ஆணாதிக்க பொறுக்கிகளின் வகை மாதிரி ப்ருனோ!

Rajesh Kumar page லிருந்து…

மருத்துவர் ப்ரூனோ வழக்கு தீர்ப்பு

ப்ரூனோ ஒரு நியூரோ சர்ஜன். சமூக வலைதளத்தில் ஓரளவு பரிச்சயமானவர். அவரது மனைவி அமலி மனநல முதுகலை மருத்துவப்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் உதவிப்பேராசிரியர். 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். தற்கொலை!  வரதட்சணை (498A) மற்றும் தற்கொலைக்கு தூண்டியது (306) ஆகிய பிரிவுகளில் ப்ரூனோவும் அவரது தாயாரும் குற்றவாளிகள் என்று நிரூபணமானதை அடுத்து சிறைத் தண்டனை விதித்து சென்ற ஆண்டு மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்து இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது. நம் சமூகத்தை பற்றிய பல கேள்விகள் எழும்பி தொந்தரவு செய்யும். என்னை தொந்தரவு செய்தவை –

*தீர்ப்பில் இருப்பது – குழந்தை பிறக்க தாமதமானதை குறிப்பிட்டு இழிவான வார்த்தைகளால் வசை பாடியது, அதற்காக பல பூஜைகளில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு அங்கு கோமியம் குடிக்க வற்புறுத்தப்பட்டது. கலந்து கொள்ளாவிடில் வசை. மூன்றாம் அக்யூஸ்ட் வயதானவர் என்றாலும் முடியை பிடித்து வீட்டு வேலை செய்ய வைப்பார். இறப்புக்கு முன்பாக அமலி தனது சகோதரியை சந்தித்த போது அவரது உடலில் உள்ள காயங்களை குறித்து கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களால் ஏற்படுத்தப்பட்ட காயம் என்று சொல்லியிருக்கிறார். அந்த காயங்கள் போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டராலும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.*

முதல் அப்யூஸ் சம்பவத்தின் போது எப்படி எதிர்வினை ஆற்றப்படுகிறது என்பதில் இருக்கிறது மேற்கொண்டு தொடரும் வாழ்க்கை (இது இரு பாலருக்கும், பிசிகல் மெண்டல் என்று இரண்டு அப்யூஸுக்கும் பொருந்தும்). திருமணம் ஆனதில் இருந்து தொடர்ச்சியாக உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகியும், முதுகலை படித்து தான் தனியாக வாழ்வது என்றானால் அதற்கான நல்ல வருமானம் தரும் ஒரு பெரிய பதவியில் இருந்தவரால் அந்த சூழலில் இருந்து வெளியேற முடிந்திருக்கவில்லை. படிப்பு ஒரு பெண்ணுக்கு தைரியம் தரும் என்பதெல்லாம் சும்மா. தைரியம் தனிப்பட்ட குணாதிசயம். சின்ன வயதில் இருந்து பழக வேண்டும். சொல்லிக் கொடுக்க வேண்டும். எத்தனை காலமானாலும் உதறிட்டு வா பார்த்துக்கலாம் என்ற சப்போர்ட் சிஸ்டம் வேண்டும். பத்து பைசாவுக்கு மதிப்பில்லாத சமூக மதிப்பீடுகளுக்கு நடு விரல் காண்பிக்க ஆரம்பிப்பதில் இருக்கிறது தனி மனித மகிழ்ச்சி.

ப்ருனோ

ப்ரூனோ The Science and psychology of Paleo Diet புத்தகம் எழுதியவர். மருத்துவம், அறிவியல், உணவுப்பழக்கம் என்று தொடர்ச்சியாக ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் களமாடும் அவர், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் டைப் வாதங்கள் மிகவும் பிரசித்தம். மேலும் பெயரை வைத்து கிறிஸ்துவர் என்று நினைத்தேன். ஆனால் பூஜை, கோமியம் என்று இந்து அடிப்படைவாதியை விடவும் அதி தீவிர சடங்குகள்.

