டந்த ஜனவரி 3,4 தேதிகளில் சென்னை லயோலா கல்லூரியில் வீதி விருது விழா சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான புதிய நாட்டுபுற கலைஞர்களை சந்தித்து அளவலாவிய அனுபவங்களை பதிவுசெய்ய வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் பேராசிரியர் காளீஸ்வரன் குறித்த அவதூறுகள் அடங்கிய வீடியோ கவனதிற்கு வந்து பார்க்க நேர்ந்தது. இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு செய்திதான் அது. கருப்புஆடை ஒப்பனையில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் வாகை சந்திரசேகர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நையாண்டி மேளகலைஞர் சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடுத்த பொதுநல வழக்கின் தீர்ப்புகுறித்த கருத்து என்றபெயரில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சம்மந்தம் இல்லாமல் பேராசிரியர் காளீஸ்வரன் மீது அவதூறுகளை அள்ளி வீசி எழுதி கொடுக்கப்பட்ட வசனத்தை கனகச்சிதமாக பேசியுள்ளார்.

நவம்பர் 2022ல் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு, ஜனவரி 2023 முதல் வாரத்திலேயே நீதிமன்ற தீர்ப்பை பெற்றிருக்கிறது. இதன் பின்னணியை தற்போதைய நீதிமன்ற நடைமுறை குறித்து அறிந்தவர்கள் எளிதில் புரிந்துகொள்ளவார்கள்.

வாகை சந்திரசேகர் காளீஸ்வரன் குறித்த தனது கருத்துக்கு ஆதாரமாக ஆர்எஸ்எஸ் சார்புள்ள வளப்பக்குடி வீரசேகர் மற்றும் அம்பலநாதன் ஆகியோரை காட்டுகிறார். ஆர்.எஸ்.எஸ் முகாமை சேர்ந்த மதுரை சொமசுந்தரம் வாகை சந்திரசேகரின் நெருங்கிய கூட்டாளி என்பது ஊரறிந்த இரகசியம். பேராசிரியர் காளீஸ்வரன் திராவிட முன்னேற்றகழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக சிண்டு முடித்துவிடும் வசனத்தை கலை நேர்த்தியுடன் செய்திருக்கும் வாகையாரை நாம் பாராட்டியே தீரவேண்டும்.

வாகை சந்திரசேகர்

பத்து ஆண்டுகளுக்கு முன் சிலநூறு கலைஞர்களைகொண்டு தொடங்கப்பட்ட வீதி விருது விழா ஆயிரக்கணக்கான நாட்டுபுற கலைஞர்களை கொண்ட விழாவாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. பேராசிரியர் காளீஸ்வரன் நூற்றுக்கணக்கான நாட்டுப்புற கலைஞர்களையும், கலையையும் வாழவைத்து கொண்டிருக்கிறார். இதற்கு நலிவுற்ற நிலையிலிருந்து உயர்ந்துள்ள நூற்றுக்கணக்கான நாட்டுப்புற கலைஞர்களின் குடும்பங்கள் சாட்சியாக உள்ளன. லயோலா கல்லூரி நிர்வாகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், கலைஇலக்கிய பெருமன்றம், மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ந்த தோழர்கள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் அவரது உழைப்பை அங்கீகரித்து அவருக்கு உறுதுணையாக நிற்கிறனர்.

லயோலா கல்லூரி மீதும் பேராசிரியர் காளீஸ்வரன் மீதும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்பை சார்ந்தவர்கள் தாக்குதல் தொடுத்துவருவதை ஜனநாயகசக்திகள் நன்கு அறிவார். வழக்குகளுக்கள் போட்டு மிரட்டியதற்கு காளீஸ்வரன் பணியவில்லை. இது சங்கிகளுக்கு உறுத்தலலாக உள்ளது. இப்போது வாகையாரிடம் இருக்கும் பலவீனத்தை பயன்படுத்தி சங்கிகள் வாகையாரை இயக்குகிறார்களா? இல்லை வாகையாரே கருப்பு சங்கியா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது. கருப்புஆடை ஒப்பனையில் சந்திரசேகர் நடித்திருப்பது நமது சந்தேகதத்திற்கு வலுசேர்க்கிறது.

