இந்தியாவில் கொரனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சமயத்தில் மும்பை வடக்குப் பகுதியிலுள்ள மழலையர் பள்ளியில் தேர்வை முடித்து புர்ஹானுதீன் ( 7 ) பள்ளியில் இணைந்தார்.

கோடைகால விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தில் தனது ஒன்றாம் வகுப்பை தொடங்கினான். இப்பள்ளி ஐசிஎஸ்ஐ (ICSE) பாடமுறையை பின்பற்றுகிறது. எனவே உடனடியாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இவை வீடியோ கான்பரன்சில் (video conference ) நடத்தும் ஆன்லைன் வகுப்பு அல்ல, அதற்கு பதிலாக அவை பாடங்களை விளக்கும் குறுகிய வீடியோக்களாக இருந்தன. அதை குழந்தையின் தாய்மார்கள் வாட்ஸ்அப் குழுவில் இருந்து பெற்றனர். ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் அனுப்புவதை குழந்தைகள் பெற்றோர்களின் உதவியுடன் எழுதி அனுப்பினர்.

ஆனால் அந்தப் பள்ளி முறையாக ஆன்லைன் வகுப்பை டிசம்பர் மாதம் வரை தொடங்கவில்லை. எனவே “என் குழந்தையின் ஒன்றாம் வகுப்பு பாடத்திட்டத்தை கற்றுக் கொடுப்பதில் பெரிதும் கஷ்டப்பட்டேன்” என குழந்தையின் அம்மா ஜெய்னாப் கூறினார்.

மாணவர்களில்லாத வகுப்பறை

ஆசிரியர் இல்லாததால் நான் பள்ளிக்கூடத்தில் இல்லை என அவன் அடிக்கடி கூறிக் கொண்டே இருக்கிறான். மேலும் அவனை எப்படி படிக்க வைப்பது என எனக்கு தெரியவில்லை.

டிசம்பர் மாதம் இறுதியில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக தொடங்கியவுடன் ஜெய்னாப் சற்று நிம்மதி அடைந்தார். வகுப்புநேரம் அறிவிக்கப்பட்டு ஆசிரியரும் நேரடியாக உரையாடல் முறையில் வகுப்புகள் நடத்தினார்கள். ஆன்லைன் வகுப்புகள் வெறும் இரண்டு மணி நேரமே நடக்கும் அதன் பின்பு வீட்டுப்பாடம் கொடுக்கப்படும் எனக் கூறினார்.

“நான் அவனை தினமும் படிக்க சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன். அவன் அதிக நேரம் விளையாடுகிறான் மற்றும் கைபேசியில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறான்.”

ஒன்றாம் வகுப்பும், இரண்டாம் வகுப்பும் பள்ளிக் கல்வியின் மிக முக்கியமான அடித்தளம் என அவர் கருதுகிறார். “என் குழந்தை நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமென நினைக்கவில்லை அடிப்படை கல்வியை முழுமையாக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என கருதுகிறேன்” என்கிறார்.

2020-ல் ஊரடங்கு தொடங்கும் பொழுது ஜெய்னாப் முழுநேரமாக வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டார். மாமியார், கணவன் என எல்லோரையும் கவனித்தார். “என் வீட்டில் இருந்து எந்த ஆதரவும் இல்லாத சூழலில் நான் விரக்தியடைந்து மனச்சோர்வு அடைந்தேன்” “குடும்பத்தில் அம்மாக்கள் ஆசிரியர்களாகவும் இருப்பது சிரமம். என்னிடம் 30 நிமிடத்திற்கு மேல் அமர்ந்து படிக்க அவன் மறுக்கிறான்” எனக் கூறுகிறார்.

“ஏப்ரல் மாதத்தில் தேசிய வங்கியில் கால் சென்டர்( Call center ) வேலை கிடைத்தது. எனது வீட்டில் என்னை சாதாரணமாக எடுத்துக் கொண்டதால், (ஒரு பொருட்டாக மதிக்கவில்லை) எனது சுயசார்புக்காக வேலைக்குச் சென்றேன். முதல் இரண்டு மாதம் வீட்டில் இருந்தும் பின் நேரிலும் வேலைக்குச் சென்றேன். 10 மணி நேரம் வேலை, மாலை 5:30 மணி முதல் காலை 3:30 மணி வரை. வாரம் 13 மணிநேரம் நேரில் வேலைக்கு செல்வதால், எனது குழந்தையின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என தூக்க நேரத்தை குறைத்து பாடதிட்டத்தை சொல்லிக் கொடுக்கிறேன். என்னுடைய வேலையை முடித்து காலை 5 மணிக்கு வீட்டிற்கு வருவேன். என் குழந்தையின் ஆன்லைன் வகுப்பு 8 மணிக்கு தொடங்குவதால் 7:30 மணிக்கு எழுந்துவிடுவேன். 8:00 to 10:30 ஆன்லைன் வகுப்பு நடக்கும்.”

“அவன் இரண்டாம் வகுப்புக்கு சென்ற பின்கூட பாடத்திட்டத்தை எளிமையாக கற்றுக்கொள்ள முடியவில்லை. ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை வேகமாக நடத்தி முடித்து சென்று விடுகின்றனர். ஆனால் குழந்தைகள் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. பெற்றோர்களுக்கு சுமை அதிகரிக்கிறது.”

“எனது மகன் கற்றுக்கொள்வதில், வாசிப்பதில் சிறப்பாக இருக்கிறான். ஆனால் எழுதுவதில் கடுமையாக சிரமப்படுகிறான். எழுதும் வீட்டுபாடம் அதிகமாக இருப்பதால் எல்லாவற்றையும் முடிக்குமாறு நான் காட்டாயப்படுத்தமாட்டேன். தனியாக திட்டமிட்டு எழுத சொன்னாலும் அவன் கேட்பதில்லை.”

“வீட்டுக்கு அருகில் ஒரு டியூஷனில் (Tuition) அவனைச் சேர்த்து உள்ளேன். இது அவன் படிக்கும் நேரத்தை சற்று அதிகரித்துள்ளது. இருந்தாலும் இந்த ஊரடங்கானது அவனது விளையாடும் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் கைபேசியில் அவன் எந்த வீடியோ பார்க்கிறான் என என்னால் கவனிக்க முடியவில்லை.”

எனவே, ஜெய்னாப் விரைவில் பள்ளிக்கூடங்களைத் திறந்தால் மிக நல்லது என்கிறார். ஆனால், அதன் முன்பாக பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், பாதுகாப்பே முதன்மையானது என கூறிகிறார்.

ஜூலை 15-ஆம் நாள் மாகாராஷ்டிராவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நகர் பகுதியில் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு திறக்கப்பட்டது.

மாநில அரசுகள் இடைநிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் (secondary and higher secondary) திறப்பதில் முன்னுரிமை கொடுக்கின்றனர் . தொடக்க கல்வி (primary schools) வகுப்புகள் தொடங்குவதை பற்றி விவாதிக்க கூட இல்லை.

லேப்டாப், ஸ்மார்ட்போன் இல்லாத குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் “கல்வி” என்பதை பற்றி முழுமையாக மறந்து விட்டனர்.

ஆனால், நகர்ப்புறப் பகுதியில் பொருளாதாரத்தில் முன்னேறிய ஜெய்னாப் போன்ற பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பில் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையான கல்வி கிடைப்பதில்லை என கவலைப்படுகின்றனர்.

குழந்தைகளின் அடிப்படை கல்வி மிக முக்கியம். அதில் அரசு அதிக கவனம் கொடுக்க வேண்டும்.

தமிழில்: சினேகா

நன்றி : Scroll

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here