
‘கேட்பவன் கேனையனாக இருந்தால் தான், எருமைக் கண்ணு குட்டி ஏவுகணைத் தாக்குதலை நடத்தும்’ என்ற கூற்றை நம்புவார்கள். அதுபோலவே தேர்தலில் பங்கெடுக்கின்ற அரசியல் கட்சிகள் கொடுக்கின்ற தேர்தல் அறிக்கையை மட்டுமே முன்வைத்து அந்தக் கட்சியின் தன்மையை மதிப்பீடு செய்கின்ற அளவிற்கு தான் திருவாளர் சாவித்திரி கண்ணன் இதழியல் அறத்தின் தற்குறித்தனம் உள்ளது.
துக்ளக் சோ ராமசாமி துக்ளக்கின் ஆசிரியராக பணியாற்றியபோது துக்ளக் குழுமத்தில் ‘சுதந்திரப் பத்திரிக்கையாளராக’ ஒன்பது ஆண்டுகள் வேலை செய்து வந்த திருவாளர் சாவித்திரி கண்ணன், தான் துக்ளக்கில் பணியாற்றிய போது சுதந்திரமாக பணியாற்றியதாகவும், சோ.ராமசாமியே தன்னைப் பாராட்டியதாகவும் அறம் இணையப் பத்திரிக்கையில் 2021 ஆம் ஆண்டு முன் வைத்திருந்தார்.
பார்ப்பனர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று பூணூல், குடுமி, பஞ்சகச்சம், சாஸ்திரம், இத்யாதிகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, சனாதனமே மேலானது என்று வாதித்து கொண்டிருக்கும் வைதீக பார்ப்பனர்கள். இன்னொரு புறம் பூணூல் போட்டுக் கொண்டாலும் மேலே ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு டீசர்ட், கூலிங் கிளாஸ் சகிதம், ரேபான் கண்ணாடி அணிந்துக் கொண்டு கழுத்தில் சில சமயங்களில் ருத்ராட்ச கொட்டையும், காலையில் எழுந்தவுடன் நெற்றியில் பட்டையும் போட்டுக்கொண்டு வலம் வருகின்ற இகலோக லாகிரி வஸ்துகளை சகஜமாக பயன்படுத்துகின்ற லவ்கீக வாழ்க்கையை உயர்த்திப் பிடிக்கின்ற லவ்கீகப் பார்ப்பனர்கள்.
வைதீகப் பார்ப்பனர்களை விட லவ்கீகப் பார்ப்பனர்கள் ஆபத்தானவர்கள் என்று புதிய ஜனநாயகம் இதழில் பலமுறை எழுதி வந்திருக்கின்றோம். இந்து குழுமத்தைச் சேர்ந்த இந்து என். ராம் போன்றவர்கள், “தமிழகத்தில் மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார்” என்று பேசுவது ஒரு பக்கம். ஆனால் இந்து குழுமத்திலிருந்து வெளியாகின்ற இந்து தமிழ் திசை தொகுதி வரையறை சீரமைப்பு மசோதா தோற்கடிக்கப்பட்ட போது, மகளிர் மசோதா தோற்கடிக்கப்பட்டது என்று எழுதி தனது பார்ப்பனிய சார்பை பச்சையாக வெளிப்படுத்திக் கொண்டது.
ஊடகத்துறையில் உள்ள பார்ப்பனர்கள் தினமணி வைத்தியநாதன், தினமலர் ராமசுப்பு, ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றுகின்ற பார்ப்பனர்கள், சாணக்யா ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் பெரும்பாலும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் நேரடி ஆதரவாளர்களாகவும் அல்லது ஐந்தாம் படையாகவும் செயல்படுகின்றனர் என்பது நாடறிந்த உண்மை.
சாவித்திரி கண்ணன் போன்றவர்கள் லௌகீக பார்ப்பனர்கள் என்பதால் நடுநிலை என்ற பெயரில் இதழியல் நடத்துவதும், அறம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பாஜக சங் பரிவார கும்பலுக்கு காவடி தூக்குவதும், அவரது திருப்பணிகளில் ஒன்று என்பதை நாம் தமிழர், தவெக தேர்தல் அறிக்கை குறித்த அவரது கட்டுரை வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
“ஆகா, மிகச் சிறப்பாக உள்ளனவே..! இதைத் தானே மக்கள் எதிர்பார்த்தார்கள்…! இவற்றை வலியுறுத்தித் தான் நானும் காலமெல்லாம் எழுதி வந்திருக்கிறேன்.
