நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு-புதுச்சேரியில் 40/40 என்ற கணக்கில் இந்தியா கூட்டணி வாரிச் சுழற்றிச் சென்று விட்டது. குறிப்பாக வீண் ஜம்பமடித்து, நெஞ்சுயர்த்திப் பேசித் திரிந்த அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க முழுமையாக மண்ணைக் கவ்விக்கொண்டது.
பா.ஜ.க தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெறும் என்ற கற்பனை உலகில் மிதந்த தமிழிசை, ஒன்றுக்கு இரண்டு மாநில ஆளுநர் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றிய அரசின் கேபினட் அமைச்சராக அமர்வதற்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு தமது தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நிருபர்கள் கேள்வி கேட்கும் போது கூட ‘சாதாரணமாகவே, ஒரு லட்சத்துக்கு மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தற்போது தம்பி (அண்ணாமலை)
என்னுடன் வேனில் ஏறி விட்டதால் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவேன்’ – என வாய்ச் சவடால் விட்டார். உடன் நின்ற
அண்ணாமலை 32 பற்களையும் காண்பித்துக் கைதட்டி ஆர்ப்பரித்தார். இறுதியில் தி.மு.க -வின் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றியை பறித்துச் சென்றுவிட்டார்.
இப்போது தமிழிசைக்கு புதிய ஞானோதயம் உருவாகி கீழ்க்கண்டவாறு பிதற்றுகிறார். அதன் சாரம் இதோ:
பா.ஜ.க -வில் சமூகவிரோதிகள், பெருங்குற்றம் புரிந்த குற்றவாளிகள்
சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது மட்டுமின்றி, அவர்களுக்கு கட்சியில் மிக முக்கிய பொறுப்புக்களும் கொடுக்கப்பட்டு கட்சியின் இமேஜை பாழ்படுத்தி விட்டார்கள். நான் தலைவராக இருந்த போது இப்படிச் சம்பவங்களை ஒருபோதும் அனுமதித்ததில்லை. மேலும், தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க -வுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது மாபெரும் தவறு. கூட்டணியை உருவாக்கி இருந்தால் பெரும்பான்மை இடங்களைப் பா.ஜ.க
கைப்பற்றியிருக்கும். இவையெல்லாம் பாரியக் குறைபாடுகள்.
தங்கச்சி தமிழிசைக்கு ஒன்றைச் சுட்டிக் காட்டுவோம்!
நிதீஷ் அணி மாறாமலும், சந்திரபாபு(நாயுடு)
தான் ஏற்கனவே மோடியிடம் பெற்ற அவமானத்தைச் சிந்தித்துப் பார்த்து
இருந்தாலும் மோடி கூட்டணியில் இடம் பெற்றிருக்க மாட்டார்கள். அது மட்டுமா? ED, IT, CBI முதலான நிறுவனங்களையும், தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை நீதித்துறையை வளைத்துப் போட்டுக் கொண்டதாலும், பல இடங்களில் EVM வாக்கு இயந்திர மோசடி, VVPATS -ஒப்புகைச் சீட்டுகளை எண்ண மறுத்த தேர்தல் ஆணையம், அதற்கு பக்கவாத்தியம் வாசித்த உச்ச நீதிமன்றம், பதிவான வாக்குகளை விட பல தொகுதிகளில் கூடுதலான வாக்குகள்கள் எண்ணப்பட்ட மோசடி, சில இடங்களில் பதிவான வாக்குகளைவிட குறைவான வாக்குகள் எண்ணப்பட்ட
மோசடி, சுமார் 150 தொகுதிகளில் 300, 500, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே NDA கூட்டணி வெற்றி பெற்றது. இப்படிப்பட்ட மோசடிகள் அனைத்தும் அரங்கேற்றப் பட்டிருந்தும் இழுபறியில் தான் சங்கிக் கூட்டம் பதவியை தக்க வைத்துக் கொண்டது. இல்லையேல் பாசிச மோடி கூட்டம் மண்ணைக் கவ்வி இருக்கும். இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கும்.
உண்மை நிலைமைகள் இவ்வாறிருக்க, தங்கச்சி தமிழிசை தில்லாலங்கடி ஆட்டம் போட்டு ஆர்ப்பரிக்கிறது! ‘அம்மா, தாயே’ கொஞ்சம் பொருத்திரு! காலம் இப்படியே நகன்று கொண்டிருக்காது! சந்திரபாபு (நாயுடு)பதவி ஏற்பு விழாவில் அமித்ஷாவிடம் கொட்டுப்பட்டு அசிங்கப்பட்டது போல, இன்னும் உங்களுக்கு என்னென்ன ‘பரிசுகள்’ காத்திருக்கிறதோ?
படிக்க:
♦ எச்சரிக்கை: அய்யா வைகுண்டர் வழியை விழுங்கும் ஆர். எஸ். எஸ். | AYYA VAIKUNDAR | ADVOCATE LAJAPATHIROY
அய்யா வைகுண்டரின் தீரமிக்க-வீரமிக்க, ‘தோல்சீலை’ப் போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாறெல்லாம் தெரிந்திருந்தால் மானமுள்ள எவரும் பா.ஜ.க -வில் உறுப்பினராகக்கூட அங்கம் வகிக்க மாட்டார்கள். ஆனால், துளியும் வெட்கமின்றி அதில் அங்கம் வகிப்பதோடு, பதவிப் பித்தும் பிடித்து ஆடுகிறது தமிழிசை! அம்மா, உங்கள் அன்புத் தந்தை பெரியவர் திரு குமரி அனந்தன் அவர்களிடமாவது வரலாற்றைக் கற்றுக்கொண்டு வெளியில் பேச வாங்கம்மா….!!
— எழில்மாறன்
சிறப்பு தோழரே,… 👍🏾👍🏾🙏🏾
சூத்திர சங்கிகள் பாவம், தமிழ்நாட்டின் மாண்பு சுயமரியாதை..
தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக தமிழ்நாட்டை நம்பி வந்த வட மாநில தொழிலாளர்களே சுயவரியாதை இல்லாமல் வாழ முடியாது என்பதை கற்றுக் கொண்டு, அதனை விட்டுக் கொடுத்து வேலை செய்ய முடியாது என்று முதலாளிகளிடம் சண்டை செய்கின்றனர்,
ஆனால் தமிழ்நாட்டின் சூத்திர சங்கீகளுக்கு இன்னும் அறிவு வரவில்லையே என்பதுதான் வியப்பு..