அமலி மனநல முதுகலையில் தங்கப்பதக்கம் பெற்றவர். அவரை சுற்றியிருந்த நண்பர்கள் பலர் மனநல மருத்துவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு மன நல மருத்துவரிடம் தொடர்ச்சியாக கவுன்சலிங்கு சென்றிருக்கிறார். அப்படியும் அவரது பிரச்சினைக்கு அவரால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை. எனில் இது எதுவும் கைவசப்படாத ஒரு எளிய சாமான்யனின் கதி.

இறுதியாக, உங்களுக்கு ப்ரூனோ பரிச்சயம் என்றால், இந்த பதிவை படிக்கும்போது அசூசையோ, பதட்டமோ ஏற்பட்டால் ஏன் என்று யோசியுங்கள். இதில் எதுவும் எக்ஸ்ட்ரா இல்லை. பொதுவில் கிடைக்கும், இரண்டு நீதிமன்றங்களின் தீர்ப்பில் வந்தவை தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். முதன் முதலில் இறப்பு செய்தி வந்த போது சமூக வலைத்தளம் பயங்கர அமைதி காத்தது. அமலியின் சகோதரி குற்றம் சாட்டி எழுதிய பதிவுக்கு எதிர்வினையாக ப்ரூனோவுடன் சாட் செய்தவர்கள், போனில் பேசியவர்கள், மாதம் சில மணித்துளிகள் நேரில் சந்தித்தவர்கள் என்று பலரும் ‘எனக்கு ப்ரூனோவுடன் நல்ல பழக்கம், அவர் அப்படிப்பட்டவர் எல்லாம் இல்லை என்று அவரது நான்கு சுவற்றுக்கு உள்ளே நடந்த தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சேர்த்து சர்டிபிகேட் கொடுத்தார்கள். வேறு யாருக்கோ என்றால் பொங்கிப் பிரவகிக்கும் நமக்கு ஜஸ்ட் பேஸ்புக்கில் தெரிந்த ஒருவர் பற்றிய செய்தி எனும்போது ஏன் அசவுகரியம் ஏற்படுகிறது என்று யோசித்தால் நம் அறச்சீற்றத்தின் குறைபாடு புரியும். எப்போதும் சொல்வதுதான். இந்த சமூக மாய வலையில் நாம் பார்க்கும் எல்லாருமே நமக்கு காண்பிப்பது முகமூடியைத்தான்.

2 COMMENTS

  1. “இந்த சமூக மாய வலையில் நாம் பார்க்கும் எல்லாருமே நமக்கு காண்பிப்பது முகமூடியைத்தான்.”

    இங்கு பொய்யையும்,நடிப்பையும்,புரடாக்களையும் நம்பும் மனிதர்களே அதிகம்…

  2. //தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் டைப் வாதங்கள் மிகவும் பிரசித்தம்//உண்மை Neuro surgeon என்ற பின்புலத்தில் இருந்து இவருடைய போலியோ டயட் குறித்த பதிவுகளுக்காக சில மாதங்கள் பின்தொடர்ந்தேன் ஆனால் spine குறித்த அவருடைய மருத்துவ பதிவுகளின் மூலம் படு பிற்போக்கான, மிக தட்டையான அறிவியல் புரிதலில் இருந்து பேசுகிறார் என்பதனால் அவரை Fbயில் பின்தொடருவதில் இருந்து விலகிக்கொண்டேன், இத்தனைக்கும் அவரதுfb profile spine neuro surgeon என்றும் தெரிவித்துள்ளார் என்ன கொடுமை!!
    //பூஜை, கோமியம் என்று இந்து அடிப்படைவாதியை விடவும்//அவனா நீ கோமியக்குடுக்கி?
    //இந்த சமூக மாய வலையில் நாம் பார்க்கும் எல்லாருமே நமக்கு காண்பிப்பது முகமூடியைத்தான்//சமூக வலைதளங்களில் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here