கலைமாமணி விருதுக்கான விதிகள் குறித்தும் விதிவிலக்கு குறித்தும் வாகையார் பேசுவதுதான் நடிப்பின் உச்சகட்ட காட்சி. மாண்டலின் சீனிவாசனையும், பத்துவயதில் திறமையை வெளிப்படுத்துகின்ற பரதநாட்டிய கலைஞர்களையும், கர்நாடக சங்கீதம் பாடுபவர்களையும் விதிவிலக்கானவர்கள் என்று பரிந்து பேசுகிறார். அவரால் மனப்பாடம் செய்யமுடியாத அல்லது மறந்துபேன செய்திகளை பத்திரிக்கையாளர் சந்திப்பில் உடனிருக்கும் சங்கிகள் எடுத்துகொடுக்க பாலிமர்டிவி அழகாக காட்சிபடுத்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: லாவணிக்கலை: விவசாயிகளைப் போலவே ஜீவ மரணப் போராட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள்.

கடந்தகாலங்களில் நாடக திரைப்பட நடிகர்களுக்கும் கர்நாடக சங்கீத வித்வான்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட்டுவந்த கலைமாமணி விருது நீண்டதொரு போராட்டத்திற்கு பிறகே நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்டது. 1967-1968ஆம் ஆண்டு வசனகர்த்தா மு. கருணாநிதி கலைமாமணி விருதில் சேர்க்கப்பட்டார். 1968ல் காவடிஆட்டக் கலைஞர் எஸ். வி. சுந்தரத்திற்கு விருது வழங்கப்பட்டது.1977-1978ல் புரிசை எல்லத்தம்பிரானுக்கு கொடுக்கப்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன. இடையிடையே நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள் நிறுத்தப்படுவதும் சேர்கப்படுவதும் அங்கு நடந்துள்ள போராட்டங்களுக்கு சட்சியக்களாக விளங்குகின்றன. வாகையாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு செய்தி மூலம் ஒன்றை நாம் தெளிவாக புரிந்துகொள்ளலாம். ஏற்கனவே கொடுக்கப்பட்ட 125 விருதுகளை பறிக்க சதிநடந்து கொண்டிருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. சோமசுந்தரம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு கப்பம்கட்டி விருதுபெற்ற நாட்டுப்புற கலைஞர்களும் பதிக்கப்படகூடாது என்பதே நமது விருப்பம்.

நிறைவாக விளிம்புநிலை மக்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த சதித்திட்டத்திற்கு எதிராக எச்சரிக்கையாக நாம் செயல்படவேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு கோடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் பறிபோகாமல் பாதுகாக்கவேண்டும். கலைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பனித்துள்ள ஏழை எளிய கலைஞர்களை மதித்து போற்றி பாதுகாக்க வேண்டும்.

கலைக்காக தனது வாழ்க்கையை அற்பனித்து நலிந்த நிலையில் உள்ள முதுபெரும் நாட்டுப்புற கலைஞர்களுக்கான விருதுகளை உத்தரவாதப் படுத்தவேண்டும்.

இயல் இசை நாடக மன்ற பொருப்பிலிருந்து முனைவர் மு. ராமசாமி ஏன் விலகினார் என்பதை நேர்மையாக பரிசீலிக்க வலியுறுத்த வேண்டும். மார்கழி பஜனை கோஷ்டிகளை நாட்டுப்புற கலைஞர் என்று கணக்குகாட்டி கோள்ளையடிக்கும் பித்தலாட்டங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்.

அரசு நலத்திட்டங்களை சாதாரணமக்களிடம் கொண்டுசேர்த்துக் கொண்டிருப்பவர்கள் நாட்டுபுற கலைஞர்கள். அவர்களிடம் ஊடுருவி தமிழ்நாடு முதல்வர் பெருமைபட கூறும் “திராவிட மாடல்” அரசுக்கு எதிராக விஷமப்பிரச்சாரத்தை கொண்டுசெல்லும் நபர்கள்தான் வாகை சந்திரசேகரின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள் என்பதை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் புரிந்திருக்கிறார்களா என்பது நமக்குத்தெரியாது. இயல் இசை நாடக மன்ற பிரச்சனையில் முனைவர் காளீஸ்வரன், முனைவர் மு. ராமசாமி போன்ற நிகழ்த்துகலை அறிஞர்கள் பக்கம் நிற்பதுதான் நாட்டுப்புற கலைஞர்களையும் விளிம்புநிலை மக்களையும் பாதுகாக்கும்.

தகவல்:

தஞ்சை இராவணன்
10-01-2023.

விற்கப்படும் கலைமாமணி விருது கூடுதல் தகவல்களுக்கு:
https://m.facebook.com/story.php?story_fbid=115789107718073&id=105860698710914&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f

பேராசிரியர் காளீஸ்வரன் நேர்காணல்
https://youtu.be/dOqeW2kMWwM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here