ொடியேற்று! செல்ஃபி எடு!
தேசிய உணர்வை ஊட்டும் மோடி அரசு எங்களை ஏன் 1232 கி.மீ நடக்கச் செய்தது?


வ்வொரு வீட்டிலும் கொடியேற்ற வேண்டுமாம். அதோடு செல்பி எடுத்து அனுப்ப வேண்டுமாம். அதனை மத்திய கலாசார அமைச்சகம் வெப்சைட்டில் வெளியிடுமாம். கோடிக்கணக்கானவர்கள் செல்பி அனுப்பியிருக்கிறார்கள். இப்படி செல்பி அனுப்புபவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ் தருகிறது.

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. யார் யாரிடம் கொடிகள் வாங்கலாம் என பெரிய பட்டியலைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.  சில மாநிலங்களில் கிராம பஞ்சாயத்தினர்  வீடு வீடாகப் போய் கொடிகளைத் தந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் உழைப்புத் தேவைப்பட்டிருக்கும். இதனைக் கண்காணிக்கவும், மெருகேற்றவும் ஒரு பெரிய குழு இயக்கியபடி இருக்கும்.

என் கேள்வியெல்லாம் இப்படி தேசிய உணர்வினை ஊட்டுவதற்கு சிரத்தை எடுக்கும் அரசு கொரோனா காலகட்டத்தில் ஏன் ஒளிந்து கொண்டது?

1232 கிமீ என்கிற ஒரு புத்தகம் திரைப்பட இயக்குனர் வினோத் காப்ரியால் எழுதப்பட்டது. ஆவணப்படமாகவும் வெளிவந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் ஏழு பேருடன் கொரோனா காலத்தில் அவர்கள் கிராமம் வரை பயணம் செய்து  அதனை ஆவணப்படுத்திருக்கிறார்கள். அவர்கள் நடந்து கடந்த தூரம் தான் 1232. மிகுந்த வேதனை அளித்த புத்தகம் இது. ஒரு வேளை சோற்றுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அரசால் ஏமாற்றப்பட்டதை  உடனிருந்து பார்த்து எழுதியிருக்கிறார் காப்ரி.

இதற்கெல்லாம் காரணம் தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பமும், திட்டமிடுதல் இல்லாமையும் தான். இப்போது எடுத்துள்ள முயற்சியினை அப்போது எடுத்திருந்திருக்கலாம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் முறையான தகவல்களை சேர்த்திருக்கலாம்.

ஒரு அரசினால் எதையும் தன் பலத்தினால் செய்ய முடியும். எதற்கு முன்னுரிமை தரப்படுகிறது, எது பின்தள்ளப்படுகிறது என்பதை அந்த அரசின் மனசாட்சியே முடிவு செய்கிறது…இந்த அரசின் மனசாட்சி தேசிய உணர்வினைக் கூட பகட்டாகக் காட்டிக் கொள்வதில் தான் இருக்கிறது.

Deepa Janakiraman, from Facebook

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here