2026 தேர்தலில் பிரதான பெரிய அரசியல் கட்சிகள் பேசத் தவறிய முக்கிய விடயங்களை நாம் தமிழர், தவெக,பாமக ஆகியவை தங்கள் தேர்தல் அறிக்கையில் கவனப்படுத்தி உள்ளன. அவற்றில் சிலவற்றை கவனப்படுத்துகிறேன்; தேர்தல் அறிக்கைகளிலேயே நாம் தமிழர் தேர்தல் அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது; அவற்றில் முக்கியமானவை;
“தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படும்” எனத் துவங்கி முன் வைக்கப்பட்ட அறிக்கையின் சாராம்சத்தை எழுதியுள்ளார் சாவித்திரி கண்ணன், இந்த அறிக்கையின் உண்மைத் தன்மை என்ன?. நாம் தமிழர் கட்சியின் தமிழ் பாசிச முகத்தை புதிய ஜனநாயகம் மட்டுமின்றி ஈழத்து ஊடக தோழரான கலையரசன், தமிழகத்தில் பேராசிரியர்கள் மருதமுத்து, செயராமன் போன்றவர்களும், தமிழ் தேசியத்தை முன் வைத்துப் போராடும் தோழர்கள் தியாகு, பொழிலன் போன்றவர்களும், டிரைப்ஸ் கரிகாலன், அரண் செய் போன்ற சமூக ஊடகங்களும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவையெல்லாம் சாவித்திரி கண்ணனுக்கு உவப்பானதாக இல்லை அல்லது அவருக்கு இவை எல்லாம் பிடிபடவில்லை.
அதுபோலவே தமிழக வெற்றிக் கழகம் முன் வைத்துள்ள தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதியின் படி இலவசங்கள் என திராவிட இயக்கங்களை பழித்தும், கேலி பேசியும் வந்த சூழலில் அவற்றையெல்லாம் தூக்கி வீசிவிட்டு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ள வாக்குறுதிகளை அமல்படுத்த ஏறக்குறைய 12 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்பதை முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்
படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ் கூடாரத்தில் சீமான். ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை
♦ தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ஒரு மாற்று என்பது கலப்படமில்லாத மோசடி!
.
”வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதி என்று வாரித் தெளித்து ஏமாந்தவர்கள் தலையில் மிளகாய் அரைக்கின்ற வேலையை தேர்தல் அரசியலில் போட்டியிடுகின்ற கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்ற நடவடிக்கை தான்” என்பது இவருக்கு தெரியாதது போலவும், திமுக-அதிமுக மற்றும் பிற கட்சியினர் கொடுத்த வாக்குறுதிகளை விட நாம் தமிழர் சீமான், த.வெ.க விஜய் போன்றவர்கள் முன்வைத்த தேர்தல் அறிக்கை தான் பத்தரை மாற்று தங்கம் என்பதைப் போல வியந்தொதுகிறார்.
“இந்த கடையில் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள் அனைத்தும் அசல் நெய்யினால் செய்யப்பட்டவையே” என்பதைப் போல இது தேர்தலுக்கான வாக்கு கேட்கும் பிரச்சாரம் அல்ல என்று நைச்சியமாக தனது முகமூடியை மறைத்துக் கொள்கிறார்.
தமிழகத்தில் உள்ள பார்ப்பனக் கும்பல் ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியின் தலைமையில் திமுகவை வீழ்த்தி விட வேண்டும்; எப்பாடுபட்டாவது பாஜக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக செய்து வந்த தகிடுதத்தங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அம்பலமாகி வந்த சூழலில் சாவித்திரி கண்ணன் போன்ற ‘நடுநிலைவாதிகள், நேர்மையானவர்கள்’ நாதகவுக்கும், தவெகவிற்கும் ஆதரவு தருவது தற்செயலானது அல்ல.
