான செய்தியானது அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு நடத்துகின்ற போரின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அமெரிக்கா நடத்துகின்ற இந்தப் போர்ப் பொருளாதாரத்தின் லாப வேட்டைக்கு முன்னணியில் இருப்பது அமெரிக்காவின் இராணுவ கார்ப்பரேட் நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் ரேதியான், நார்த் ராக் க்ரம்மன், ஜெனரல் டைனமிக்ஸ் போயிங் போன்ற நிறுவனங்கள் தான்.

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களை தன்னுள் அடக்கியுள்ள இந்த ஐந்து பேரும் இராணுவ கார்ப்பரேட்டுகள் பென்டகன் போடுகின்ற இராணுவ ஒப்பந்தங்களில் மூன்றில் ஒரு பங்கை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறது.

படிக்க:

 ட்ரம்ப் வரி விதிப்பால் வீழ்ச்சியுறும் பங்கு சந்தையும், மக்கள் மீதான பாதிப்புகளும்.

♦ பங்கு சந்தையில் 32 லட்சம் கோடி இழப்பு! யாருக்கு லாபம்?

இந்த இராணுவ கார்ப்பரேட் நிறுவனங்களும், உலகை எண்ணெய் விற்பனையின் மூலம் சூறையாடுகின்ற அமெரிக்காவின் எண்ணெய் கார்ப்பரேட் நிறுவனங்களான எக்ஸான் மொபில், மற்றும் செவ்ரான் ஆகிய நிறுவனங்கள் இந்தப் போரின் மூலமாக உலகை சூறையாடி வருகின்றன. அமெரிக்காவின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் உலகிற்கு தேவையான மொத்த எண்ணெய் தேவையில் 16 சதவீதத்தை உற்பத்தி செய்து கொள்ளை லாபமடித்து வருகின்றன.

2026 துவக்கத்தில் 478.5 பில்லியன் அமெரிக்கன் டாலருக்கு இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனை மூலம் உலகை சூறையாடியுள்ளனர். இத்தகைய எண்ணெய் கார்ப்பரேட்டுகளும், இராணுவ தளவாட உற்பத்தி செய்கின்ற இராணுவ கார்ப்பரேட்டுகளும் தான் இந்த போரின் மூலம் பல்லாயிரம் கோடிகளை கொள்ளையடித்துள்ளனர்.

அமெரிக்காவின் அரசாங்கம் இத்தகைய மரண வியாபாரிகளின் துணையுடன் உலகை சூறையாடி வருகின்றனர். நேற்று வெனிசுலா, இன்று ஈரான் அடுத்து கியூபா, லெபனான் போன்ற நாடுகளின் மீது தனது தாக்குதல்களை விரிவுபடுத்தி உலகின் எந்த மூலையில் இருக்கின்ற கனிம வளங்களும் தனது பகாசுர கொள்ளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே உடமை என்று கூச்சலிடுகின்ற பயங்கரவாதிகளின் தலைவன் தான் டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்க இஸ்ரேல் கூட்டு நடத்துகின்ற இந்த பயங்கரவாத தாக்குதல் பல்லாயிரம் உயிர்களைக் கொன்று குவிப்பது மட்டுமின்றி அந்த உயிர்களின் பிணத்தின் மீது ஏறி நின்று பல்லாயிரம் கோடி வருமானத்தை ஈட்டி வருகிறது என்பதை சமீபத்தில் வெளியான ஒரு சிறு செய்தி அம்பலப்படுத்துகிறது.

ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டார். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, சர்வதேச சந்தையில் நடந்த வர்த்தகம் மூலம் மர்ம நபர் ஒருவர் வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம் ஈட்டியுள்ளார்.

ட்ரம்பின் அறிவிப்பு வெளியானவுடன் பங்குச்சந்தை 2.5% உயர்ந்தது. அதேசமயம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 109 டாலரிலிருந்து 92 டாலராகச் சரிந்தது. இதன் மூலம், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மட்டும் அந்த மர்ம நபர் வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம் பார்த்துள்ளார். பங்குச்சந்தை உயர்வையும் கணக்கிட்டால் இந்த லாபம் பன்மடங்கு அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது என்பதை பங்கு சந்தை பற்றி தொடர்ந்து அவதானிக்கின்ற நிறுவனங்கள் முன் வைத்துள்ளன.

