நுபுர் சர்மாவுக்கு ஒரு நீதி! தீஸ்தாவுக்கு ஒரு நீதி!. இதுதாண்டா பார்ப்பன மனுநீதி!

டைம்ஸ் நவ் என்ற பாரதிய ஜனதா கட்சி ஊது குழலான ஊடகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்குரிய முகமது நபி பற்றி இழிவு படுத்துகின்ற கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா வெளியிட்டார்.

இன்று நாடு முழுவதும் பற்றி எரியும் வன்முறைகளுக்கும், இஸ்லாமியர்கள் மீதான இன வெறுப்பு உணர்ச்சிக்கும் காரணம் நுபுர் சர்மாவின் பேச்சு தான் என்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.

நுபுர் சர்மா சார்பில் ஆஜரான உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங் முகமது நபி பற்றி அவதூறாக பேசிய நுபுர் சர்மா மன்னிப்பு கேட்டு விட்டதாகவும், கைப்பட எழுதிக் கொடுத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் வாதம் புரிந்துள்ளார்.

இத்தனை கேடுகெட்ட பேச்சை பதிவு செய்த டைம்ஸ் நவ் இன்னமும் தடை செய்யப்படவில்லை. நுபுர் சர்மாவை கைது செய்து வன்முறையை தூண்டுவதாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்படவில்லை.

படிக்க:

மனுதர்மத்தின் அடிப்படையில் செயல்படும் பாஜக மற்றும் நீதிமன்றங்கள் பார்ப்பனர்களை தவிர பிற சாதி இந்துக்களையும் பிற மதத்தவர்களையும் ஆதாரங்கள் இல்லாத போதிலும் பல மாதங்கள் சிறையில் அடைப்பது, கடுமையாக ஒடுக்குவது என்று செயல்படுகின்ற போது ‘ஷர்மாக்கள்’ எந்த தண்டனையும் இன்றி தப்பிக் கொண்டுள்ளனர்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பதைப் போல நாடு முழுவதும் மிகப்பெரும் வன்முறை வெறியாட்டத்திற்கு காரணமான நுபுர் சர்மாவை சட்டப்படி விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று அசராமல் உழைக்கும் நீதிபதிகள் இந்திய குடிமக்கள் அனைவரையும் இதே அளவுகோலில் நடத்துவார்களா என்பது கேள்விக்குறி.

கோர்ட்டுகளில் நீதி கிடைக்குமா என்பதை இந்தியாவில் உழைக்கும் மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய வரலாற்று தருணம் இது.

  • செல்வம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here