10,000/-ம், 10,000/-ம் 10,000/- ம் என ஸ்டெர்லைட் கைக்கூலிகளை ஏலம் விட்ட மடத்தூர் மக்கள்


ன்று (11-07-2022) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆலையின் கைக்கூலியாய் ஸ்டெர்லைட்டைத் திறக்க மனு கொடுக்க இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் வந்ததால், பில்டப் காட்ட ஆலை தரப்பினர் ஏற்பாட்டில் பலர் கூலிக்கு மனு கொடுக்க உடன் வந்துள்ளார்கள்.
(மனு கொடுக்க வருபவர்களில் பலர் ரூ 10,000|- மாதச் சம்பளம் உழைக்காமலே பெறுகின்றனர். இன்னும் பலர் 500/- ரூபாய் கூலிக்கு வருகின்றனர்)
இவர்களை காவல்துறை கைது செய்து, பின்னர் மடத்தூரில் உள்ள அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவரம் தெரிந்து திரண்டு வந்த ஊர் மக்கள் ஸ்டெர்லைட் கைக்கூலிகளுக்கு மண்டபத்தை கொடுக்க முடியாது, உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று காவல்துறையிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரச்சனை ஏற்படுவதை அறிந்த காவல்துறை உடனடியாக போலீஸ் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டவர்களுக்கு ‘எக்ஸ்ட்ரா போனஸ்’ (கைது செய்யப்பட்டால் சிறப்பு ஊக்கத்தொகை கொடுக்கப்படும்) கொடுப்பதற்கு ஊருக்குள் நடமாடிய ஒரு சில மாதச்சம்பள கைக்கூலிகளையும் விரட்டியடித்துள்ளனர்.
(கீழே வீடியோக்கள் உள்ளது. பார்க்கவும்)
மடத்தூர் மக்களுக்கு வாழ்த்துக்களுடன்,
நன்றிகள்!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here