திங்கள்கிழமை காலை நியூயார்க் நேரப்படி 6:50 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:20 மணி) இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி முதலாவதாக, எஸ் அண்ட் பி 500 பியூச்சர் குறியீட்டில் சுமார் ரூ.12,600 கோடி மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், இரண்டாவதாக கச்சா எண்ணெய் பியூச்சர் சந்தையில் ரூ.1,615 கோடி மதிப்பிலான விற்பனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக, உலகளவில் நிச்சயமற்ற சூழலில் வர்த்தகம் மந்தமாக இருக்கும் அதிகாலை வேளையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இவ்வளவு பெரிய தொகையை ஒருவர் முதலீடு செய்தது சந்தையை கட்டுப்படுத்தி சூறையாடும் கும்பலின் முகத்திரையைக் கிழித்துள்ளது. அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் ஒரு கார்ப்பரேட் முதலாளியாவார். இவரது சொத்து மதிப்பு 2026 போர்ப்ஸ் அறிக்கையின் படி சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டாலராகும். இவர் கடைக்கண் பார்வையின்றி அமெரிக்க பங்கு சந்தையில் ஒரு அணுவும் அசையாது.

இதனால் தான் டிரம்ப் மூலமாக போர் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டவுடன் பங்கு சந்தையில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு அதிகரிப்பதும், அதன் பிறகு மீண்டும் தாக்குதலை துவங்கியவுடன் அவை விற்பனை செய்யப்படுவதும் இவை இரண்டுக்கும் இடையில் நடக்கின்ற வாங்குதல்- விற்றல் என்ற பங்கு சந்தை சூதாட்டத்தின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபத்தை அமெரிக்க கார்ப்பரேட்டுகள் ஈட்டி வருகிறார்கள்.

இந்திய ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் வருகின்ற அரைகுறை செய்தியை வைத்துக்கொண்டு ஈரான் ஒரு பயங்கரவாத நாடு என்பதைப் போலவும், அமெரிக்கா ஏதோ ‘ஜனநாயகத்தின் தொட்டில்’ என்பதைப் போலவும் கருத்துருவாக்கம் செய்யப்படுவதும், அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள பார்ப்பனக் கும்பல் இத்தகைய அவதூறுகளைப் பரப்புவதில் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதும் கூடுதலான செய்தியாகும்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளின் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி தனது மேலாதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள வெறித்தனத்துடன் அலைந்துக் கொண்டுள்ள அமெரிக்கப் பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை கிழித்தெறிவோம்.

ஈரான் மட்டுமல்ல! உலக மக்களின் கொடிய எதிரியாக வலம் வருகின்ற அமெரிக்க பயங்கரவாதக் கும்பலும், கார்ப்பரேட்டுகளும் நிரந்தரமாக முறியடிக்கப்படும் வரை பாட்டாளி வர்க்கம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே தற்போதைய நிலைமையாக உள்ளது.

  • ஆல்பர்ட்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. பங்கு சந்தை சூதாட்ட மும் அமெரிக்க போர் பொருளாதாரத்தின் சூதாட்ட மும் !

    அமெரிக்கா இஸ்ரேல் வேளாண்மை தானே போர் இருப்பதை சில ஊடகங்கள் நேர்மையாகவும் சில ஊடகங்கள் ஈரானுக்கு எதிராகவும் அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் செய்திகளை பரப்பி கொண்டிருக்கின்றனர்.
    இஸ்ரேல் ஈவு இரக்கமற்ற முறையில் ஈரானில் பள்ளி கட்டிடங்கள் மருத்துவமனை கட்டிடங்கள் மீது குறி வைத்து தாக்குதலை நடத்துவதை சர்வதேச விதிகளை மீறுவதை சில ஊடகங்கள் மௌனம் காத்து அமெரிக்கா கார்ப்பரேட்டுகளுக்கு விசுவாசமாக செயல்படுகிறது.
    ஐந்து நாள் போர் நிறுத்தம் சொல்லி டிரம்ப் அறிவித்த உடன் 20 நிமிடங்களில் 840 கோடிகளுக்கு மேல் லாபம் பார்த்த அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் அமெரிக்கா முதலாளிகளின் கண் அசைவு இல்லாமல் பங்குச்சந்தையில் ஏற்றமும் இறக்கமும் நடைபெறாது என்பதை இந்த கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here