சவுக்கு சங்கர் பாணியில் திமுக அரசு செய்த ஊழல்கள்; திமுக ஆட்சியில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள்; குடும்பத்தினரின் தலையீடுகள் போன்றவற்றை அம்பலப்படுத்துவதன் மூலம் நடுநிலை என்ற பெயரை வாங்குவதற்கு துடித்துக் கொண்டிருந்த பலருக்கும் சாவித்திரி கண்ணன் போன்றவர்கள் செய்கின்ற மறைமுகமான ஐந்தாம் படை வேலை புரியாமல் இல்லை .இருந்தாலும் திமுகவின் ஆட்சியில் நடந்த பல்வேறு மோசமான செயல்களின் மீதான வெறுப்பின் காரணமாக பெரும்பான்மை மக்கள் கண்ணோட்டத்திலிருந்து சிந்திப்பதற்கு பதிலாக பாசிச பாஜகவின் ஊடக பயங்கரவாதத்திற்கு பலியாகின்றனர்.
சாவித்திரி கண்ணன் போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். அப்போதுதான் நமக்கும் பார்ப்பனியத்தின் சார்பிலிருந்து நேரடியாக தாக்குதல் தொடுப்பவர்களை விட மறைந்திருந்து தாக்குதல் தொடுப்பவர்களின் மனநிலையை புரிந்துக் கொள்ள முடியும் பார்ப்பனியத்திற்கு ஆதரவாக சேவை செய்பவர்களின் முகத்திரையை மட்டுமின்றி அகத் திரையையும் புரிந்துக் கொள்ள முடியும்.
- கணேசன்.
புதிய ஜனநாயகம் தினசரி







பார்ப்பனராயினும் ஏ எஸ் கே என அழைக்கப்பட்ட ஏ எஸ் கே ஐயங்காரிடம்
ஒரு நேர்மையைப் பார்க்க முடிந்தது. அவரது சில முற்போக்கு நூல்களும், குறிப்பாக “பகுத்தறிவுச் சிகரம் தந்தை பெரியார்” – போன்ற நூல்களும் சாதியைக் கடந்து மனிதநேயத்தை – படம் பிடித்துக் காண்பிப்பதாக அமைந்தன. சாமிநாத சர்மாவோ, ராகுல் ஜியோ –
ஏஎஸ்கே – க்கு மிகவும் மேம்பட்டவர்கள். மற்ற வகையில் சோ – குருமூர்த்தி – பாண்டே உட்பட…’இதுகள்’ உருவாக்கிய சில கழிசடைகளிடம் அவர்கள் சனாதன பர்ப்பனர்களோ அல்லது சூத்திர பஞ்சம பார்ப்பனர்களாகிப் போனவர்களோ … அவர்களிடம் ‘முற்போக்கு முக மூடி’-யை மட்டுமே காண முடியும். மற்ற வகையில் இதுகளும் சாக்கடையில் புரளும் பன்றிகள் வகையைச் சார்ந்தவைகளே!
இந்த சாவித்திரி கண்ணனின் எழுத்துக்களை தொடர்ந்து கூர்மையாக அவதானித்து வரும் அனைவராலும் இதனை உணர முடியும்! அந்த அடிப்படையில் தான் கட்டுரையாளர் தோழர் கணேசன் சாவித்திரி கண்ணனின் முகமூடியை திரைகிழித்துள்ளார். தோழருக்கு வாழ்த்துக்கள்!
நடுநிலைப் போல் நடிக்கும் அறம் சாவித்திரி கண்ணன் எந்த பக்கம் ?
பார்ப்பனர்களின் ஐந்தாம் படை சாவித்திரி கண்ணன் என்பது சரியான வார்த்தைகள் சீமான் விஜய் தேர்தல் அறிக்கை குறித்து அவருடைய கருத்து எப்படிப்பட்டது யாருக்கானது என்று வெட்ட வெளிச்சமாக அம்பலப்படுத்தி உள்ளது இந்த கட்டுரை
நடுநிலைப் போல நடிக்கும் அறம் சாவித்திரி கண்ணன் எந்த பக்கம் ?
சோ பத்திரிக்கையில் 9 ஆண்டுகள் வேலை செய்து தனது விசுவாசத்தை காட்டிய சாவித்திரி கண்ணன் நடந்து முடிந்த தேர்தலில் விஜய் மற்றும் சீமானுடைய தேர்தல் அறிக்கை என்பது தான் நினைத்தது போலவே உள்ளது என்று ஒரு மாயை ஏற்படுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளார் பார்ப்பனர்களின் ஐந்தாம் படை என்பது வெட்ட வெளிச்சமாக அம்பலப்பட்டு உள்ளது